அருள்மிகு இராமலிங்கேசுவரர் (பாலமுருகன்) திருக்கோயில் |
எல்டம்ஸ்ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-600 018 |
+9144 24351892, 9841631262 | |
அம்மன் பர்வதவர்த்தினி, தலமரம் மகிழம். இத்திருக்கோயில் 30 ஆண்டிற்கு முன் சிவாலயமாக திகழ்ந்தது. தற்போது முருகன் கோயிலாக உள்ளது. |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
3வது தெரு, நந்தனம் தாமரை குடியிருப்பு, நந்தனம், சென்னை-600 035 |
|
|
அருள்மிகு தீர்த்தபாலீசுவரர் திருக்கோயில் |
டாக்டர்.நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,
சென்னை-5
|
+91 9445121854 | |
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வன்னி. அகத்தியர் வழிபட்டத்தலம், மாசி மகத்தில் நடைபெறும் தீர்த்தவாரி அன்று இவ்வாலய இறைவன் முதன்மையாக கடலில் தீர்த்தம்பாலிப்பார். சூரியனின் கதிர்கள் மகா சிவராத்திரி அன்று நான்காம் கால முடிவில் மூலவர் மீது விழுந்து விழுகிறது. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
சுந்தரேசுவரர் கோயில் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 |
+9144 28351928 | |
அம்மன் சொர்ணாம்பிகை. கருவறையில் சிவலிங்கம் மற்றும் வெளிபிரகாரத்தின் முதலில் மற்றொரு சிவலிங்கம் அருள்பாலிக்கின்றனர். 150 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருக்கோயில் ஒரு பங்களாவாக இருந்தது. இரண்டு அன்னையர் இத்திருக்கோயிலை உருவாக்கி முதலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். மகா மண்டபம், (கற்றளி) கொடிமரம் என கோயில் அழகுடன் திகழ்கிறது. |
அருள்மிகு அரசமரத்தை அணிந்தபிரான் |
போயஸ் கார்டன், சென்னை-600 086 |
|
இச்சிவலிங்க திருமேனி வீடுகட்ட தோண்டும் போது கிடைத்து பிளாட்பாரம் ஓரத்தில் வைத்துள்ளார்கள் பின் அரசமரம் அருகில் வளர்ந்து சிவலிங்க திருமேனியை பாதி மூடிவிட்டது. இங்கு செல்ல விரும்புவோர் அங்குள்ள காவல் துறையினரிடம் அனுமதிபெற்று செல்ல வேண்டும். |
அருள்மிகு விருப்பாட்சீசுவரர் திருக்கோயில் |
நம்பர் 1. கடைதெரு மயிலாப்பூர், சென்னை-600 004 |
+9144 24981893, 9940211117 | வானொலி நிலையம் அடுத்த ரோட்டின் கடைசியில் காரணிசுவரர் கோயில் வரும் அக்கோயிலின் எதிரில் உள்ளது. |
அம்மன் விசாலாட்சி, தலமரம் வில்வம், தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். |
அருள்மிகு மல்லீசுவரர் திருக்கோயில் |
பஜார் ரோடு சந்து, மயிலாப்பூர், சென்னை-600 004 |
+91 9840377199 | அருள்மிகு காரணீசுவரர் கோயில் அருகில் உள்ள சந்தின் கடைசியில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் மரகதாம்பாள், தலமரம் மல்லிகை. இவ்வாலய இறைவன் மீது சூரியனின் கதிர்கள் புரட்டாசி வளர்பிறை மற்றும் மாசி தேய்பிறை காலங்களில் படுகின்றன.
திருமணத்தடை நீக்கும் திருத்தலமாக திகழ்கிறது. பெரிய பாணலிங்கம். |
அருள்மிகு காரணீசுவரர் திருக்கோயில் |
பஜார் ரோடு, மயிலாப்பூர், சென்னை-600 004 |
+9144 24985112, 9444258327 | பீச்ரோடு வானொலி நிலையம் சேர்ந்த வழி கடைசியில் கோயிலில் வந்து சேரும். |
அம்மன் பொற்கொடி, தலமரம் நந்தியாவட்டை. காரணி-மேகம், இந்திரன் மேகத்தை சுவாமியின் மேல்குடையாக நிறுத்தி வழிபட்டதால் காரணீசுவரர், என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. இந்திரன் மனைவி சசி, அகத்தியர், சரஸ்வதி மயில் வடிவாகவும், புதன் ஆகியோர் வழிபட்டு உய்வு பெற்ற தலம். |
அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில் |
12, வாலீசுவரர் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 |
+91 9841277158 | அருள்மிகு காரணீசுவரர் கோயில் எதிர் தெருவின் குறுக்கு தெருவில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் பெரிய நாயகி, தலமரம் மகிழம். இங்கு பஞ்சலிங்கம் உள்ளது. இத்திருக்கோயில் இறைவர் மிகுந்த ஈர்ப்புடன் அருள்பாலிக்கின்றார். வாலி வழிபட்ட தலம், இத்திருக்கோயிலில் சித்தர் ஜீவசமாதி உள்ளது. அங்கு ஐந்து சிவலிங்க திருமேனிக்கு வழிபாடு நடைபெறுகிறது. |
அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில் |
இராயப்பேட்டை நெடுஞ்சாலை மயிலாப்பூர், சென்னை-600 004 |
+9144 24996797 | |
உள்பிரகாரத்தில் சிவலிங்கம் உள்ளது. சைவ நெறியில் சிவனடியாரான அப்பர் சுவாமிகள் இங்கு வாழ்ந்து (திருநாவுக்கரசர் வேறு) 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பிரம்மசமாதி அடைந்தார். அவருடைய சீடர் சிதம்பர சுவாமிகள் 1855 அவரது சமாதி மேல் சிவலிங்க திருமேனியை எழுந்தருள செய்து 16 கால் மண்டபம் கட்டினார். 19.06.1951 லிருந்து குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது சிவ ஆகமத்தின் முறை பின்பற்றப்பட்டு சிவாலயமாக திகழ்கிறது. இங்கு தியானமண்டபம் தனியாக உள்ளது. |
|
|