Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை அயன்புரம், பி.ஈ. கோயில் தெரு (பரசுராம ஈஸ்வரர் கோயில்), அயன்புரம், சென்னை 600023.
+91 9445261473
பெரம்பூர் பகுதிக்கு செல்லும் பிரிவில் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ளது பேருந்து தகவல்கள் செல்லப்பிள்ளை ராயர் கோயிலில் உள்ளது. கரிய மாணிக்கப் பெருமாள் என்பது கே.எம்.பி. என்று அழைக்கப்படுகிறது. பி.ஈ.கோயில் தெரு முடிவில் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் அருகருகே உள்ளன.
பிரம்மபுரி என்னும் அயன் (பிரமன்) பூஜித்த தலமாதலால் இது அயன்புரம் ஆனது. அதற்குச் சான்றாக அமைந்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். சிவனுக்கு பெருமாளுக்கும் பிரமன் இத்தலத்தில் ஏழு கோயில்கள் கட்டியதாக புராணம் கூறுகிறது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நினைத்த காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் அங்கப்பிரதக்ஷணம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். சோழர் காலத்துத் திருப்பணி. இந்தப் பகுதியில் உள்ள பரசுராமர் பூஜித்த சுயம்பு லிங்கம் அமைந்த கோயிலும் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலும் இந்தியன் வங்கி அருகில் தாக்கர் சத்திரத்தில் உள்ளது. கரியமாணிக்கப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை சூளை, வாத்தியார் கந்தன் தெரு, சூளை, சென்னை 600112.
+91 9840844828, 9381018150.
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அபிராமி திரையரங்கிலிருந்து சென்றால் பெரம்பூர் பாரக்ஸ் சந்திப்பில் உள்ள புதிய மேம்பாலத்திற்குக் கீழேயே செல்லும் போது சூளை பகுதி வரும். இங்குள்ள தபால் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. வாத்தியார் கந்தன் தெரு. சூளை மற்றும் புரசைவாக்கம் பகுதிக்கு 7-ஏ, 34, 16-ஏ, 22, 29-டி, 23-சி, 27-கே, 7-எப், 7-எச், 37-டி, 159, 59, 37, 64, 7-டி ஆகியவை செல்லும்.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மரும், சஞ்சீவி ஆஞ்சநேயரும் விளங்குகின்றனர். பெருமாள் கோயிலாக இருந்தபோதிலும் நவக்கிரக சன்னிதி உள்ளது. நித்யம் ப்ரபந்தம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது. ஸ்ரீநிவாஸப்பெருமாள் அலர்மேல்மங்கை நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு கோதண்டராமர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு கோதண்டராமர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை நந்தம்பாக்கம், பூந்தமல்லி சாலை பட் ரோடு, நந்தம்பாக்கம், சென்னை 600089.
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் பூந்தமல்லி, போரூர் செல்லும் பாதை பிரிகிறது. இந்தச் சாலையில் நந்தம்பாக்கம் உள்ளது. இந்தப் பகுதியினை பட்ரோடு எனக் கூறுவர். 54 எம்,6 எச், டி.ஈ, கே, 88-எல், 9-ஏ செல்லும். சென்னை ட்ரேட் செண்டர் மெயின் கேட்டிலிருந்து சாலை நேராகக் கோயிலுக்குச் செல்கிறது. அருகே கற்பக விநாயகர் மற்றும் பர்வதவர்த்தினி உடனுறை இராமலிங்கேஸ்வரர் கோயிலும் உள்ளன.
750 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், எண்ணற்ற சன்னிதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ராமர் கோயில்களிலேயே மிகப் பழமையானது. 69 அடி ராஜகோபுரம், நந்தவனக் கண்ணன், அனுமன் சன்னிதிகளும், யோக நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வாரும் உள்ளனர். ஹயக்ரீவர் மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை வணங்குகிறார். பிருங்கி மகிரிஷியினால் ஆராதிக்கப்பட்ட பெருமாள் இவர். அருகே உள்ள பகுதிகள் இராமபுரம், லக்ஷ்மிபுரம், சீதாபுரம் என்பவை இராமாயணப் பின்னணியோடு அமைந்த பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ராமரை ஒட்டிய மூர்த்தங்கள் அனைத்துமே பிருங்கியால் வழிபடப்பட்டவை. இதர சன்னிதிகளில் உள்ளவை பிற்காலத்தில் நிறுவப்பட்டவை. தெற்கு பார்த்த ராமர் சன்னிதி விசேஷம் சீதை ராமர் மடியில் அமர்ந்துள்ளார். இது தொண்டை மண்டலத்துத் தென் திருப்பதியாகக் கூறப்படுகிறது. வசந்த மண்டபத்தில் அணையா விளக்கும் அதைச் சுற்றி 228 விளக்குகளும் உள்ளன. ஆனந்த ஆஞ்சநேயர் 7 அடி உயரம். சித்திரையில் உடையவர் சாற்றுமுறை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கருட சேவை, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு. ஐப்பசி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை, கார்த்திகை தீபம், தனுர் மாதப்பூஜை, வைகுண்ட ஏகாதசி, போகி திருக்கல்யாணம், ரத சப்தமி, மாசி மகம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் ராமநவமி 10 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது, 26.1.2011 அன்று மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. சீதா லக்ஷ்மண, பரத சத்ருக்ண சமேத கோதண்டராமர் சீதா தேவி மடியில் அமர்ந்துள்ளார். பட்டாபிஷேக் கோலம் தெற்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு செல்லப்பிள்ளை ராயர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு செல்லப்பிள்ளை ராயர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை அயன்புரம், கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், ஒட்டேரி சென்னை 600012.
+91 9840279177
சென்னை ஐ.சி.எஃப். பிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலைக்கு வரலாம். அண்ணாநகரிலிருந்து வருபவர்கள் வலப்புறம் திரும்பி அயன்புரத்திற்கு பரசுராமர் கோயில் வழியாக கொன்னூர் நெடுஞ்சாலையை அடையலாம். புரசைவாக்கம் பழைய உமா தியேட்டர் (கெல்லீஸ்) வழியாக வந்தாலும் அயன்புரம் வந்தடையலாம். இங்கு பிரதானப் பகுதியில் உள்ள கோயில். பேருந்துகள் 20, 48, 22, 47, 46, 46-ஏ, 23-சி, 29-ஈ செல்லும். ஒட்டேரி பகுதியில் உள்ளது. பொடிக்கடை பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் உள்ளது.
மைசூர் அருகே உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது போலவே பீபிநாச்சாரியார் பெருமாளின் திருவடியருகே சேவை சாதிக்கிறார். அங்கு நடைபெறுவது போலவே பங்குனியில் வைரமுடி சேவை நடைபெறுகிறது. சென்னை அயன்புரத்தில் பரசுராமர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கமாகக் கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலக்ஷ்மியினைத் தன் பாதத்தில் பதித்துக்கொண்டுள்ள பெருமாள். செல்வப்பெருமாளே செல்லப்பெருமாள் ஆனார். சூதர் மகரிஷிக்கு ஷுகர் கூறியபடி கலியுகத்தில் திருமணம் தடைபட்டவர்களுக்கு தாயாரும் பெருமாளும் ஒருங்கினைந்த கோலமே இந்தச் செல்லப் பெருமாள் ராயர். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வைக்கும் கோலமும் இதுவே. நாக, கால சர்ப்ப, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் வெள்ளிக்கிழமை இங்கு வழிபட நீங்கும். தேவ சிற்பி விஸ்கர்மா கூறியபடி இவ்வடிவத்தை வணங்கினால் செலவம் பெருகும். மேல்கோட்டையில் உடையவர் கட்டிய கோயிலில் உள்ள சிலை பூமியில் கிடைத்தாகும். இச்சிலை திரேதாயுகத்தில் ராமராலும் பின் அவரது ஒன்று விட்ட சகோதரியாலும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனாலும் பூஜிக்கப்பட்ட சிலையாகும். யாதவ குல அழிவில் பூமியில் புதைந்த இந்தச் சிலை இராமனுஜரால் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல ஒட்டேரியில் உள்ள பெருமாளும் அதே அமைப்பில் விளங்குகிறார். சென்னையிலேயே மகாலட்சுமிக்குத் தனி சன்னிதி உள்ள கோயிலிது. 27 அடி ஆஞ்சநேயரும் 2001ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அஷ்டாக்ஷர மந்திரம் போல் எண்கோண வடிவில் மேல்கோட்டை போன்று அமைந்துள்ள கோயில். அதே போல் தாக்கர் சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1804ல் குஜராத்தி பெண்டிரின் கனவில் சிவன் தோன்றி ஆணையிட காசியிலிருந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. இவ்வாறு இங்குள்ள கோயில்கள் தொன்மை நிறைந்தது. பிரமன் இந்தப் பரசுராமர் கோயில் குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதாக வரலாறு. செல்லப்பிள்ளை ராயர் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, காலை 11.30 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. (சனிக்கிழமைகளில்)
அருள்மிகு பிரசன்ன நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பிரசன்ன நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில், பொன்னியம்மன் மேடு, மூலக்கடை, சென்னை 600011.
+91 44-65904840, 9884269097.
சென்னை பெரம்பூரை அடுத்து மாதவரம் செல்லும் பாதையில் அமைந்த பகுதி மூலக்கடையாகும். மூலக்கடையிலிருந்து 1கிமீ கனகம்மா சத்திரம் பகுதியில் பொன்னியம்மன் மேடு உள்ளது.
முன்பு ஒரு சமயம் வாழ்ந்த வயோதிகர் ஒருவர் தனது நோயின் கொடுமையால் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட போது அவரைத் தடுத்து குழந்தை போல் தாங்கிக் காப்பாற்றியவர் இந்தத் தலத்துப் பெருமாள் பிரசன்ன லக்ஷ்மி நரசிம்மராவார். இந்தக் கிணற்றின் மேலேயே இந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. 125 ஆண்டுகளுக்கு முன் கணபதி நாயக்கர் மற்றும் நவநீதம்மாள் கனவில் தோன்றி கோயில் அமைக்கப் பணித்ததாக வரலாறு. கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு ரங்கநாதசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ரங்கநாதசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை யானை கவுனி, முல்லா தெரு, யானை கவுனி, சென்னை 600001.
+91 44-25290387, 9962164714.
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இடப்புறம் செல்லும் சாலை வால் டாக்ஸ் சாலை. இந்த சாலையில் யானை கவுனி சந்திப்பு வருகிறது. இந்தச் சந்திப்புக்கு சென்னை சூளையிலிருந்து வரும் பேருந்துகளும் வரும். இந்தப் பகுதியில் உள்ள அண்ணாப்பிள்ளைத் தெருவில் இடப்புறம் சாலையில் உள்ள முல்லாத் தெருவில் கோயில். 28, 159, 44, 37, 59, 56-ஏ, 57 மற்றும் மிண்ட் செல்லும் பேருந்துகளும் செல்லும். பைராகி மடம் கோவிலிலிருந்து வடக்கே செல்லும் சாலை நேராக யானை கவுனி செல்லும்.
சென்னையில் உள்ள பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயிலிது. ஸ்ரீரங்கம், அயோத்தி, காஞ்சி, அஹோபிலம், திருமலையாகிய திவ்ய தேசத்துப் பெருமாள் அனைவரையும் ஒரே கோயிலில் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எல்லாப் பெருமாள் நட்சத்திர தினங்களான ரேவதி, ரோகிணி, புனர்வக, சுவாதி, ஹஸ்தம் மற்றும் மூலம் (ஆஞ்சநேயர்), பூரம் (ஆண்டாள்) திருமஞ்சனங்களும், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பும் விசேஷமாக நடைபெறுகிறது. பொதுவாக நதிகள், கடல்கள் ஆகியவற்றின் கரையோரத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் ஆதி பெருமாளாகக் கொள்ளப்படுவதால் வங்கக் கடலின் சமீபம் உள்ள சென்னைக்கு இவரே ஆதி பெருமாள் என்கிற கருத்தும் உள்ளது. ரங்கநாதசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சயன திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் மற்றும் தருமராஜர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் மற்றும் தருமராஜர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை யானை கவுனி, 19 முருகப்பன் தெரு, யானை கவுனி, சென்னை 600079.
+91 9940405477.
சென்னை சென்ட்ரலிலிருந்து வால்டாக்ஸ் சாலையில் வரும் போது யானை கவுனி சந்திப்பு உள்ளது. இங்கே காவல் நிலையத்திற்கு எதிரே செல்லும் கூட்ரோடில் ஓர் பேக்கரி உள்ளது. அதனைத் தாண்டியதும் உள்ள முருகப்பன் தெருவில் 2வது கட்டிடம். யானை கவுனி சிக்னலிலிருந்தே மூலவர் விமானம் கண்ணில் தெரியும். 100 ஆண்டுகளைத் கடந்த கோயில். சிவன் கோயிலும் உள்ளே இடப்புறம் உள்ளது. அதற்கு தருமராஜர் கோயில் எனப் பெயர். சிவன் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி மகாபெரியவரால் ஸ்ரீசக்கரத்தின் மீது பிரதிஷ்டை செய்ய அமைந்துள்ளார். 25-6-1973ல் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. ஜீன் 2009ல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. வைகுண்டப்பெருமாள் நாகதோஷங்களை நீக்கக் கூடியவர். வேண்டுவன தரக்கூடியவர். பரம்பரையாக பட்டர் குடும்பத்தினரால் திருவாராதனை செய்யப்பட்டு வரும் இக்கோயிலில் வைகானஸ ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. சிறப்பான சாந்நித்தயத்துடன் திகழும் இக்கோயிலுக்கு சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற சேவார்த்திகள் பெருமளவில் உதவி புரிந்து விரைவில் நடத்தித்தர வேண்டும் என்று விண்ணப்பம். மேலும் யானை கவுனி காவல் நிலையத்துப் பக்கம் ஓர் நூழைவாயில் உள்ளது. அதை பெரிய நுழைவு வாயிலாக மாற்றியமைத்தால் எண்ணற்றோருக்கு இக்கோயில் இருப்பது தெரிந்து வழிபட ஏதுவாக இருக்கும் இதற்கும் போஷகர்கள் தேவை.
ஸ்ரீதேவி பூமி தேவியுடன் வைகுண்டவாசப் பெருமாள் விளங்கும் கோயிலில், சீதா லக்ஷ்மண சமேத ராமரும், பக்த ஆஞ்சநேயரும் திகழ்கின்றனர். வேண்டிய பிரார்த்தனை நிறைவேறியதும் திருக்கல்யாணம் செய்வது ஐதீகமாக உள்ளது.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு சுமைதாங்கி ராமர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுமைதாங்கி ராமர் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை மிண்ட், தங்கசாலை, சென்னை 600079
சென்னை சென்ட்ரலிலிருந்து வால்டாக்ஸ் சாலையில் வரும்போது யானை கவுனி சந்திப்பிலிருந்து வலப்புறம் செல்லும் சாலை மிண்ட் ஸ்ட்ரீட்டுக்குச் செல்லும் அதே சாலையை பூக்கடை காவல் நிலையத்திலிருந்து வரும் போதும் வந்தடையலாம். இந்தப் பகுதி சவுகார் பேட்டையாகும். இந்த மிகப் பெரியத்தெரு நேராக தங்கசாலை வரைச் செல்லும் அங்கே மையப்பகுதியில் உள்ள கோயில். திருவேற்காடிலிருந்து வரும் 59,159, கோயம்பேட்டிலிருந்து வரும் 159-ஏ, 159-பி ஆகியவை செல்லும்.
அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகள் புத்ராசல ராமதாஸரின் சீடராகத் திகழ்ந்த நரசிம்ம தாஸரிடம் தீக்ஷை பெற்றவர். முற்காலத்தில் நாம சங்கீர்த்தன பஜனை மடமாகத் திகழ்ந்த இந்தப்பகுதயில் இராமரின் ஓவியம் கொண்டு பஜனை நிகழ்த்தப்பட்டது. இவர் பெயரிலேயே மடமாகவும் விளங்கியது. ஆங்கிலேயேர் காலத்தில் வாணிபத்திற்காக எடுத்துச் செல்லும் பொருட்கள் இங்குள்ள சுமை தாங்கியில் வைக்கப்பட்டு நீராகாரம் மற்றும் பானக கைங்கர்யங்கள் செய்யப்பட்டது. அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமனாதலால் இப்பெயர். ராம நவமியன்று ராம லக்ஷ்மணர் தொட்டிலில் இடப்பட்டு சங்கினால் பாலமது செய்விப்பது இன்றும் நடக்கிறது.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 600021.
சென்னை சென்ட்ரலிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையிலிருந்து தங்கசாலைக்குப் பிரியும் சாலையில் உள்ள மணிக்கூண்டில் இடப்புறம் செல்லும் பாலத்தில் ஏறி வலப்புறம் திரும்பினால் செல்வது திருவொற்றியூர் நெடுஞ்சாலையாகும். அந்த சாலையில் மகாராணி திரையரங்கத்திற்கு அருகே கோயில். திருவொற்றியூர் செல்லும் பேருந்துகள் செல்லும். 6-எ, 6-டி, 6-உ, 56-ஏ, 38 மற்றும் 54 எண் பேருந்துகள் செல்லும்.
தொன்மை வாய்ந்த தலம். புரட்டாசி விசேஷ உற்சவம் நடைபெற்று திருக்கல்யாணமும் கடைசி வாரம் நடைபெறுகிறது. பங்குனியில் பிரம்மோற்சவம். ஆவணியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பக்தவத்ஸலப் பெருமாள் வத்ஸவல்லி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை (சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம்)
அருள்மிகு ஸ்ரீநிவாஸ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாஸ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், தண்டையார் பேட்டை, சென்னை 600021.
சென்னை தங்கசாலை மணிக்கூண்டிலிருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையில் அகஸ்தியா திரையரங்கத்திற்கு அருகில் உள்ள கோயில். திருவொற்றியூர் மற்றும் சுங்கச்சாவடிப் பேருந்துகள் செல்லும். 59, 159-ஏ, 159-பி, மற்றும் திருவொற்றியூர் பேருந்துகள் செல்லும்.
வாத்சல்ய பாவத்துடன் வரதனாய் அருள் பாலிக்கும் இப்பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். நவராத்திரியில் தாயாருக்கு உற்சவமும், புரட்டாசி புஷ்ப அலங்காரம், வெண்ணெய் மற்றும் சந்தனக் காப்பு, ஸ்ரீராம நவமி உற்சவம் மற்றும் ஆஞ்சநேயருக்கு உற்சவங்களும் சிறப்பாக நடைபெறும் தொன்மையான தலம். ஸ்ரீநிவாஸ வரதராஜப்பெருமாள் ஸ்ரீபெருந்தேவி, ஸ்ரீதேவி, பூதேவி, நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை (சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம்.)
<< Previous  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar