அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் |
எண்.1, ரெட்ஹில்ஸ் ரோடு, சாமியார் தோட்டம், வில்லிவாக்கம், சென்னை - 600 049. |
+91 9790712553 | பாலியம்மன் கோயில் என கேட்டு சென்று அதன் அருகில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் பார்வதி. இத்திருத்தல இறைவன் நர்மதை ஆற்று சிவலிங்க திருமேனியாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு முத்துலிங்கேசுவரர் திருக்கோயில் |
ஸ்டேசன் ரோடு, வெங்கட்ராமன் நகர், கொரட்டூர், சென்னை- 80 |
+91 9840946486 , 9841452127 | ஸ்டேசன் ரோடு ஹவுசிங் போர்டு என கேட்டு அதன் அருகே இத்திருக்கோயில் உள்ளது. |
அம்மன் பார்வதி. |
அருள்மிகு ஏகாந்தலிங்கேசுவரர் திருக்கோயில் |
அக்ரஹாரம், கொரட்டூர், சென்னை- 76 |
+91 9283265205, 9840790462 | கொரட்டூர் ரயில்வே ஸ்டேசனிலிருந்து 1 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது. கொரட்டூர் பஸ் நிறுத்தத்திலிருந்து சியாத்தம்மன் கோயில், ஏரி என கேட்டு செல்ல வேண்டும். |
அம்மன் எழிலாம்பிகை. |
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் |
ஈஸ்வரன் கோயில் தெரு, அயன்புரம், சென்னை- 600 023 |
+91 9840469209 | மெயின்ரோடிலிருந்து பிரியும் ஈசுவரன் ணடகயில் தெரு வழியே சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் விசாலாட்சி, தலமரம் வில்வம், தீர்த்தம் கங்கை தீர்த்தம். 1807 இராம்கோர்பாய், ரத்னாபாய் என்னும் இரு அன்னையர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. சர்வ பரிகார தலம். |
அருள்மிகு அம்பலவாணேசுவரர் திருக்கோயில் |
காமராஜபுரம், அம்பத்தூர், சென்னை- 53 |
+91 9176074964 | |
அம்மன் சிவகாமி, தலமரம் வில்வம், 1500 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருக்கோயிலில் பல்லவர் கால கல்வெட்டும் கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. நந்தியம்பெருமான், பிரம்மா ஆகிய மூர்த்தங்கள் மிக பழமையாக உள்ளன. |
அருள்மிகு விருபாகேசுவரர் திருக்கோயில் |
அன்புநாயகம் தெரு, விஜயலட்சுமிபுரம். அம்பத்தூர், சென்னை- 53 |
+9144 26574935 , 9444419233 | வடக்கு பூங்கா தெரு வழியாக அண்ணா சாலை அடைந்து அதன் வழியில் அலகாபாத் வங்கி எதிர்ரோடில் அன்புநாயகன் தெரு வழி செல்ல இத்திருக்கோயிலை அடையலாம். |
அம்மன் விஜயாம்பிகை. |
அருள்மிகு பரசுராமலிங்கேசுவரர் திருக்கோயில் |
பரசுராமலிங்கேசுவரர் கோயில் தெரு, அயன்புரம், சென்னை- 23 |
+9144 26283595 | |
அம்மன் பர்வதாம்பிகை, தலமரம் வில்வம், தீர்த்தம் அன்னபூரணி குளம், பிரம்ம தீர்த்தம். பட்டீசுவரர் ஆலயம் சண்டேசுவரர் அருகில் உள்ளது. இத்திருத்தல இறைவன் சதுர ஆவுடையாருடன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மன் பூஜித்த திருத்தலம். திருக்கோயில் கஜபிருஷ்ட விமானம் (தூங்கானைமாடம்) அமைப்புடன் திகழ்கிறது. தீண்டாத்திருமேனி. 8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்டுள்ளதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. |
அருள்மிகு சபாபதி லிங்கேசுவரர் திருக்கோயில் |
5, ரெட் ஹில்ஸ்ரோடு, வில்லிவாக்கம், சென்னை- 49 |
+91 9840366430, 9094146089 | பாலியம்மன் கோயில் என கேட்டு சென்று அதன் அருகில் இக்கோயில் உள்ளது. |
550 ஆண்டிற்கு முன் ஸ்ரீசபாபதி ஸ்வாமிகள் இந்த இடத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார் அவர் சமாதி மேல் லிங்கேசுவரரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரது சீடரான ராமலிங்க ஸ்வாமிகள் (மதுராந்தகம்) முருகம்பாக்கம் கிராமத்தில் ஜீவசமாதி உள்ளது. இவரது சீடர்களில் ஒருவரான ஸ்ரீலஸ்ரீ அனந்த ஆனந்தா சுவாமிகள் 1983ல் இத்திருக்கோயில் பின்புறம் ஜீவசமாதி அடைந்தார். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கைலாச நாதர் கோயில் தெரு, பாடி, சென்னை- 50 |
+9144 26540706 | திருவலிதாயநாதர் கோயில் வடக்கு மாட வீதி வழி சென்று இத்திருத்தலத்தை அடையலாம். |
அம்மன் காமாட்சி, தலமரம் வில்வம். சூரியன் கதிர்கள் மகாசிவராத்திரிக்கு மறுநாள் காலை சுவாமி மீது படுகிறது. கடன் தொல்லை தீர இக்கோயில் இறைவனை வழிபட நன்மை நிகழும். பிறவி நோயும் தீரும். |
அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் |
ஜம்புகேசுவரர் நகர், கொரட்டூர், சென்னை- 80 |
+91 98411 24828 | சாவடி தெரு வழியே சிறிது தொலைவு சென்று 1/2 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது. |
அம்மன் அகிலாண்டேஸ்வரி, தலமரம் வில்வம் . காக புஜண்டர் வழிபட்ட இத்திருத்தலம் அமைதியுடன் திகழ்கின்றது. இத்திருக்கோயில் அமைப்பு கஜபிருஷ்ட விமானம் (தூங்கும் ஆனை மாடக்கோயில்). |
|
|