அருள்மிகு சிவ விஷ்ணு திருக்கோயில் |
முடிச்சூர், சென்னை-600 045. |
+9144 22761979, 9444173541 | |
அம்மன் வித்யாம்பிகை. |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
பழைய பெருங்களத்தூர், சென்னை-600 063. |
+91 9382829773, 9789013108 | முடிச்சூர் ரோடு வழி பத்மாவதி திருமண மண்டபம் சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வன்னி. |
அருள்மிகு ஆதிகாரணீசுவரர் திருக்கோயில் |
அம்மன்கோயில் தெரு, சீனிவாசன் நகர், பீர்க்கன்கரனை, சென்னை-600 063 |
+91 9840034105, 9843606277 | பெருங்களத்தூர் ரயில்வே கேட் தாண்டி 1 கி.மீ செல்ல இக்கோயிலை அடையலாம். |
அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் வேம்பு, தீர்த்த குளம் காரணீசுவர தீர்த்தம். |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
நெடுங்குன்றம், சென்னை-600 048. |
+91 9381051301, 9789955501 | பெருங்களத்தூர் இரயில் நிலையம் எதிர்ரோடு வழி 2 கி.மீ இக்கோயில் உள்ளது. |
அம்மன் திரிபுரந்தரி, தலமரம் வில்வம், தீர்த்த குளம் பிரம்ம தீர்த்தம், அகத்தியர் பிரதிஷ்டை செய்த உயர்ந்த பாணலிங்கம். தீராத நோயை தீர்க்க வல்லான். இத்திருக்கோயில் மகா சிவராத்திரி நான்காம் கால வழிபாடு முடிவில் சூரியனின் கதிர்கள் இறைவனை வணங்கி செல்கிறது. |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
கொளப்பாக்கம், சென்னை-600 048 |
+91 8754786848, 9444523911 | வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் கொளப்பாக்கம் வந்து இடதுபுறம் திரும்பி 1/2 கி.மீ செல்ல இத்திருக்கோயிலை அடையலாம். |
அம்மன் பெரியநாயகி, தலமரம் கல்லாலமரம், தீர்த்த குளம் சூரிய தீர்த்தம், 2000 ஆண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் (கஜபிருஷ்ட தூங்கானை மடம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸர்பசித்தர் அடக்கம், இறைவர் உயர்ந்த பாணம். இத்திருக்கோயில் மூலவரை இரும்பு கதவின் இடைவெளி வழியாக எப்போதும் காணலாம். |
அருள்மிகு வெங்கீசுசுவரர் திருக்கோயில் |
வெங்கம்பாக்கம், சென்னை-600 048 |
+9144 22290860, 9283195665 | வண்டலூரிலிருந்து கொளப்பாக்கம் அடுத்து வெங்கம்பாக்கம் பஸ்நிறுத்தம் வந்து இடதுபுறம் பிரியும் வழியில் 2 கி.மீ இக்கோயில் உள்ளது. அல்லது தாம்பரம் கேம்ப், மப்பேடுலிருந்து 2.5 கி.மீ.இக்கோயில் உள்ளது. |
|
அருள்மிகு தியாகேசுவரர் திருக்கோயில் |
நல்லம்பாக்கம், சென்னை-600 048. |
+91 9444813068 | |
மலைமீது ஜலகண்டேசுவரர் பார்த்தபின் நல்லம்பாக்கம் ஊருக்குள் சென்று தில்லை காளி டிபார்ட் மெண்டல் ஸ்டோர் பக்கத்து சந்தில் செல்ல சிவலிங்க திருமேனி மேற் கூரையின் கீழே காணலாம். |
அருள்மிகு சோமநாத ஈசுவரர் திருக்கோயில் |
மேல்கோட்டையூர் , சென்னை-600 048 |
+91 9840155627, 9500022212 | வண்டலூர்- கேளம்பாக்க ரோட்டில் கோயில் உள்ளது. |
அம்மன் மேகாம்பிகா, தலமரம் வில்வம். |
அருள்மிகு விருத்திகேசுவரர் திருக்கோயில் |
ஊனைமாஞ்சேரி, சென்னை-600 048 |
+91 9841287775, 9380207916 | வண்டலுரிலிருந்து வரும் போது கொளப்பாக்கத்திலிருந்து வலதுபுறம் 1.5 கி.மீ இத்திருக்கோயில் உள்ளது. |
அம்மன் விருத்தாம்பிகை, தலமரம் வில்வம். உய்யஞ்சேரி என அழைக்கப்பட்ட இவ்வூரில் இறைவன் உயர்ந்த பாணலிங்கமாக காட்சி தருகிறார். |
அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |
நல்லம்பாக்கம், சென்னை-600 048 |
+91 9444813068 | கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் கண்டிகையிலிருந்து கீரப்பாக்கம் செல்லும் வழியில் 2 கி.மீ. ல் கோயில் உள்ளது. |
மலையின் மேல் உயர்ந்த சிவலிங்க திருமேனி, நந்தியம் பெருமானுடன் அருள்பாலிக்கிறார். மலைமேல் வழிபட செல்லுவோர் மிகவும் கவனமாக செல்லவேண்டும். கருங்கல் ஜல்லிக்காக மலையை குடைந்து எடுத்து சுவாமியை வலம் வரமுடியாத அளவிற்கு பள்ளப்படுத்தியுள்ளார்கள். இறை நம்பிக்கையும், சமயபற்றும் நம்மிடையே எவ்வளவு உள்ளது என்பதை இது உணர்த்துகிறது. உண்மையான பக்தன் இறைவனுக்காக தன்னை இழப்பான். |
|
|