அருள்மிகு விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,
ஈச்சனாரி,
கோவை. |
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியிலுள்ளது ஈச்சனாரி. |
இங்குள்ள விநாயகருக்கு அசுவினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திர நாளிலும், அந்த நட்சத்திரத்துக்குரிய விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த விநாயகரைத் தரிசித்தால் முன்னேற்றம் உண்டாகும். ஜாதக ரீதியாக கேது திசை, புக்தி நடப்பில் உள்ளவர்கள் வழிபட்டால் நன்மை பெருகும். |
அருள்மிகு வாதப்பிள்ளையார் திருக்கோயில் |
அருள்மிகு வாதப்பிள்ளையார் திருக்கோயில்,
கோவில் பாளையம், கோவை.
|
கோவையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் கோவில் பாளையத்தில் அமைந்துள்ளது வாதப்பிள்ளையார் கோயில். |
சித்தர் வடிவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளிய பிள்ளையார் வாதம், கால் எரிச்சல், நரம்பு பலவீனம் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து பொதுமக்களைக் காத்தருளிகிறார். பெரும்பாலும் இவரை வழிபட்டு வாத நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைந்ததால் வாதப்பிள்ளையார் என்றே இவர் அழைக்கப்படுகிறார். வாதப்பிள்ளையாருக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சாத்திவிட்டு திருநீறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை இடுகிறார்கள். அதேபோல் அவர் அருகிலிருக்கும் நாகருக்கும் மஞ்சள், குங்குமம் வைக்கிறார்கள். சாமிக்கு அருகில் இரு சூலாயுதம் உள்ளது. நோய் பாதித்தவர்கள் ஓர் அளவான நூல் கண்டில் உள்ள நூலினை முன்புறம் உள்ள சூலாயுதத்தில் சுற்றி, சாமியை வலம் வந்து பின்புறம் உள்ள சூலாயுதத்துடன் சேர்த்து நூல்கண்டு தீரும் வரை சுற்றுகிறார்கள். அதன்பின் சாமியின் தலைப்பகுதியிலிருந்து நல்லெண்ணெயை வழித்தெடுத்து, வாதப்பிள்ளையாரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, நோய் பாதித்த பகுதியில் தடவுகிறார்கள். பவுர்ணமி பூஜை நடைபெறும் சமயம் தவறாமல் மயில் ஒன்று இங்கு வருகின்றன. தம்பி முருகன் தனது வாகனமான மயிலுடன் அண்ணன் கோயிலிற்கு வந்து, பவுர்ணமி பூஜையில் கலந்துகொள்வதாக பக்தர்கள் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். |
|
|