அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
எரியோடு, திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு மகேஸ்வர பூஜை தர்மம்(இ) தண்டாயுதபாணி திருக்கோயில் |
பழநி, திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு யாதவர் என்ற இடையர் இனம் மாதாந்திர கிருத்திகை கட்டளை (இ) தண்டாயுதபாணி சாமி திருக்கோயில் |
பழநி, திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
கலப்பைக்கோன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயில் |
கொடைக்கானல் - 624 101. திண்டுக்கல் மாவட்டம் |
பழனியிலிருந்து : 65 கி.மீ. |
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
சிறப்பு : மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் முருகக்கடவுள். ஆங்கிலேய அம்மையாரால் 1936 ல் கட்டப்பட்ட இத்திருக்கோயிலின் குன்றில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியதால் குறிஞ்சி ஆண்டவர் என்ற பெயரை கொண்டு பக்தயோடு வழங்கலாயிற்று.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தலத்தில் மலரும் குறிஞ்சிமலர்கள் உலக பிரசித்தி பெற்றது. |
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்,
ஜோதிமலை,
தாண்டிக்குடி,
வழி வத்தலக்குண்டு,
நிலக்கோட்டை வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்,
624216. |
+91 4542-266378, 9994087930, 9994087930 | திண்டுக்கல் பெரியகுளம் வழித்தடத்தில் உள்ள வத்தலக்குண்டுவிலிருந்து 45கிமீ தொலைவு. வத்தலகுண்டுவிலிருந்து பேருந்துகள் அரை மணி நேரத்திற்கு ஒன்று உண்டு. இரண்டு பாதைகளில் ஒன்று பட்டிவீரன்பட்டி மார்க்கமாகவும் மற்றொன்று பண்ணைக்காடு கிராமமர் மார்க்கமாகவும் செல்லும். 2வது கொடைக்கானல் சுற்றுலா மையம் செல்லும் பாதை. |
கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. ஆதிவாசிகள் வாழ்ந்த கல் வீடுகள் அமைந்த 2000 ஆண்டுகள் பழமை மிக்க தலம். பழமுதிர் சோலையில் பேரானந்தம் பெற்று அறுபடைவீடு கண்ட முருகர் இத்தலத்தில் தங்கி அகத்தியருக்கு கயிலாயம் சென்ற போது சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை பரிசாகத் தந்தார். அகத்தியர் சீடன் இவைகளைச் சுமந்து பழனி அடைந்த போது முருகன் அதில் ஒன்று தனக்கு உறைவிடமாகக் கொள்ள எண்ணி இவ்வூரில் இருந்து தாண்டிக் குதத்து அமர்ந்ததால் தாண்டிப்பிடி ஆனது. 19வது சித்தர் பன்றிமலை சுவாமிகள் மீண்டும் இம்மலைக்கே முருகனை வரவழைத்ததாக வரலாறு. காரணம் 1948ல் பழனியிலிருந்து இங்கு அவர் வந்து ஓரிடத்தில் தெய்வ ஒளி பிரகாசிக்கிறது என்று உணர்ந்து இறைவனை இங்கு மீண்டும் கொணர்ந்தார். ஜோதி வடிவில் முருகனின் பாதமும் அருகே மயில் பாம்பைக் கவ்விக் கொண்டு உள்ள தோற்றமும் அவர் கூறிய இடத்தில் தெரிந்ததால் ஜோதிமலை ஆனது. இன்றும் இந்த அமைப்புக்களைக் காணலாம். பாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் 2 கரங்களில் காட்சியளிக்கிறார். பன்றிமலைச் சுவாமிகளால் வழிபடப்பட்ட முகர். குழந்தை வேலப்பன் கோயிலில் முருகனுக்கு சாக்லேட் மற்றும் இதர இனிப்பு வகைகள் நைவேத்தியமாக தரப்படுகிறது. பக்தன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் கிட்ட அவர் இனிப்பினை தன் நண்பர்கள் உறவினருக்குக் கொடுத்தார். முருகன் அவர் கனவில் தோன்றி தனக்கு ஏன் தரவில்லை எனக் கேட்டதாக வரலாறு. இதனால் மிட்டாய் முருகன் என்கிற பெயரும் உண்டு. |
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திண்டுக்கல் வட்டம்,
மற்றும் மாவட்டம் 624301. |
+91 451-2452477, 9443226861 | மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்த தலம். |
இத்தலத்தில் முருகன் 4 முகங்களுடன் 12 கரங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். பிரமன் பிரணவப் பொருள் சொல்லத் தெரியாமல் தத்தளித்த போது சாஸ்தா வடிவம் கொண்ட நான்முக முருக வடிவம் என்று கூறப்படுகிறது. பழனி மலையிலிருந்து வரும் சேவல் வடிவ ஜோதி இங்கிருந்து காணப்பட்டதாக வரலாறு. படைப்புத் தொழில் மேற்கொண்டதால் வீரபாகு சதுர்முகர், வீரமகேந்திரம் துவாரபாலகராக உள்ள தலம். விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற பராசக்தியினை நோக்கி தவமிருந்த தலம். பராசக்தியின் பொட்டிலிருந்து முருகன் வெளிப்பட்டதாக ஐதீகம். செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலம். (செவ்வாயன்று செம்பால் (பால் மற்றும் குங்குமம் கலந்து அபிஷேகம் நடைபெறும்.) |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை |
அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயில் |
அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோயில்,
கொடைக்கானல் 624101,
திண்டுக்கல் மாவட்டம். |
+91 9994087930 | கொடைக்கானல் ஒரு நாள் சுற்றுலாவில் யாத்ரிகர்கள் தரிசிக்கும் தலமிது. லேக் பகுதியிலிருந்து 3 கிமீ. கொடைக்கானல் செல்வோர் பூம்பாறையிலுள்ள போக சித்தர் வடித்த தண்டாயுதபாணிக் கோயிலை தரிசிக்கலாம். |
இத்தலத்தில் முருகன் இரு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். பழனி மற்றும் வைகை அணையினை இந்த மலை உச்சியிலிருந்து காணலாம். குறிஞ்சி நிலத்து தெய்வமாக உள்ளவர் முருகன். இந்த கோயிலில் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது. 2016ல் இது மீண்டும் பூக்கும். |
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை. |
|
|