அருள்மிகு அனந்தீசரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
லிங்கப்பையர் வீதியில் தெற்கு பக்கமாக மிகச் சிறிய கோயில், கிழக்கு நோக்கிய மூலவர் அனந்த பத்மநாபேஸ்வரர் காட்சியளிக்கிறார். உமாதேவியாருடைய சாபத்தால் பாம்புருவங் கொண்ட திருமால் பூசித்துப் பழைய உருவம் பெற்ற தலம். |
அருள்மிகு காமீசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
சர்வதீர்த்தக்கரையில் மேற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் மன்மதேஸ்வரர். மன்மதன் மூன்றுலகத்தும் தன் ஆணையைச் செலுத்தும் வரத்தைக் கொடுத்தருள வேண்டும் என இறைவனைப் பூசித்து அருள் பெற்ற தலம். |
அருள்மிகு அயிராபதேசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
கச்சபேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கில் 30 அடி தூரத்தில் ராஜவீதியில் தென்கோடியில் சாலைக்கு கீழ்புறத்தில் இக்கோயில் உள்ளது. மேற்கு நோக்கிய மூலவர் ஐராவதேஸ்வரர். வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனுக்கு வாகனமாவதற்கும் வரம் பெற்ற தலம், இத்தலம் கயிலாயர் கோயில் போன்றே சிற்பம் நிறைந்தது. பல்லவர்கள் கட்டிய கோயிலாகும். |
அருள்மிகு அரிசாபந்தீர்த்தார் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
நெல்லுக்காரத் தெருவில் இரட்டை மண்டபத்திற்குத் தென் மேற்கில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் அரிசாந்தீர்த்தார் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். திருமால் பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக் கொள்ளுதற்காகப் பூசித்த தலம். |
அருள்மிகு ஆதிபதேச்சுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
தீபப்பிரகாசர் கோயிலுக்கு எதிரேயுள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக ஆதிபதேச்சுரர் காட்சியளிக்கிறார். பிரமன் வேள்விழை அழிக்கச் சரசுவதி நதி உருவம் கொண்டு நடு இரவில் வர, பிரமன் கட்டளைப்படி திருமால் நடுராத்திரியில் வந்த வேகவதி நதியைக் காண்பதற்கு முடியாமல்போக, திருமால் ஒருலிங்கம் தாபித்துப் பூசித்து சிவபெருமானை அழைக்க, சிவபெருமானும் திருமால் கேட்டபடி தீபம்போல் பிரகாசித்து விளக்கொளிப் பெருமாளாக விளங்கி நதியைத் தடுத்து வேள்வியைக் காத்தார் என தலபுராணம் கூறுகிறது. |
அருள்மிகு ரணியீசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி சர்வதீர்த்தக் கரையின் மேல்பாலுள்ளது. மூலவர் 16 பட்டை லிங்கமாக இரண்யேஸ்வரர். இரணியன் என்னும் அசுரன் தன் பெயரால் இலிங்கம் தாபித்துப் பூசித்து, மனிதரா<லும், மிருகங்களாலும் மற்றைய ஜீவராசிகளாலும் பூமியிலும், ஆகாயத்திலும், ஆயுதங்களாலும் காய்ந்த மற்றும் குளிர்ந்த இடத்திலும், வீட்டிற்கு வெளியிலும், உள்ளிலும், பகலிலும், இரவிலும் இறவாத வரத்தை இத்தல இறைவனிடம் பெற்ற தலம். |
அருள்மிகு ராமநாதீச்சுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
இக்கோயில் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் 16 கால் மண்டபத்திற்கு அருகில் உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் இராமநாதர் காட்சியளிக்கிறார். இராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொள்ள இராமபிரான் இங்கு லிங்கம் தாபித்துப் பூசித்துப் பாவம் நீங்கி அயோத்தியை அடைத்த தலம். |
அருள்மிகு இறவாத்தானம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
பெரிய காஞ்சி கம்மாளத் தெருவில் இக்கோயில் உள்ளது. |
கிழக்கு நோக்கிய மூலவர் இறவாஸித்õனேஸ்வரர் காட்சியளிக்கிறார். தீர்த்தம் ஞானதீர்த்தம் (வெள்ளை குளம்), சுவேதன், மார்க்கண்டேயர், சாலங்காயின் முனிவரின் பேரன் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டுச் சாகாவரம் பெற்ற தலம், பல்லவர் காலத்து கோயில் கல்வெட்டுக்கள் உள்ளன. |
அருள்மிகு கங்காதரேசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி சர்வதீர்த்தக் கரையில் இக்கோயில் உள்ளது. மேற்கு நோக்கிய மூலவர் கங்காதரேஸ்வரர். வருண், கங்காதேவியோடு சேர்ந்து இறைவனைப் பூசித்து நீருக்கும், நீர்வாழ் <உயிர்களுக்கும் தலைவனாதலைப் பெற்ற தலம் இத்தலமாகும், வருணேசம் என்றும் தலத்திற்கு பெயர். |
அருள்மிகு காயாரோகணம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பிள்ளையார்பாளையம் தாயார் குளத்திற்கு அருகில் வேகவதியாற்றின் வடகரையில் இக்கோயில் 100*100 சதுர அடி நில்ப்பரப்பளவில், கிழக்கு நோக்கிய மூலவர் காயரோகணேஸ்வரர். திருமால், பிரமன் ஆகிய இருவரும் ஆயுள் முடிந்து இறக்க வரும் அக்காலத்தில், காலத்தை கடந்தவனாகிய இறைவனே அவர்களை ஒடுக்கி, அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி அங்கு நடனம் செய்து அருளியதால் இத்தலம் காயரோகணம் எனப் பெயர் பெற்றது. மகாலஷ்மி பூசித்த தலம். |
|
|