அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில் |
முசரவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு விஷ்ணு பாதாரை திருமுக்கூடல் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் |
திருமுக்கூடல்631 606, காஞ்சி மாவட்டம். |
+91 94437 78352 | செங்கல்பட்டு காஞ்சி மார்க்கத்தில் சுமார் 18 கிமீ தூரத்தில் <உள்ள தலம். பாலாற்றின் ஒரு கரையில் உள்ளது. ஆற்றின் மறு கரையில் சிறு குன்றின் மீது பழைய சீவரம் உள்ளது. |
வடக்கு திருமுகம்,நின்ற திருக்கோலம்.
திறக்கும் நேரம்:9.00 முதல் மாலை 6.00 வரை, சனி, ஞாயிறுகளில் மேற்கூரிய நேரம் நிச்சயம் நடை திறந்திருக்கும். |
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி தேவஸ்தானம் |
பழைய சீவரம்631 606, காஞ்சி மாவட்டம் |
+91 94437 18137 | செங்கல்பட்டு உத்திரமேரூர் பாதையில் 5 கி.மீ. சென்றவுடன் நெல்வாய் திருமுக்கூடல் கூட்டுரோடிலிருந்து வலப்புறம் சுமார் 18 கி.மீ. பயணம் செய்தும் வரலாம். இந்தப் பாதை சுமாரானது. சென்னையிலிருந்து 75 கி.மீ. சென்னைதிருச்சி தேசிய சாலையில் செங்கல்பட்டு மேம்பாலம் செல்லாமல் கீழே வலப்புறம் காஞ்சிபுரத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. பாலாற்றின் கரையில் குன்றின் மேல் கோயில். செங்கல்பட்டிலிருந்து திரும்பியவுடன் மிக அருகாமையில் ஆத்தூர் முக்தீஸ்வரர் கோயிலும், கல்யாண பெருமாள் கோயிலும் சுமார் 100 அடி தூரத்திலேயே வரும். |
மேற்கு திருமுகம். வீற்றிருந்த கோலம்.
திறக்கும் நேரம்: 9.00 முதல் 11.00,மாலை 4.30 முதல் 6.30 வரை. |
அருள்மிகு வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் |
மேல்மதுரமங்கலம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மேற்கே 22 கி.மீ. |
இக்கோயில் 39 செண்ட் நிலப்பரப்பளவில் 60 அடி உயர இராஜகோபுரத்துடன் ஒரு பிராகாரத்துடன், மூலவர் வைகுந்தபெருமாள் உட்கார்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இக்கோயில் தி.பி. 1000 பிற்பட்ட கோயிலாகும். இத்தலத்தில் இராமானுஜருடைய சிறிய அன்னையாருக்கு மகனாகப் பிறந்த எம்பார் என்னும் கோயிந்தபெருமாள் என்பவர் இராமானுஜருடன், திருபுட்குழியில் யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றவர். எப்பொழுதும் இராமானுஜருடைய நிழல்போல் அவரை விட்டு நீங்காது அவருடனேயே இருப்பவர் வாழ்க்கையில் விரக்தியுற்ற எம்பார், இராமானுஜரால் துறவறம் அளிக்கப்பட்டு எம்பார் என்னும் திருப்பெயரால் அழைப்பட்டவர். இத்தலமும் எம்பார் திருத்தலம் என்றே அழைக்கப்படுகிறது. தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. தை மாதத்தில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில் |
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிபுரத்திலிருந்து தெற்காக 25கி.மீ. |
இக்கோயில் பாலாற்றின் தென்பகுதியில் உள்ளது. மூன்று பிரகாரங்களுடன், கிழக்கு நோக்கியதுமான இக்கோயில் மூன்று அடுக்காக அமைந்த அஷ்டாங்க விமானத்துடன், மூன்று நிலைகளில் அடித்தளத்தில் உள்ள கருவறையில் மூலவர் சுந்தரவரதராஜப் பெருமாள் மற்றும் திருமகள், பூமிதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். உண்ணாழியின் திருச்சுற்றில் தெற்கே அச்சுதவரதரும், மேற்கே அநுருத்திரவரதரும், வடக்கே கலியாணவரதரும் மற்றும் சரசுவதிதேவி, ரதி, மன்மதன், பிருகு முனிவர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர். இரண்டாம் தளத்தில் உள்ள கருவறையில் வைகுந்தவரதப் பெருமாள் மற்றும் திருமகள், பூமிதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். சுவர் ஓவியமாக பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகனும், இடப்பக்கத்தில் சிவன், சூரியன், சந்திரன், காமினி உள்ளனர். மூன்றாம் தளத்தில் உள்ள கருவறையில் அரங்கநாதர் ஏழுதலைகளைக் கொண்ட பாம்பனை மீது போக சயனத்தில் பள்ளிகொண்டும், தன்வலக்கையை மார்க்கண்டேயனும் அருள் வழங்குவதாக காட்சியளிக்கிறார். தென் பிராகாரத்தில் தனிச்சன்னதியில் ஆனந்தவல்லித் தாயார் காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கு எதிரில் திருக்குளம் உள்ளது. திருக்குளத்திற்கு வடக்கில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். இத்தல இறைவனை பிருகு முனிவர் வழிபட்டதாகவும் வரலாறு. இக்கோயிலில் திருமாலின் ஒன்பது மூலவர் திருவடிவங்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். தி.பி. 700 ஆண்டுக்கு பின்புவந்த பல்லவர் ஆட்சியின் போது கட்டப்பெற்றதாகவும், திருக்கோயிலுக்கு திருப்பணி, மானியம், செய்ததை இங்குள்ள 36 கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மேலும் சோழர் கால கல்வெட்டில் இவ்வூரை இராசேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம் என்றும் தி.பி. 1068 இல் இராசேந்திர ÷சாழவிண்ணகர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வைகானச ஆகமப்படி தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி விசாக நட்சத்திரத்தில் வரை பிரமோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் கருடசேவையும் நடைபெறுகிறது. |
அருள்மிகு ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோயில், களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களத்தூர் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
இக்கிராமம் பொன் விளைந்த களத்தூர் எனும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. இவ்வூருக்கு அருகில் கோதண்ட ராமசுவாமிக்கு தனிக்கோயிலும், அண்மைக்காலத்தில் உருவான தலசயன ராமர் கோயிலும் உள்ளன. |
அருள்மிகு சதுர்புஜராமன் திருக்கோயில் |
அருள்மிகு சதுர்புஜராமன் திருக்கோயில்,
பொன்பதர்க்கூடம்,காஞ்சிபுரம் மாவட்டம். |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்பதர்க்கூடம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
மூலஸ்தானத்தில் சீதாதேவி, லட்சுமணருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் ராமபிரான். எதிரே பவ்ய ஆஞ்சநேயர் சன்னதி, சதுர்புஜ ராமனாக உற்சவமூர்த்தியாக சங்கு, சக்கரமும், வில்லும் அம்புமேந்தியபடி காட்சி தருகிறார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அத்தனையையும் அருள்பாலிக்கும் நான்கு திருக்கரங்கள் அவை! அருகில் வினயபாவத்துடன் நின்றகோலத்தில் நாம் காணும் அனுமனின் திருமேனி அற்புதம்! |
அருள்மிகு லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோயில்,
களத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். |
செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
கடல்மல்லையில் தலசயனப் பெருமாள் கோயிலின் உற்சவராக சுற்றுப் பிராகாரத்தில் இருந்தவர்தான் களத்தூர் லட்சுமி நரசிம்மப் பெருமாள். இக்கோயில் கொடிமரம், நாலுக்கால் மண்டபம், கல்யாண மண்டபம், கண்ணாடி அறை போன்ற அத்தனை அம்சங்களும் கொண்டது. வைகுந்தவாசப் பெருமாள், ஐந்து தலை நாகர் குடைப்பிடிக்க, சாளக் கிராம மாலையோடு அமர்ந்தகோலத்தில் சேவை சாதிக்கிறார். திருமகள், நிலமகள் அருகில் இருக்க, சுந்தரமூர்த்தியாக கடல் மல்லையிலிருந்து வந்து குடியேறிய லட்சுமி நரசிம்மப் பெருமாளும், நவநீதகிருஷ்ணன், சாளக்கிராமங்கள், வலம்புரி சங்குகள் சன்னதியை அலங்கரிக்கின்றனர். |
அருள்மிகு ராமபிரான் திருக்கோயில் |
அருள்மிகு ராமபிரான் திருக்கோயில்,
பொன்பதர்க்கூடம்,காஞ்சிபுரம் மாவட்டம். |
செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
பொன்பதர்க்கூடத்தில் ராமபிரான், சங்கு சக்கரமேந்தியபடி நான்கு கரங்களுடன் சதுர்புஜராமனாகக் காட்சி தருகிறார். அதே நேரத்தில், இப்படி நான்கு கரங்களோடு சாட்சாத் மகாவிஷ்ணுவாகவே ராமன் நான்கு தருணங்களில் காட்சி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
மெய்யூர்
காஞ்சிபுரம் |
சாலவாக்கத்திலிருந்து கிழக்கு முகமாகத் திரும்பி, சென்னை பிரதான சாலை நோக்கிப் பயனித்து சென்றால் நெடுஞ்சாலையில் உள்ள பாலாற்றுப் பாலத்தையொட்டி அமைந்த திருத்தலம். |
நாகை சவுந்தரராஜப் பெருமாளின் திருமேனி போலவே அந்தச் சிலை அமைந்திருந்ததால் சவுந்தரராஜப் பெருமாள் என்றே பெயர் சூட்டி ஆராதிக்கிறார்கள் பக்தர்கள். இங்கு எழுந்தருளியுள்ள பக்த ஆஞ்சநேயர் பெரும் வரப்பிரசாதியாம். |
|
|