அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்
அரும்புலியூர்
காஞ்சிபுரம் |
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் 4 கி.மீ பயணித்து ஆற்றைக் கடந்தால் ஊரை அடையலாம், சீட்டஞ்சேரி-ஓரகாட்டுப்பேட்டையியையொட்டி அமைந்துள்ள திருத்தலம் அரும்புலியூர். |
ஹயக்ரீவர் சன்னதியுடன் கூடி வைகுந்தப் பெருமாள் திருக்கோயிலும் நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலும் உள்ளது. இப்பகுதியில் முக்கியமான சந்திப்பு. |
அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் |
அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள்
செங்கல்பட்டு அருகில்
நென்மேலி
காஞ்சிபுரம் |
நெமிலி என்று அழைக்கப்படும் நென்மேலி கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அருகில் உள்ளது. செங்கல்பட்டு-திருகழுக்குன்றம் சாலையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. |
இத்திருத்தலத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், சிராத்த சம்ரக்ஷணப் பெருமாள் எனும் திருநாமங்கொண்டு, உற்சவமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
படாளம்
காஞ்சிபுரம் |
படாளம் கூட்டுரோடிலிருந்து கிழக்கே 2 கி.மீ செல்லவேண்டும். |
மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள், திருமகளை மடியில் அமர்த்தியபடி சங்கு சக்ரதாரியாக அமர்ந்துள்ளார். எழிலான தோற்றம். அபயஹஸ்தராகக் காட்சி தருகிறார். கருவறைக்குப் பின்னே உள்ள தனிமண்டபத்தில் விஷ்ணுபாதம் உள்ளது. |
அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில்
செய்யூர்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்குத் தென்கிழக்கே 29 கி,மீ தொலைவில் உள்ளது. செய்யூர் என அழைக்கப்படும் சேயூர். |
சிறிய 3 நிலை கோபுரத்துடன் கூடியது. மூலவர் கரியமாணிக்கப்பெருமாள் அருள்பாலிக்கும் திருக்கோயில். பெரும் தேவித் தாயார் தனிசன்னதி கொண்டுள்ளார். |
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்
செம்மஞ்சேரி
காஞ்சிபுரம் |
சோளிங்கநல்லூருக்கு வடக்கே, மகாபலிபுரம் செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது செம்மஞ்சேரி. |
சீனிவாசப் பெருமாள் பத்மாவதி தாயாருடன் எழுந்தருளியுள்ள திருத்தலம் இது. நின்ற கோலத்தில் பெருமாள் தரிசனம். வட வேங்கடத்தை நினைவூட்டுகிறது. பழமையை நினைவூட்டுபவையாக, மகா மண்டபத்தின் தூண்கள் உள்ளன. மூன்று நிலை ராஜ கோபுரமும். தங்கம் போல மின்னிடும் கருவறை விமானமும் சிறப்பாக உள்ளன. வெளிப் பிராகாரத்தில் கண்ணபிரான் ஆடும் கோலத்தில் அழகாக காட்சி தருகிறார். |
அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
பள்ளிக்கரணை
காஞ்சிபுரம் |
திருநீர்மலைக்குத் தென்கிழக்கிலும், திருவிடந்தைக்கு வடக்கிலும், தாம்பரம் வேளச்சேரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. பள்ளிக்கரணை |
கோதண்டராமசுவாமி சன்னதியைத் தவிர பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சன்னதியும் பள்ளிக்கரணையின் மக்கள் அபிமானத்தைப் பெற்றது. |
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
புளியம்பட்டி,
கோவை. |
கோபியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள நன்செய் புளியம்பட்டியில் இக்கோயில் உள்ளது. |
நாகம் அடையாளம் காட்டிக் கொடுத்த தலமாதலால் கருவறையின் சுவர்களில் 21 நாகங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்கிறார்கள். |
அருள்மிகு சுவாமி தேசிகர் கோயில் தேவஸ்தானம் திருக்கோயில், |
அருள்மிகு சுவாமி தேசிகர் கோயில் தேவஸ்தானம் திருக்கோயில்,
28 ராஜாஜி தெரு,
செங்கல்பட்டு டவுன்,
செங்கல்பட்டு மாவட்டம் 603001. |
+91 9894351406, 9486870109. | செங்கல்பட்டு பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிமீ ல் உள்ள பதி. |
நிகமாந்த தேசிகர் திருவஹீந்த்ரபுரம் சென்ற போது இங்கு தங்கி திருவாராதனை செய்த பெருமாள். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கும் பெருமாள் இவர். பெண்களின் திருமணத்தடை நீக்கம். வியாதி நிவர்த்தி மற்றும் மன நலம் குன்றியவர்களுக்கு பலனையும் தரும் வரப்ரசாதியாக இப்பெருமாள் விளங்குகிறார். ஸ்ரீநிவாஸப்பெருமாள் அலர்மேல்மங்கை. |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு ரங்கநாதர், சயன நரசிம்மர் சரநாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ரங்கநாதர், சயன நரசிம்மர் சரநாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
பொன்விளைந்த களத்தூர்,
(பி.வி. களத்தூர்),
வழி செங்கல்பட்டு,
காஞ்சி மாவட்டம் 603405. |
+91 44-27441299, 9444744280, 9443706842. | சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு 60 கிமீ தூரத்தில் உள்ளது. நகரில் உள்ள கோர்ட் சாலையில் விநாயகர் கோயில் எதிரே பொது மருத்துவமனை தாண்டி சென்றால் 6வது கிமீல் பொன்விளைந்த களத்தூர். பி.வி.களத்தூர் என்றும் களத்தூர் என்றும் பொது வழக்கில் கூறப்படுகிறது. முதலில் இவ்வூரில் உள்ள முன் குடும்பீஸ்வரர் கோயில் வரும். இந்த ஊருக்கு அருகில் ஒத்திவாக்கம் இரயில் நிலையம் உள்ளது. |
இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. அவை நரசிம்மர் மற்றும் இராமர் கோயில்கள். பல்லவ மன்னன் காலத்தில் பிரிக்கப்பட்ட 24 கோட்டங்களில் ஒன்றாக விளங்கியது இந்த ஊர். காஞ்சியிலிருந்து திருக்கடல்மல்லை வரை அது விளங்கியது. மூலவர் வைகுண்டவாசன் மட்டுமே இருந்தது. திருக்கடல்மல்லையில் லக்ஷ்மி நரசிம்மர் மூலவராயும் சாந்தமூர்த்தியாக உற்சவரும் இருக்க, அர்ச்சகர் கனவில் தோன்றி இவ்வூரில் கோயில் கொள்ளத் திருவுளம் கொண்ட செய்தியைக் கூறி கருடாழ்வார் வழிகாட்டி எங்கு காட்டிக் கொடுக்கிறானோ அங்கு பிரதிஷ்டை செய்க எனக்கூற இத்தலத்தில் வந்தடைந்ததாக வரலாறு. இத்தல திருமஞ்சன கட்டியத்தில் இச்செய்தி உள்ளது. மேலும் பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியிலும் இப்பெருமானைக் குறிப்பிடுகிறார். தேசிகன் இப்பெருமானை தஸாவதார ஸ்தோத்திரத்தில் பாடியுள்ளார். தாயார் வரப்பிரஸாதி. இரண்டு அக்கிரகாரங்கள் திகழும் இவ்வூரில் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. தை ரதசப்தமி, பிரம்மோற்சவம் ராம நவமி விமரிசையாக நடைபெறுகிறது. அஹோபில மடத்தை அலங்கரித்த 35ம் பட்டம் அழகிய சிங்கர் வண் சடகோப ரங்கநாதயதீந்திரர், புகழேந்திப்புலவர், அவதாரத் தலம். 6வது ஷஷ்ட பராங்குச தேசிகன் ஸ்தாபித்த பராங்குசபுரமும் உள்ளது. கூற்றுவ நாயனார் அவதாரத் தலம் இது என்கிற ஓர் கருத்துமுள்ளது. முன் குடும்பீஸ்வரர் கோயிலும் உள்ளது. அருகே மற்றோர் அக்ரஹாரத்தில் உள்ள கோயிலில் இராமர் சீதை தன் மடியில் அமர உள்ளார். தெற்கு பார்த்த ஸ்ரீநிவாஸப் பெருமாள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜபுரம் என்கிற பெயரும் கொண்ட ஊர். பத்ரிக்கு அடுத்து நிகராகக் கூறப்படும் தலம். ரங்கநாதர், சயன நரசிம்மர் சரநாராயணப்பெருமாள், தர்ப்ப சயன ராமர் அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
|
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை (சனி, ஞாயிறு நண்பகல் 12 மணி வரை). |
அருள்மிகு தர்ப்ப சயன ராமர் மற்றும் சதுர்புஜ கோதண்ட ராம ஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு தர்ப்ப சயன ராமர் மற்றும் சதுர்புஜ கோதண்ட ராம ஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில்,
பொன்பதர் கூட்டம்,
பொன்விளைந்த களத்தூர் வழி,
603405,
காஞ்சி மாவட்டம்.
|
+91 44-27441227. | செங்கல்பட்டை அடுத்து 6கிமீ தூரத்தில் பொன்விளைந்த களத்தூர் உள்ளது. அங்கிருந்து வல்லிபுரம் சாலையில் மேலும் 5 கிமீ சென்றால் ஊர். ஒத்திவாக்கம் இரயில்வே லெவல் கிராஸிங் அருகே உள்ளது. |
வேதாந்த தேசிகர் தன் யாத்திரையின் போது இத்தலத்தில் இரவில் தங்கினார். நித்தம் வணங்கும் ஹயக்ரீவருக்கு தீர்த்தத்தை நிவேதனமாகச் சமர்ப்பித்து உறங்க, மறுநாள் காலையில் விவசாயிகள் அவருடைய வெள்ளைக் குதிரை பயிரை மேய்ந்து பாழ் செய்கிறது என முறையிட, ஹயக்ரீவருக்கு நீர் மட்டும் கொடுத்ததனால் அது பசியாறவில்லையோ என பிரார்த்திக்க குதிரை மேய்ந்த இடமெல்லாம் பொற்கதிர்களானது. அவை தூற்றிய போது பொன்னாக விழுந்ததால் பொன்பதர் கூட்டம் எனப் பெயர் பெற்றது. இந்தத் தலத்திலேயே சதுர்புஜ ராமர் கோயிலில் ராமர் சங்கு சக்கரத்துடன் விளங்குகிறார். அஞ்சலியுடன் லக்ஷ்மணர், பவ்ய ஆஞ்சநேயர் கல்யாண கோலத்துடன் காட்சி கொடுக்கிறார். இந்தப் பொன்கதிர்கள் சாலில் வைத்துப்பாதுகாக்கப் பட்ட இடம் சாலூர் (சால் என்றால் பெரிய மண்பானை) என்றும், எடை போட்ட இடம் எடையூர் என்கிற பெயரோடும் விளங்குகின்றன. தர்ப்ப சயன ராமன் மற்றும் சங்கு சக்கரம் வில் அம்புடன் சதுர்புஜ ராமர் சீதாதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
|
பூஜை நேரம்: - |
|
|