அருள்மிகு மாதலீசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள தர்க்காத் தோட்டத்தில் இலிங்கம் மாத்திரம் உள்ளது. இந்திர னுடைய சாரதியாகிய மாதலி என்பவன் இராவண சம்காரத்தின்போது காஞ்சியில் இலிங்கம் தாபித்துப் பூசித்த தலம். |
அருள்மிகு வன்னீகரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி சகோதர தீர்த்ததின் தென் கரையில் உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் வன்னீஸ்வரர். அக்கினி பூசித்துத் தேவர்களுக்குரிய அவிர்பாகத்தைப் பெறும் வன்மை பெற்ற தலம். |
அருள்மிகு வாணேகரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
ஓணகாந்தன் கோயிலுக்கு வடமேற்கில் சாலைக்குக் கிழக்கில் ஒரு சிறிய குளக்கரையில் இலிங்கம் மட்டுமே உள்ளது. வானாசூரன் தம் பெயரில் இலிங்கம் தாபித்து பூசித்து சிவபெருமானின் அருளாள் சிவகணத் தலைமை பெற்ற தலம். வாணீசம் என்றும் அழைக்கப்படும். |
அருள்மிகு விசுவநாதேச்சுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி சர்வதீர்த்தக் கரையின் மேல் திசையில் உள்ளது. காசி விஸ்வநாதர் தம்மூராகிய காசியிலும் காஞ்சியே சிறந்ததென்று எண்ணி வந்து தங்கிய தலம். |
அருள்மிகு மாகாளேசம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி காமாட்சியம்மை கோயிலின் வடக்கு வாயிலில் வடமேற்கேயுள்ளது. கிழக்கு நோக்கிய மூலவர் மகாகாளேஸ்வரர். மாகாளன் என்னும் ஓர் பாம்பானது காளத்திநாதர் ஆணைப்படிக் காஞ்சியில் இலிங்கம் அமைத்துப் பூசித்து மீண்டும் காளத்தயை அடைந்து முக்தியடைந்த தலம். |
அருள்மிகு மாண்டகன்றீசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பெரிய காஞ்சி சகேதார தீர்த்தத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் மாண்டுகனனீஸ்வரர். இக்கோயிலில் நந்தி நேரே இறைவனை நோக்காமல் சற்று வடக்கே திரும்பியுள்ளது. மாண்டகன்னீசம் எனப் புராணப் குறிப்பிடுகிறது.மாண்டகன்னி முனிவர் தமது பெயரால் இலிங்கம் தாபித்துப் பூசித்து தேவமாதர் ஐந்து பேரை மணம்புரிந்து, ஐவர் இன்பத்தை நுகர்ந்து முடிவில் முக்தி அடைந்த தலம். |
அருள்மிகு வன்மீகேசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
பிள்ளையார் பாளையம் சாலைத் தெரு வடகோடியில் மேற்குப் பக்கம் வயல் வெளியில் இலிங்கம் மட்டுமே உள்ளது. வேள்வியில் தோன்றிய கீர்த்தியைத் திருமால் முழுவதும் கவர்ந்து செல்ல, அதை மீட்டும் பெற வேண்டி இந்திரன் காஞ்சியில் இலிங்கம் தாபித்துப் பூசித்து பல வரங்கள் பெற்ற தலம், இறைவன் ஆணைப்படி புற்றில் செல்லாகத் தோன்றி திருமாலின் வில்நாணை அரித்து அறுத்துக் கீர்த்தியைப் பெற்ற தலம். இப்போதும் இலிங்கத்தைச் சுற்றி புற்றுகள் காணப்படுகின்றன. |
அருள்மிகு வாலீச்சுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
ஏகாம்பரநாதர் ஆலயத்துள் கச்சிமயானத்திற்குப் பின்புறம் சிறு கோயிலாய் உள்ளது, மேற்கு நோக்கிய சன்னிதியில் மூலவர் வாலீச்சுவரர், வாலி வழிபட்டு தன்னைப் போரில் எதிர்த்தவர்கள் பலத்தில் பாதியைத் தான் அடையவும், வானர வீரர்களுக்கு அரசனாகவும் இருக்க வரங்களைப் பெற்ற தலம். |
அருள்மிகு விண்டீசுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
ஏகாம்பரேசர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கோபுர வாயிலுக்கு நேரே தென் பிரகாரத்தில் உள்ளது. விண்டுவீச்சுரம் என அழைக்கப்படும் தலம். சிவபெருமானின் திருநடனத்தைக் காண ஆவலுற்றுத் திருமால் காஞ்சியில் இலிங்கம் அமைத்துப் பூசித்துத் திருவருள் பெற்று தில்லையை அடைந்து இலக்கு மியுடன் இறைவனின் ஆனந்த நடனம் காணப்பெற்ற தலம். |
அருள்மிகு வீரராகவேச்சுரம் திருக்கோயில் |
காஞ்சிபுரம் |
|
புத்தேரித் தெருவில் உள்ள முருகன் கோயில் பக்கம் உள்ள வயல் வெளியில் இலிங்கம் மட்டுமே உள்ள தலம். இராமபிரான் காஞ்சியில் வீரராகவேசன் என்னும் பெயரில் இலிங்கம் தாபித்து வழிபட்டு, வீரம், பாசுபத்திரம், பிரமாத்திரம், நாராயணாத்தரம் முதலியன பெற்று இராவணனை அழித்து அயோத்தியை அடைந்த தலம். |
|
|