|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் சிவன் கோயில்
|
|
காஞ்சிபுரம் சிவன் கோயில் (498)
|
|
அருள்மிகு காண்டீஸ்வரர் திருக்கோயில் |
புதுப்பாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிக்கு வடக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் |
பெரிய கரும்பூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிக்கு வடக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 225 ச.அடி நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
உள்ளாவூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
வாலாஜாபாத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 350 வருட முற்பட்டது. |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
வெங்குடி
காஞ்சிபுரம் மாவட்டம் |
வாலாஜாபாத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் செல்லியம்மன் கல்வெட்டுக்கள் உள்ளன. |
அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில் |
திம்மராஜம்பேட்டை
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 7000 ச. அடி நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அம்மன் பர்வதவர்த்தனி. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
கோயிந்தவாடி
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரபலம். உள்பிராகார சுவற்றில் கல்வெட்டுக்கள் உள்ளன. காஞ்சிப் புராணத்தில் இத்தலத்தைப்பறிறிய குறிப்புகள் உள்ளன. |
அருள்மிகு வராகீசுரர் திருக்கோயில் |
தாமல்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிக்கு வடமேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் குளத்தின் தென்கரையில் பெரிய கோயிலாக உள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இரணியாக்கன் என்னும் அசுரனைத் திருமால் வராக அவதாரம் எடுத்துக் கொன்று, பூமியை நிலைநிறுத்தினார். அவ்வெற்றிச் செருக்கால் <உலகுக்குத் துன்பம் செய்தபோது இறைவன் வேடுவராகி அப்பன்றியைக் கொன்று அதன் ஒரு கொம்பை அணிந்து கொண்டார். பின் திருமால் இறைவனைப் பூசித்துத் திருவருள் பெற்ற தலம் மேலும் இவ்வூரில் தாமோதர பெருமாள் கோயிலும் உள்ளது. |
அருள்மிகு திருமால் ஈஸ்வரர் திருக்கோயில் |
சிங்கடிவாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சிக்கு கிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் திருபுரசுந்தரியம்மன் பிரகாரத்தில் பரிவார மூர்த்தங்களும் உள்ளன. இங்குள்ள மூலவருக்கு நாமம் அணிவிக்கப்படுவதால் இறைவனுக்கு திருமால் ஈஸ்வரர் என்று பெயர். 250 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில் |
தங்கை
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சி கிழக்கே 7 கி.மீ. |
இக்கோயில் 6-38 ஏக்கர் நிலப்பரப்பளவில்அமைந்துள்ளது. 150 அடி உயர இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பாண்டிய மன்னனுக்கு இருந்த குஷ்ட நோய் இத்தல இறைவன் அருளால் நீக்கப் பெற்றதனால் அம்மன்னன் காணிக்கையாக இக்கோயில் கட்டுவித்தான் என இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இத்தல முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். இக்கோயிலுக்கு எதிரில் திருக்குளம் உள்ளது. நான்கு கால பூஜை. வைகாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு வான்மீகநாதர் திருக்கோயில் |
செய்யூர், மதுராந்தகம் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
மதுராந்தகத்திலிருந்து தென்கிழக்கே 24 கி.மீ. |
இக்கோயில் 65 செண்ட் நிலப்பரப்பளவில், மூலவர் சுயம்புலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். தேவேந்திரன் வழிபட்ட தலம். கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர் கால திருப்பணி, மூன்று கால பூஜை. தை மாதத்தில் பிரமோற்சவம்.
மேலும் இவ்வூரின் நடுவில் 70 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்க வடிவில் சோமநாதர். அம்மன் மீனாட்சியம்மன் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி சன்னிதி உள்ளது. இவர் சம்ஹார மூர்த்தி என்றும் பெயர். வடக்குப் பிரகாரத்தில் ஆறுமுகர் உள்ளார். கருவறையில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் கந்தசுவாமி என்னும் செய்கைக் கந்தன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் தேவியர் விளங்க வேலும், மயிலும் கொண்டு காட்சி தருகிறார், இத்தல முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். பங்குனி பிரமோற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இவ்வூரில் 65 செண்ட் நிலப்பரப்பளவில் சிறிய கோபுரத்துடன் கூடிய பெருமாள் கோயிலான ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயிலும் இங்கு உள்ளது. |
|
|
|