அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
சூணாம்பேடு, மதுராந்தகம் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
மதுராந்தகத்திலிருந்து தெற்கே 30 கி.மீ. |
இக்கோயில் 53 செண்ட் நிலப்பரப்பளவில், மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். 1000 வருட முற்பட்ட கோயில். நான்கு கால பூஜை. |
அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் |
குளத்தூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
சென்னைக்கு வடக்கே 9 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். ஒரு கால பூஜை. |
அருள்மிகு மணவாலீஸ்சுவரர் திருக்கோயில் |
திருநின்றவூர், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
சென்னையிலிருந்து மேற்கே 29 கி.மீ. |
இக்கோயில் 27,280 ச.அடி நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மரகதவல்லி, பல்லவர் காலம். வருணன் பூஜித்த லிங்கம். |
அருள்மிகு தாதீசுவரர் திருக்கோயில் |
திருமணம், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
திருநின்றவூருக்கு தென்கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 30.13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்டது. இரண்டு கால பூஜை. |
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |
நசரத்பேட்டை, ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
பூவிருந்தவல்லிக்கு மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி 1,000 வருட முற்பட்டது. ஒரு கால பூஜை. |
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் |
நேமம், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
திருநின்றவூருக்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 400 வருட முற்பட்டது. ஒரு கால பூஜை. |
அருள்மிகு லவபுரீஸ்வரர் திருக்கோயில் |
விலாங்காடுபாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
சென்னைக்கு வடக்கே 15 கி.மீ. |
இக்கோயில் 54 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் திரிபுரசுந்தரி. இராமனுடைய புதல்வர்களான லவ இத்தலத்தில் தங்கி வணங்கியதால் இத்தல இறைவனுக்கு லவபுரீஸ்வரர் என்று பெயர். ஒருகால பூஜை. மேலும் இவ்வூரில் ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோயிலும் உள்ளது. |
அருள்மிகு திருமூல நாதேஸ்வரர் திருக்கோயில் |
புழல்
காஞ்சிபுரம் மாவட்டம்
|
சென்னைக்கு வடமேற்கே 10 கி.மீ. |
இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் ஏகவல்லியம்மன். இத்தலத்தை பல்லவ, சோழ மன்னர்கள் திருப்பணி செய்ததை குறிக்கும் கல்வெட்டுக்கள், தாமிர சாசனங்களும் உள்ளன. இவ்வூரில் கரிய மாணிக்க பெருமாள் கோயிலும் உள்ளன. |
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
நந்தம்பாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
சென்னைக்கு மேற்கே 12 கி.மீ. பிருந்தாரண்யம். |
இக்கோயில் 151/122 ச.அடி நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பர்வதவர்த்தினி,தீர்த்தம் - பிருங்கி தீர்த்தம். இத்தலத்தில் உள்ள லிங்கம் இராமபிரானாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கம் அதனால் இறைவனுக்கு இராமலிங்கேஸ்வரர் என்று பெயர். மேலும் இத்தலத்தில் கோதண்ட ராமசாமி திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
பரங்கிமலை
காஞ்சிபுரம் மாவட்டம் |
சென்னைக்கு தென்மேற்கே 12 கி.மீ. பிருங்கிமலை. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் விசாலாட்சி. பிருங்கிமுனிவர் இத்தலத்தில் தவமிருந்து தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் காட்சியளித்த தலம். அதனாலேயே இம்மலைக்கு பிருங்கிமலை என்று பெயர் தற்போது பரங்கிமலை. கல்வெட்டுக்கள் உள்ளன. இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. |
|
|