Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் பெருமாள் கோயில்
 
காஞ்சிபுரம் பெருமாள் கோயில் (445)
 
அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், மாகறல், உத்தரமேரூர் வட்டம், காஞ்சி மாவட்டம் 631603.
+91 9790481309.
காஞ்சி பாதையில் உத்தரமேரூரிலிருந்து 10 கிமீ.
மாகறல் பாடல் பெற்ற தலத்தில் ஓர் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இவர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பிறகு மற்றும் மார்க்கண்டேயருக்குப் பிரத்யக்ஷம். வயோதிக வடிவில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இந்திர நீல விமானம் ஒரு கரம் அபய ஹஸ்தத்துடனும் மற்றோர் கரம் சின்முத்திரையுடனும் அருளுகிறார். எவ்வாறு நரசிம்மர் சில தலங்களில் தாடியுடன் விளங்குகிறாரோ இங்கு பெருமாளின் மோவாய்க்கட்டை சுருங்கி வயோதிக் பாவத்துடன் இருக்கிறார். உற்சவரும் அதே அமைப்புடன் விளங்குவது ஆச்சரியம். தாயார் கமலவல்லிக்குத் தனிச் சன்னிதி உள்ளது. மார்கண்டேயத் தீர்த்தமும் உள்ளது. வைகுண்டவாசப் பெருமாள் கமலவல்லி அமர்ந்த திருக்கோலம் வயோதிக பாவம்.
பூஜை நேரம்: காலை - மணி முதல் - மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை (ஒரு கால பூஜை)
அருள்மிகு ஆனந்தவல்லி ஸமேத வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆனந்தவல்லி ஸமேத வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், அரும்புலியூர், வழி பழைய சீவரம் மற்றும், அஞ்சல் காஞ்சி வட்டம், காஞ்சி மாவட்டம் 631606.
+91 9443718137.
பழைய சீவரத்திலிருந்து 7கிமீ தூரம். உத்திருமேரூரிலிருந்து சாலவாக்கம் கூட்டு ரோடிலிருந்து 18 கிமீ தூரத்தில் ஊர். செங்கல்பட்டு ஆத்தூர் பாதையிலும் செல்லலாம். பாலாற்றின் ஓர் கரையில் திருமுக்கூடல் தலமும் மறுபுறத்தில் பழைய சீவரமும் உள்ளது.
காலை 11 மணியிலிருந்து மாலை 12 மணி வரை.
பூஜை நேரம்: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். 1927ல் தாயார் சன்னிதி நிறுவப்பட்டுள்ளது. முற்கால கோட்டப்பிரிவு 24 புலியூர் கோட்டத்தில் அருமை நிறைந்த விவசாயத் தோட்டங்கள் அரும்புலியூர் என்று பெயர் பெற்று விளங்கியது. வைகுந்தவாசப் பெருமாள் ஆனந்தவல்லி கிழக்கு திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம்.
அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், வடக்குப்பட்டு, வழி மாத்தூர், காஞ்சி மாவட்டம் 603204.
+91 9444586932.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 55 கிமீல் உள்ள இருப்புப் பாதை நிலையம் சிங்கப்பெருமாள் கோயில். சிங்கபெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 6கிமீ தூரம். இந்தப்பாதையில் வல்லக்கோட்டை, மற்றும் சோமங்கலம் தலங்களையும் பார்க்கலாம்.
அஹோபில மடத்து 43 மற்றும் 44ம் அழகிய சிங்கர் வழிபட்ட தலம். உத்திர லக்ஷ்மிபுரம் என்கிற பழைய பெயர் கொண்டு இக்கோயில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய மழை பொழியும் என்கிற ஐதீகமும், சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்தால் விவசாயம் பெருகும். லாபம் கிட்டும் என்கிற ஐதீகமும் உள்ளது. சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சுந்தரவல்லி, ஆதிகேசவப் பெருமாள், யதிராஜவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வைகுந்தவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், பழைய சீவாரம், காஞ்சி வட்டம், காஞ்சி மாவட்டம் 631606.
+91 9443126189.
உத்திரமேரூர் காஞ்சி பாதையில் பாலாற்றுக்கு அருகே உள்ளது. பழைய சீவரம் பஜார் பகுதியில் உள்ளது.
தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் 2004ல் சுமார் 118 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விண்ணகரம் என வழங்கப்பட்ட 9ம் நூற்றாண்டுக் கோயில். உத்திரமேரூர் மற்றும் இத்தலத்துக் கல்வெட்டுகளுக்குத் தொடர்புள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. 2002ல் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் அவர்களின் தலையீட்டினால் சிதிலமடைந்த இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டது. காஞ்சி வரதராஜரும், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளும் உற்சவ காலங்களில் இங்கு எழுந்தருளுவர். பராந்தக சோழன் மற்றும் அவனது தனயன் கோப்பரகேசரி ஆதித்ய கரிகாலன் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். கிபி 640 வருடத்தில் அமைந்த இக்கோயிலின் காலம் பழைய சீவரம் நரசிம்மர் கோயிலுக்கும் முற்பட்டது. முப்பெரும் சாம்ராஜ்யமாகிய பல்லவ, சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். அக்காலத்து தேர்தல் விதிமுறைகள், ஒரு முறைதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் தேர்தலின் போது வரவு செலவு கணக்கு சமர்பிக்க வேண்டும் போன்ற சுவையான வரலாற்றுச் செய்திகள் அமைந்த கல்வெட்டுகள் உள்ளன. வைகுந்தவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கிழக்கு திருமுகமண்டலம் அமர்ந்த திருக்கோலம் ஒரு காலை மடக்கியவாறு சேவை சாதிக்கிறார்.
பூஜை நேரம்: காலை 8 மணியிலிருந்து மாலை 10 மணி வரை.
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஆர்ப்பாக்கம், உத்திரமேரூர் கீழ ரோடு, வழி மாகறல், காஞ்சி வட்டம், காஞ்சி மாவட்டம் 631603.
+91 9790481309.
வண்டலூரிலிருந்து வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லலாம். சென்னை கோயம்பேடிலிருந்து வண்டலூர் வழியாக வாலாஜாபாத் சுமார் 70கீமி வாலாஜாபாத்திலிருந்து ஆர்ப்பாக்கம் 10கிமீ. உத்திரமேரூரிலிருந்து வரும் போது திருப்புலிவனம், கடம்பர் கோயில் ஆகியவற்றைத் தாண்டி வந்தால் ஆர்ப்பாக்கம் வரும். இளையனார் வேலூருக்கு அருகே இந்த ஊர் உள்ளது. மேலும் காவாந்தண்டலத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாளும் வாலாஜா வழியில் உள்ள கம்மராஜபுரத்தில் அபயப்ரத வரதனும் சேவை சாதிக்கின்றனர். இவை பாஞ்சராத்ர ஆகமம்.
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில். உத்திரமேரூரிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் திருப்புலிவனம், கடம்பர் கோயில் ஆகிய வைப்புத் தலங்களைத் தாண்டி இளையனார் வேலூர் திருப்புகழ்த்தலமும் உள்ளது. அத்தலம் செல்லும் போது இந்த ஊரையும் தரிசிக்கலாம். வாலாஜாவிலிருந்து 10கிமீ தூரத்தில் உள்ளது. கருங்கல் திருப்பணிப் புராதனக் கோயிலிது. கிபி1003ல் கட்டப்பட்டு 1008 ஆண்டுகள் பூர்த்தியானதாகக் கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. தாயார் கிழக்கு பார்த்து சேவை சாதிக்கிறார். பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கருடனுக்கு 5 அல்லது 7 நாட்கள் நெய் தீபம் வியாழன் மற்றும் செவ்வாயில் ஏற்ற விவாகம் கைகூடும். சுக்கிரனின் திசை மேற்கு ஆகும். எனவே பெருமாள் இங்கு மேற்கு நோக்கிச் சேவை சாதிப்பதால் களத்ர ஸ்தானத்தில் உள்ள தோஷங்கள் நிவார்த்தி பெறும். மேலும் விஸ்வக்ஸேனர் தனி சன்னிதியாக நடுவே விளங்குவது விசேஷமான அமைப்பு. வைகானஸ ஆகமப்படி திருவாராதனை, கோயிலில் 1643 கிபியில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றதாகக் கல்வெட்டு உள்ளது. பின்னர் 2010ல் நடைபெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் விசேஷ ஆராதனைகள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சனிக்கிழமைகளில் சார்த்தப்படுகிறது. சனி பகவானின் திசை தென்திசை எனவும், தென் திசை நோக்கி வீர ஆஞ்சநேயர் அருளுவதால் சனியினால் ஏற்படும் உபாதைகளிலிருந்து நிவர்த்தி கிட்டும். ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மேற்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் - மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை
<< Previous  43  44  45 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar