அருள்மிகு அமரபதீஸ்வரர் திருக்கோயில் |
சிறுகளத்தூர்
ஸ்ரீ பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
குன்றத்தூருக்கு மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் சிறிய மலையின்மேல் கிழக்கு நோக்கிய மூலவர். 600 வருட முற்பட்டது. |
அருள்மிகு வெள்ளீஸ்சுவரர் திருக்கோயில் |
பெரியபணிச்சேரி
ஸ்ரீ பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
போரூர்க்கு தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
ஒரத்தூர்
ஸ்ரீ பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
ஸ்ரீபெரும்பூதூருக்கு தெற்கே 25 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் இவ்வூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலும் உள்ளன. |
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
நாவலூர், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
ஸ்ரீபெரும்புதூருக்கு தெற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சி. |
அருள்மிகு வருதீசுவரர் திருக்கோயில் |
மேல்பாக்கம், உத்திரமேரூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடமேற்கே 10 கி.மீ |
செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்கள் உள்ளன. 300 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு கடம்பநாதர் திருக்கோயில் |
கடம்பர்கோயில், உத்திரமேரூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கே 10 கி.மீ |
செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மருதகங்காஈஸ்வரர் திருக்கோயில் |
நெய்யடிவாக்கம்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கே 16 கி.மீ |
செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்கள் உள்ளன. பட்டாபிராமர் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் |
மாங்காடு, ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
பூவிருந்தவல்லிக்கு தென்கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். இங்கு தனிக்கோயிலாக தபஸ்காமாட்சியம்மன். உற்சவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி. இத்தலத்தில் ஆதிசங்கரர் அர்த்தமேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்த தலம். |
அருள்மிகு நாகேசுவரர் திருக்கோயில் |
குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் |
பல்லாவரத்திலிருந்து மேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன், இரண்டு பிராகாரங்களுடன் உள்ளது. கோயிலின் எதிரில் திருக்குளம். கல்வெட்டுக்கள் உள்ளன. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் வழிபட்ட தலம். இவ்வூரில் சேக்கிழார் பெருமானுக்கு தனிகோயிலும் உள்ளது. மேலும் இக்கோவிலுக்கு சிறிது தொலைவில் தெற்கே சிறிய மலையின் மீது வடக்கு நோக்கிய இராஜகோபுரமும், கோயிலும் கொண்டு மூலவர் சுயம்புலிங்கமாக கந்தசாமி என்னும் சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளிய தலம். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம் |
காஞ்சியிலிருந்து தெற்கே 27 கி.மீ. |
இவ்வூரில் கைலாசநாதர், இரட்டைத் தளீசர் என்ற சிவாலயம் உள்ளது. தனிக் கோயிலாக முருகப் பெருமானாகிய பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறையின் மூலையில் சிவபெருமான், உமையம்மை சன்னிதிகள் உள்ளன முருகப்பெருமான் சிறிது சாய்வாக இருந்து சிவனைப் பூஜிப்பது போன்று காட்சியளிக்கிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார். |
|
|