அருள்மிகு ருத்ரவாலீஸ்வரர் திருக்கோயில் |
புள்ளம்பாக்கம்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கே 21 கி.மீ |
செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பாலஞானாம்பிகை மற்றும் ஆதிகேசவ பெருமாள், திருமகள் பூமிதேவியுடன் உள்ளார். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பலவேரி
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
அரும்புலியூர்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடக்கே 8 கி.மீ. |
இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு குமரேஸ்சுவரர் திருக்கோயில் |
மலையன்குளம்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கிழக்கே 12 கி.மீ. |
செய்யாற்றின் தென் பகுதியில் இக்கோயில் 375 ச.அடி நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மகாமுனீசுவரர் திருக்கோயில் |
புலிவாய்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கே 7 கி.மீ. |
இவ்வூரில் மூன்று சிவத்தலங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
விசூர்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
மானாம்பதிக்கு தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அகிலாண்டேஸ்வரி. ஒரு கால பூஜை. மாசி மகத்தன்று உற்சவம். மேலும் இவ்வூரில் புண்டரீகாட்ச பெருமாள் கோயிலும் உள்ளது. |
அருள்மிகு குந்தேசுவரர் திருக்கோயில் |
தண்டரை
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
மானாம்பதிக்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன் மற்றும் தாந்தோணி விநாயகர், பாலசுப்ரமண்யர், லஷ்மி நாராயண பெருமாள். |
அருள்மிகு திருக்காலீஸ்சுவரர் திருக்கோயில் |
சீதஞ்சேரி
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
சாலவாக்கத்திலிருந்து வடக்கே 11 கி.மீ. |
பாலாற்றின் தென்கரையில் இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் சிவகாமி. கிருஷ்ணன் வழிபட்ட தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. மூன்று கால பூஜை சித்திரை 12 நாள் உற்சவர் நடைபெறுகிறது. |
அருள்மிகு வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில் |
திருப்புலிவனம்
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு வடக்கே 5 கி.மீ. |
தூங்கானை மாட அமைப்பிலான இக்கோயில் 4-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூன்று நிலை இராஜகோபுரமும், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். திருபுலிவனநாதர், அம்மன் அபிதகுசாம்பாள், வியாக்ர தீர்த்தம். ஒரு முனிவர் சாபத்தால் புலியாகப் பிறந்தும் இறைவனை வழிபடும் வழக்கம் விடாமல் தொடர்ந்து இத்தலத்தில் பூசித்து சாப விமோசனம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு வியாரபுரீசுவரர் என்றும் ஊர் திருபுலிவனம் என்றும் வழங்கப்படுகிறது. இலிங்கத் திருமேனியில் புலியின் கால் சுவடுகள் மற்றும் தலை முடியின் உச்சியில் சிறு குடுமியும் விளங்குகின்றது.
இத்தலத்தை போற்றி திருநாவுக்கரசர், பட்டினத்தடிகள் மற்றும் சிவஞான வள்ளலார் என்பவர் அருளிய வள்ளலார் சாத்திரம் என்னும் நூலில் 64 பாடல்களும் இப்பெருமனைப் போற்றியுள்ளனர். கல்வெட்டுக்களில் இவ்வூரை புலிவலம் என்றும் இறைவனைப் திருப்புலிவலமுடையார், ஆளுடையார் திருப்புலிவலமுடையார், திருப்புலிவலமுடைய நாயனார் என்றே குறிக்கப்பட்டுள்ளன. இரண்டு கால பூஜை. கார்த்திகை இலட்சதீபத்திருவிழா நடைபெறுகிறது. |
அருள்மிகு பாலசுந்தரேசுவரர் திருக்கோயில் |
மானாம்பதி
உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
உத்திரமேரூர்க்கு மேற்கே 10 கி.மீ. |
இக்கோயில் செய்யாற்றின் தென்பகுதியில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் என்றழைக்கப்படும் வனசுந்தரேசுவரர். அம்மன் பெரியநாயகி. பிரகாரத்தில் பரிவார மூர்த்தங்கள் உள்ளன. வானமாதேவி என்றழைக்கப்படும் இந்திராணி இத்தலத்தில் இலிங்கம் தாபித்து பூசித்த தலம். அதனால் இறைவனுக்கு வான சுந்தரேசர் என்றும், இவ்வூர் வானமாதேவிபுரம் என்றும் பின்பு வானமதி. தற்போது மானாம்பதி என்றழைக்கப்படும் தலம். கல்வெட்டுக்களில் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. ஒரு கால பூஜை. தை பூசம் அன்று உற்சவம் நடைபெறுகிறது. |
|
|