அருள்மிகு வான்மீகநாதர் திருக்கோயில் |
அருள்மிகு வான்மீகநாதர் திருக்கோயில்
செய்யூர்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்குத் தென்கிழக்கே 29 கி,மீ தொலைவில் உள்ளது. செய்யூர் என அழைக்கப்படும் சேயூர். |
300-400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை, அதன் மகாமண்டபத்துத் தூண்களும், அதில் உள்ள அரிய சிற்பங்களும் பறைசாற்றுகின்றன. மனுநீதிச் சோழனின் மைந்தன் வீதி விடங்கனின் தேர்க்காலில், பசுங்கன்று மடிதல்; தாய்ப்பசு, ஆராய்ச்சி மணியை அடித்தல், மனுநீதிச்சோழன் வீதிவிடங்களை தேர்காலில் இடுதல், இறைவன் எழுந்தருளி நீதிபாலித்தல் அத்தனையும் ஒரே தூணின் அடிப்பாகத்தில் நான்கு புறமும் அழகூட்டுகின்றன. |
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் |
வீரட்டேசுவரர்
படப்பை
காஞ்சிபுரம் |
தாம்பரத்திற்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது படப்பை |
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஆதிபடப்பை ஈசுவரன் கோயில் அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களிலும் ஈசுவரன் வீரட்டேசுவரர் என்றே திருநாமங்கொள்கிறார். |
அருள்மிகு நல்லிணக்கேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு நல்லிணக்கேஸ்வரர் திருக்கோயில்,
எழுச்சூர்,
காஞ்சிபுரம். |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதிக்கு அருகில், எழுச்சூர் எனும் அழகிய கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
எழுச்சூர் எனும் கிராமத்தில் சிவாலயம் மிகச் சாந்நித்தியமானது. இறைவன் - நல்லிணக்கேஸ்வரர். அம்பாள் - தெய்வநாயகி. |
அருள்மிகு வாடாமலர் ஈஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு வாடாமலர் ஈஸ்வரர் திருக்கோயில்
உரோடகம்
காஞ்சிபுரம் |
திருக்கழுக்குன்றத்திலிருந்து 6 கி.மீ |
உரோடகம் என்று வழங்கின்றது. வாடாமலர் ஈஸ்வரர் கோயில், அம்பாள் சந்நிதி இல்லை. மல்லிகை மலர் கொண்டு மட்டும் ஈசனை வழிபடும் வழக்கம் உள்ளது. மகப்பேறு கிடைக்கும். திரைப்படத் துறையினரும் வழிபடுகின்றனர். |
அருள்மிகு புலிவலமுடைய ஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு புலிவலமுடைய ஈசுவரர் திருக்கோயில்
புலிவலம்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம்- உத்திரமேரூர் பாதையில் 22 கி.மீ உத்தரமேரூரிலிருந்து 5 கி.மீ |
புலிவலமுடைய ஈசுவரர் அமிர்தகுஜாம்பாள் சிவாலயம். ராசகோபுரம் உள்ளது. கல்திருப்பணி பெரிய கோயில். சிம்ம வாகனத்தில் குருபகவான் பயணம் செய்யும் திருக்கோலம் உள்ளது. இவரை சிம்மராசிக்காரர்கள் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி உயர்வடைவார்கள். |
அருள்மிகு நல்லிணக்கேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு நல்லிணக்கேஸ்வரர் திருக்கோயில்,
எழுச்சூர், ஓரகடம், காஞ்சிபுரம். |
சென்னை தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஓரகடம். இங்கிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தால், எழுச்சூர் கிராமத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு உள்ளே பயணித்தால், நல்லிணக்கேஸ்வரரின் அற்புத கோயிலைத் தரிசிக்கலாம். |
இங்கு விபூதிப் பிரசாதம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இந்த விபூதியை தினமும் இட்டுக் கொள்வதால், தீராத வியாதியும் தீரும்; இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் இழந்ததைப் பெறலாம் என்பது உறுதி! |
அருள்மிகு மாகாளீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு மாகாளீஸ்வரர் திருக்கோயில்,
ஜவஹர்லால் தெரு,காஞ்சிபுரம். |
காஞ்சிபுரம்- காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் உள்ள மாகாளீஸ்வரர் திருக்கோயில், ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது. |
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு மாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தலபுராணம். அவர்களுக்கு பாவ நிவர்த்தி கிடைத்த இந்த கோயிலுக்கு வந்து மாகாளீஸ்வரரைத் தொடர்ந்து வழிபட்டால், திருமணத்தடை நீங்குவதோடு, கால ஸர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன் அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்! இங்கே ராகுவும் கேதுவும் மனித உருவில் காட்சி தருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளில் மூலவரைச் சுற்றி அமைந்துள்ளனர். ஸ்தல விருட்சமான வன்னி மரத்தடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். தோஷ நிவர்த்திகளுக்காக இங்கு நாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ராகு-கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. |
அருள்மிகு வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
உத்திரமேரூர், காஞ்சிபுரம். |
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன. |
இழந்த பதவியைத் தருவார் வானசுந்தரேஸ்வரர் ராஜராஜசோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என எல்லோராலும் பெருமிதத் துடன் அழைக்கப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடி<யமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெ<யர் சூட்டி மகிழ்ந்தான். தற்போது மானாம்பதி என அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் உள்ள சிவன்கோயிலில் இன்றைக்கும் இருக்கிறது ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு. மேலும், வேதம் கற்ற அந்தணர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது அந்தக் கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. இங்கே, பெரி<யநா<யகி சமேதராக அருள்பாலிக்கிறார் வானசுந்தரேஸ்வரர். மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நா<யன்மார்கள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. இழந்த பதவியையும் செல்வத்தையும் பெற வேண்டி, இந்திரன் பூஜித்து வணங்கி<ய தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சூரபத்மனால் சிறை வைக்கப்பட்ட இந்திரன், இங்கு வந்து தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரை வேண்டி, இழந்ததையெல்லாம் மீட்டான். மானாம்பதி வானசுந்ரேஸ்வரரை கண்ணார தரிசித்து, மனதார வேண்டுடினால். இழந்த பதவியை மீண்டும் பெறலாம். |
|
|