அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் |
பத்மனாபபுரம், கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
நாகர்கோயிலிருந்து வடமேற்கே 12 கி.மீ. |
இக்கோயில் 2-59 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 5 நிலை இராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கியும், அம்மன ஆனந்தவல்லி தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். மூலவரைக் கல்குளம் மகாதேவர் என்றும் அழைப்பர். வெளிப்பிரகாரத்தில் ஆதிமூலவ சுவாமி சன்னிதி உள்ளது. முற்காலத்தில் கல்குளம் என்ற பெயருன் வேணாட்டு மன்னர்களில் தலைநகராக இவ்வூர் திகழ்ந்தது. பரசுராமர் ஸ்ரீவர்த்தமானபுரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டினார். பின்னர் க்ஷத்திரிய குலத்தில் சோமவம்சத்தில் தோன்றிய பானுவிக்கிரமன் என்ற இளவரசனிடம் தனது வாளைக் கொடுத்துவிட்டு ஸ்ரீவர்த்தமானபுரத்தைத் தலைநகராக அமைத்து அரசாளுமாறு கட்டளையிட்டார் ஸ்ரீவர்த்தமானபுரமே தற்போது பத்மநாபபுரம் என்று தலவரலாறு கூறுகிறது, மண்டபத் தூண்களில் கர்ணன், அர்ச்சுனன், கங்காளநாதர், வேணுகோபாலன் முதலிய அற்புதத் திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன.
கல்வெட்டுக்களில் இவ்வூரைக் கல்குளம் என்றும், இறைவர் கல்குளத்து மகாதேவர் என்றும் குறிப்பிட்ப்பட்டுள்ளன. மார்த்தாண்வர்மர் தனது நாட்டிற்கு வேணாடு என்ற பெயரை மாற்றித் திருவிதாங்கூர் என்று பெயரிட்டார். |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
திற்பரப்பு, கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
திருவட்டார்க்கு வடக்கே 11 கி.மீ. |
கோதையாற்றின் கிழக்குக் கரையில் இக்கோயில் 2-35 ஏக்கர் நிலப்பரப்பளவில் பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் உமாதேவி, உள்பிரகாரத்தில் விநாயகர். முருகப் பெருமான், பாலகிருஷ்ணன், சாஸ்தா, பகவதியம்மன், அனுமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.
தக்கனை வதம் செய்து அக்கோபம் தனிய இத்தலத்திற்கு வந்து அமர்ந்தார் என்றும், கோபத்தின் உச்சநிலையை காணப்பயந்து நந்தி அவர் முன்னால் நிற்க முடியாமல் வடக்கு ஒரமாக ஒதுங்கியிருந்பபதாகவும், இதனால்தான் இறைவர் மேற்கு நோக்கியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர். பத்மநாபபுரத்தைச் சுற்றி அமைந்துள்ள புகழ் பெற்ற 12 சிவாலயங்களில் இத்தலம் மூன்றாவதாகும். இக்கோயிலின் அருகில் அருவி உள்ளது. நாள்தோறும் 5 கால பூஜை. பங்குனி மாதத்தில் பிரமோற்சவமும், மார்கழி திருவாதிரையிலும், சிவராத்திரிலும் உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
கப்பியரை, கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலக்கு மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
திருவிதாங்கோடு, கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலைக்கு தென்மேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 2-40 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 1200 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் |
இரணியல், கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலைக்கு தெற்கே 7 கி.மீ. |
குடவரைக் கோயிலாக இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மார்த்தாண்டவர்ம அரசனால் கட்டுவித்ததால் மூலவர் மார்த்தாண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். |
அருள்மிகு தீம்பாலநாதர் திருக்கோயில் |
பொன்மனை, கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
திருவட்டாரிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். பத்மநாபபுரத்தைச் சுற்றி அமைந்துள்ம 12 சிவாலயங்களில் இத்தலமும் ஒன்றாகும். நாள்தோறும் மூன்று கால் பூஜை நடைபெறுகிறது. மார்கழி திருவாதிரையிலும், மகாசிவராத்திரிலும் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலுக்கு அருகில் மகாதேவர் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
வாழ்வச்சகோஷ்டம், கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலையிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. |
திருப்பன்றிக்கோடு மகாதேவர் திருக்கோயில் என்று வழங்கப்படுகிறது. இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இரணியாக்ஷன் கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற திருமால் ஒற்றைக் கொம்போடு கூடிய பன்றியில் உருவெடுத்து அசுரனைக் கொன்று பூமியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். வெற்றி மமதையால் அரக்க குணம் பெற்ற அப்பன்றி, உலகத்தாரைத் துன்புறுத்தி, கடலுக்குள் குதித்து அட்டூழியம் செய்யவே, சிவபெருமான் தோன்றி அதன் கொம்பை முறித்து ஆதரித்தருளினார். இக்காரணத்தாலே மூலவர் திருப்பன்றிக்கோடு மகாதேவர் என்றழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் இத்தலமும் ஒன்றாகும். கேரளக் கட்டடக் கலைக்கும் அமைப்பிற்கும், சிறப்புக்கும் எடுத்துக் காட்டாக இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக் அருகலி பகவதியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு அம்மன் பரமசக்தியாக காட்சியளிக்கிறார். வலதுபக்கம் திருமால் சன்னிதியும், இடப்பக்க சிவபெருமான் தேவியாரோடும் காட்சியளிக்கின்றனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மகிஷாசுரமர்த்தினி சிறப்பாகப் போற்றப்படுகிறார், ஆடிச் செவ்வாய் அனைத்துப் பௌர்ணமி நாட்களிலும் உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
கூத்தநல்லூர், கல்குளம் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
தக்கலையிலிருந்து வடக்கே 5 கி.மீ. |
இக்கோயில் பன்னிப்பாக்கம் மகாதேவர் கோயில் என்று கூறுவர். இக்கோயில் 64 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அர்ச்சுனனர் வணங்கிய தலம். பத்மநாபபுரத்தைச் சுற்றி அமைந்துள்ள 12 சிவாலயங்களில் இத்தலமும் ஒன்றாகும்,. இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. மகாசிவராத்திரியிலில் உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
இரவிபுதூர், நாகர்கோயில் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
சுசீந்திரத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
வடிவீஸ்வரம், நாகர்கோயில் வட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் |
நாகர்கோயிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. |
அழகம்மைக்கோயில் பழையாற்றின் கரையில் கிழக்கு நோக்கிய இக்கோயில் உள்ள மூலவர் சுயம்புமூர்த்தியாக காட்சியளிக்கிறார். அம்மன் அழகேஸ்வரி, கோயிலும் முன்பு திருக்குளம் உள்ளது. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், சேரமான் பெருமாள் நாயனார், மெய்கண்டார், சனீஸ்வரர், நாகராஜர், காசிவிஸ்வநாதர் முதலிய சன்னிதிகள் <உள்ளன.இத்தலம் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்தைக் குறித்துப் பாடியுள்ளார். கல்வெட்டுக்கள் மூன்று உள்ளன. கேவிலுக்கு மானியங்களை அளித்த விவரத்øக் குறிக்கின்றன. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகின்றன. |
|
|