அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் |
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பரமேஸ்வர சுவாமி திருக்கோயில் |
பஞ்சமாதேவி, கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு புஷ்வனநாத சுவாமி திருக்கோயில் |
புன்னம், அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராஜேந்திர சுவாமி திருக்கோயில் |
ராஜபுரம்,அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு விருத்தாசலேஸ்வரர் திருக்கோயில் |
சேனப்பிரட்டை, கரூர் மாவட்டம் |
கரூர்க்கு கிழக்கே 2 கி.மீ. |
ஆம்பிராவதி ஆற்றின் தென்கரையில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விருத்தாம்பிகை. |
அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் |
நாகம்பள்ளி, கரூர் மாவட்டம் |
அரவக்குறிச்சிக்கு வடக்கே 6 கி.மீ. |
ஆம்பிராவதி ஆற்றின் கிழக்கு கரையில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மரகதவல்லி. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
நெரூர் - தெற்கு, கரூர் மாவட்டம் |
கரூர்க்கு வடகிழக்கே 9 கி.மீ. தூரத்தில் காவிரியாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. இத்தலத்தில் சதாசிவப்பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்த தலம். புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு மரகதலீஸ்வரர் திருக்கோயில், |
முன்னூர், கரூர் மாவட்டம் |
கரூர்க்கு மேற்கே 18 கி.மீ. |
நொய்யல் ஆற்றின் தென்பகுதியில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் மரகதாம்பிகை. தனிச்சன்னிதியில் வேலாயுதப்பெருமாள் காட்சியளிக்கிறார். தலவிருட்சம் மாமரம். சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயிலாகும். இரண்டு கால் பூஜை. தைப்பூசம் மற்றும் மாசி மகத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
வெண்ணெய்மலை, கரூர் மாவட்டம் |
கரூர்க்கு வடக்கே 3 கி.மீ. ஆம்பிராவதியாற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. |
இக்கோயில் வெண்மையான நிறமுடைய பாறைகளை <உடைய சிறிய குன்றின் மேல் பகுதியில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.. 10 அடி உயர கோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் காசிவிஸ்வநாதர், அம்மன் விசாலாட்சி. இத்தலத்தில் மூலவர் பாலசுப்ரமணியர் மிக விஷேசமானவர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளிய தலம், பிரமன், தேவர்கள் வழிபட்ட தலம். காமதேனுவால் <உருவாக்கப்பட்ட தேணு தீர்த்தத்தில் தீர்த்தமாடி முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தைப் பேறுகிட்டும். இம்மலையைவலம் வந்தால் கயிலை மலையை வலம்வந்த பலன் கிட்டும் எனத் தலபுராணம் கூறுகிறது. நான்கு கால பூஜை. தை மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு மெய்ப்பொருள்நாதர் திருக்கோயில் |
மொடக்கூர் - மேற்கு, கரூர் மாவட்டம் |
பள்ளப்பட்டிக்கு மேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் நல்லமங்கையம்மை. |
|
|