அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
கல்லிக்குடி
திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் |
திருமங்கலத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. |
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அருகில் லாலாபுரத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
கரைக்கண்ணி
திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் |
தி.கல்லுபட்டியிலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. |
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் |
காட்டுகருப்பன்பட்டி
உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் |
உசிலம்பட்டியிலிருந்து கிழக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
திடியம்
உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் |
உசிலம்பட்டியிலிருந்து தென்கிழக்கே 11 கி.மீ. |
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மாணிக்க சொக்கநாதர் திருக்கோயில் |
மேலதிருமாணிக்கம்
உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் |
உசிலம்பட்டியிலிருந்து தென்மேற்கே 17 கி.மீ. |
இக்கோயில் 1-11 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் மீனாட்சியம்மை. தீர்த்தம் காசி தீர்த்தம். தலவிருட்சம் வில்வம். இக்கோயிலை திருமலைநாயக்கர் மன்னரால் விரிவுபடுத்தி கட்டப்பெற்ற கோயிலாகும். நான்கு கால பூஜை. திருவாதிரை அன்று பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
குடிப்பட்டி
உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் |
சாப்டூர்க்கு வடக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
சோழவந்தான்-624 214, மதுரை மாவட்டம்
|
மதுரையின் வடமேற்கே 18 கி.மீ. |
|
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
சூலப்புரம்-626 535, மதுரை மாவட்டம் |
மதுரையின் மேற்கு (உசிலம்பட்டி, எழுமலை வழியாக 50 கி.மீ.) |
|
அருள்மிகு மாணிக்க வாசகர் திருக்கோயில், |
திருவாதவூர், மதுரை மாவட்டம் |
+91 84897 04093 | மதுரை அருகே மேலுார் செல்லும் வழியில் 20 கி.மீ. துாரத்தில் திருவாதவூரில் மாணிக்கவாசகர் கோயில் அமைந்துள்ளது. |
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
இவருக்கு ஆண்டு தோறும் ஆனி மகத்தன்று குருபூஜை நடைபெறும். இந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். மதியம் அன்னதானம் நடைபெறும். விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். |
பூஜை நேரம்: ஆனி மகத்தன்று குருபூஜை நடைபெறும் |
|
|