அருள்மிகு சொர்ணகாளி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சொர்ணகாளி தேவஸ்தானம் திருக்கோயில்,
மருதவனம் கண்டதேவி,
மதுரை மாவட்டம் 630314. |
+91 4575-232516, 04575-239542 | மதுரையிலிருந்து 30கிமீ தொலைவில் உள்ளது. கண்டதேவியில் பெரியநாயகி உடனுறை சிறகிலிநாதர் கோயில் உள்ளது. இவ்விடத்தில் சிறகுககள் இழந்து ஜடாயு மோக்ஷம் பெற்ற போது மகாலிங்கத் திருமேனி அவரது ஆன்மாவைத் தாங்கியதால் சிறகிலிநாதர் ஆனார். காளையார் கோயில் பாடல் பெற்ற தலம் சிவகங்கை தொண்டி பாதையில் 18 கிமீ தொலைவில் உள்ளது. பையூர், பிள்ளைவாயல் பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. |
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் அம்மன் அருள் பாலிக்கும் தலங்கள் புராணப் பின்னணி கொண்டவை. இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டிணமும் ஒன்று. அவ்வரிசையில் உருவான தலம் மருதவனம். சண்டாசுரனை அழித்தது கண்டதேவி. அவ்வாறு வதம் செய்ய தேவர்கள் கட்டிய கோட்டை தேவக்கோட்டை அவனை வென்ற இடம் வெற்றியூர். அம்பாளின் வெற்றியினைக் கொண்டாடி தேவர்கள் எதிர்கொண்டு பூத்தூவி அழைத்தது பூங்குடி. இவளே மருதவனத்துக் காளியுமாகும். இராமாயணக் காலத்துத் தலமான கண்டதேவி கோயிலுக்கு வடக்கே குங்குமக் காளி கோயில் உள்ளது. பிடாரிக்கு உற்சவம் நடந்து பின்னே பெரிய கோயில் உற்சவம் நடைபெறுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் நகரத்தாரால் ராஜகோபுரம் மற்றும் இதர திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இவள் மகா சண்டியாக எண் கரத்துடன் திகழ்கிறாள்.
காளையார் கோயில் காளி பூஜித்தத் தலம். காளை பூஜித்ததால் காளிபுரி எனவும், ரிஷபம் பூஜித்ததால் இடபபுரி எனவும் மகாகாளர் என்று கூறப்படும் ஸ்ரீ கருப்பர் சுவாமி பூஜித்ததால் கணபுரி என்று பெயர் பெற்றது. தேவதாரு மரங்கள் நிரம்பிய தேவதாருவனம். சுயம்பு லிங்கமாகக் காட்சி தந்த சிவனை சொர்ணவள்ளி என்கிற பெயரோடு வழிபட்டதாகப் புராணம். மேலும் பிரமன், மகாலட்சுமி, மால், குபேரன், இந்திரன், ஐராவதம், நைத்ருப முனி, ஸ்ரீராமர், வேதகன், காம்பிலி நாட்டு மன்னன் நிராகன், சிங்கள மன்னன் வணங்கிப் பேறு பெற்றத் தலம். |
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. |
அருள்மிகு வெயிலுகந்த காளி திருக்கோயில் |
அருள்மிகு வெயிலுகந்த காளி திருக்கோயில்,
திருப்பரங்குன்றம், மதுரை 625005,
மதுரை மாவட்டம். |
+91 95787 91355 | மதுரையிலிருந்து 5கிமீ தூரம் திருப்பரங்குன்றம். தென் கண்மாய் அருகே இருப்புப் பாதைக்கும் நெடுஞ்சாலைக்கும் நடுவே எழுந்தருளியிருக்கும் ஆலயம். மதுரை திருநெல்வேலி என்.எச். 7ல் 8வது கிமீல் கோயில். தென்கண்மாய்க்கரை ரயில்வே லைன் தாண்டினால் கோயில். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேரடிப் பேருந்துகள் கிடைக்கும். |
திருமலை நாயக்கர் வரலாற்றோடு இணைந்த காளி. அம்மை நோய் தீர தெருக்கூத்து நடத்தி வழிபட்டால் வழி பிறக்கும் என அறிந்து மன்னன் அருகே உள்ள வலையன்குளம் மற்றும் நல்லர் என்கிற ஊரிலிருந்து கலைஞர்களை வரவழைத்து நாடகம் நடத்தினார். உயிர் பலி உலுக்கி வாட்டிய இந்த ஊரில் அம்மை நோயும் தீர்ந்தது. இன்றும் பல்வேறு வகையான நேர்த்திக் கடன் செலுத்தி அம்மை நோய் நீங்கிட வழிபடுகின்றனர். மதுரைக்குத் தெற்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. பத்ர காளியம்மன் கோயில். 1852ல் கட்டப்பட்டது. திருமங்கலம் பாண்டிய குல சத்ரிய நாடார் உறவின் முறையினர் கட்டியது. |
பூஜை நேரம்: காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை. |
அருள்மிகு ஜனகை மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ஜனகை மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
சோழந்தான் எஸ்.ஒ.,
அரசரடி போஸ்ட் 625214,
வாடிப்பட்டி வட்டம்,
மதுரை மாவட்டம். |
+91 4543-258987, 9443192101. | மதுரையில் குருவித்துறைப் பாதையில் உள்ளது. தென்கரையில் மூலநாதர் கோயில் உள்ளது. மதுரைக்குவடமேற்கே 26 கிமீ ல் இந்தக்கோயில் வைகைக் கரையில் உள்ளது. 2கிமீ மேற்கே ஜனக நாராயணப் பெருமாள் கோயிலும் உள்ளது. (ராமர் தலம்) நாககாளியம்மன் முத்துத் தேவன்பட்டி தேனி மாவட்டத்திலும், காளியம்மன் ஆண்டிப்பட்டியிலும் அருள் பாலிக்கின்றனர். |
ஜனக மகாராஜாவால் தல யாத்திரையின் போது வைகைக் கரையில் வழிப்படப்பட்ட ராமாயணக் காலத் தலம். சோழ மன்னனுக்கு உகந்த அம்பாளாக விளங்கியதால் சோழன் உகந்தான் என்பதே மருவி சோழவந்தான் ஆனது. சூலம், உடுக்கை, தீச்சட்டி, மற்றும் <ஞானப்பால் கிண்ணம் ஏந்திய நிலையில் அம்பாள். இரண்டடி உயர சுயம்பு மூர்த்தி. சோழவந்தானின் காவல் தெய்வம். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை. |
|
|