அருள்மிகு சுப்பிரமணியஸ்வாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியஸ்வாமி திருக்கோயில்,
சிவப்பள்ளி திருச்செம்பள்ளி,
செம்பனார் கோயில் அஞ்சல்,
வழி மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் 609309. |
+91 4364-281134, 9943797974 | மயிலாடுதுறை பொறையார் சாலையில் 10 கிமீ தூரத்தில் உள்ள ஊர் செம்பனார் கோயில். அதன் அருகே உள்ள கோயில். முருகன் கோயில் என்று கேட்டால் தான் தெரியும். புஞ்சை பாடல் பெற்ற தலம் அருகில் கிடாரம் கொண்டான் சாலையில் 3 கிமீ தூரத்தில் உள்ளது. |
இத்தலத்தில் முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மயில் திசை மாறி உள்ளது. மகாராஜக் கோலம் என்று போற்றப்படுகிறார். காவேரி ஆறு குறுக்கே ஓடுவதால் எவ்வாறு மயிலாடுதுறையை தக்ஷிண மாயவரம் உத்திர மாயவரம் எனப் பிரித்து வள்ளளார் கோயிலும் மயூரநாதர் கோயிலும் உள்ளதோ, அதேபோல் இத்தலத்தில் ஊரினை இரு பகுதியாகப் பிரித்த போது சிவப்பள்ளி மற்றும் செம்பொன் பள்ளி எனக் கொள்ளப்பட்டது. இந்தச் சிவம்பள்ளி தான் நாளடைவில் செம்பள்ளி ஆனது. இக்கோயில் சிதிலமடைந்ததால் தற்போது முருகன் கோயிலில் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தக்கன் வேள்வி கீழ்ப்பரசலூரில் (வீரட்டானத் தலம்) நடந்த போது அதை அழிக்க முருகன் மற்றும் விநாயகப் பெருமானின் <உதவியை நாடுகிறார் சிவபெருமான். வீரபத்திரனும் தோன்றி இத்தலத்தின் வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது. முருகன் இத்தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கோட்செங்கோட் சோழனால் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. தாகத்தினால் விநாயகரும் அங்குசத்தை ஊன்றி நீர் எடுத்த போது அவர் அங்கேயே கைதாகிறார். இன்றும் விநாயகர் குளம் என்கிற இடம் உள்ளது. இந்தப் பகுதியின் தெற்குப் பக்கத்திலிருந்து திருமஞ்சனத்திற்காக முருகன் எழுந்து அருளுவதாகவும் கூறப்படுகிறது. வீரபத்திரன் உருவம் சிறப்பாக அமைந்துள்ளது. அத்தலத்திலிருந்த கைலாசநாதர் மற்றும் பார்வதி உருவங்களும் இந்த முருகன் கோயிலில் உள்ளன. எனவே சோமாஸ்கந்தர் அமைப்பாக மூர்த்தங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன. சித்திரை மாதம் 12 நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது அங்கப்பிரதக்ஷிணம் செய்து வழிபட திருமண வரம் கிட்டும், நினைத்த காரியம் கைகூடும். (அப்பர் வைப்புத் தலம். 6-71-1) |
பூஜை நேரம்: காலை 10 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை |
அருள்மிகு குமரன் திருக்கோயில் |
அருள்மிகு குமரன் திருக்கோயில்,
(மெய்கண்டார் திருக்கோயில்),
நீல தெற்கு வீதி,
நாகப்பட்டணம் 611001,
நாகை மாவட்டம்.
|
+91 9994198391, 9442929270 | நாகை நகரத்தின் பிரதானப் பகுதியில் உள்ளது. பாடல் பெற்ற தலம் காயாரோகணேஸ்வர் கோயிலிற்கு அருகே உள்ளது. |
இத்தலத்தில் முருகன் மயில் வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனத்தில் உள்ளார். முருகனைப் பற்றித் திருப்புகழ் உள்ளதாக கருதப்படுகிறது. தீர்த்தப் பிரசாதம் தொழு நோய் மற்றும் தோல் வியாதிகளைப் போக்கும் என்று ஐதீகம். நாகையில் உள்ள உப்பானற்றின் கரையில் அமைந்த 12 சிவன் கோயில்களில் ஒன்றான கருமுகீஸ்வரர் கோயில் முற்றிலும் சிதிலமடைந்தது. ராஜா மேகராஜன் காலத்தில் நல்ல நிலையில் இருந்த இக்கோயில் மண்ணுக்குள் புதைந்தது. புதுச்சேரியில் வெள்ளையரிடம் பணி புரிந்து வந்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் கனவில் முருகன் தோன்றி இக்கோயில் காயாரோகணேஸ்வரர் கோயிலின் அருகே மீண்டும் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குபேரன் சன்னதியும், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி சன்னிதியும் உள்ளது. ஐராவதத்தை தெய்வயானைக்கு சீதனமாக இந்திரன் கொடுத்தான் அதுவே இக்கோயில் முருகனின் வாகனமாக உள்ளது. |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
தேவஸ்தானம் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
பிரம்ம மங்களபுரம்,
அயனீச்சுரம்,
பிரம்பில் பெரம்பூர்,
பெரம்பூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்,
609406. |
+91 4364- 253202, 9444881419, 9486631196 | மயிலாடுதுறை பொறையார் பாதையில் வரும் மங்கநல்லூரிலிருந்து 6 கிமீ கிழக்கே உள்ள தலம். நெடுவாசலிலிருந்து வருவோர் கொங்குராயன் மண்டபத்தின் குளத்திற்கு எதிரே வலப்புறம் சென்று மங்கநல்லூர் சாலையைப் பிடித்து திருவிளையாட்டம், வேலம் புதுக்குடி ஊர்களைத்தாண்டியும் வரலாம். இது சுத்துப்பாதை. முருகர் கோயில் என்றால் தான் ஊராருக்குத் தெரியும். |
இத்தலத்தை வசிஷ்டர் வழிபட்டதால் வசித்ரர்சேரி என்கிற பெயர் உண்டு. விசேஷமாக இரண்டு தக்ஷிணாமூர்த்திகள் உள்ளனர். குகதக்ஷிணாமூர்த்தி*ட மயில் மேல் உள்ளார். முருகன் கோயிலே முதலில் தெரிகிறது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு சுப்பிரமணியசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி ஆறுமுக வடிவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். உள்ளே கோயிலைச் சுற்றி வரும் போது தக்ஷிணாமூர்த்தி முதலியவர்களைத் தாண்டி வரும் போது ஓர் முழுமை வாய்ந்த சிவன்கோயில் உள்ளது. இதற்கென தனியாக சண்டிகேஸ்வரர், துர்க்கை என கோஷ்ட மூர்த்தங்கள் சூழ விளங்குகிறது. முன் காலத்தில் சிதிலம் அடைந்த கோயிலில் இருந்த பிரம்மபுரீஸ்வரர் மற்றும் அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மொத்தம் 12 இடங்கள் உள்ளதாகவும் அயன் ஈச்சுரம், பிரம்பு விருக்ஷம் ஆகியவை சேர்த்துப் பார்க்கும் போது பிரமன் வழிபட்ட இத்தலமே வைப்புத்தலமாகக் கொள்ளப்படுகிறது. முருகப் பெருமான் போர் முடித்து வரும் போது வழியில் மலைக்குடியில் பழைய சிவன் கோயில் உள்ளது. இந்தச் சிவனை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. முள் நிறைந்த சிறிய மூங்கில் போன்ற பிரம்பு மரங்கள் உள்ளன. சோழ காலத்தில் கட்டப்பட்ட கோயில். (அப்பர் வைப்புத் தலம் 6-70-6) |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
|
|