அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
முருகமங்கலம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருமணஞ்சேரிக்கு வடமேற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
சோழம்பேட்டை, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ. |
காவிரிவடகரையில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் |
பண்டாரவாடை, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறைக்கு மேற்கே 3 கி.மீ. |
காவிரிவடகரையில் இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 400 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு தருமபுரீஸ்வரர் திருக்கோயில் |
மன்னம்பந்தல், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 2 கி.மீ. |
தருமபுரம் ஆதீன மடலாயம் இங்கு உள்ளது. இத்தலத்தில் இரண்டு கோயில்களான தருமபுரீஸ்வரர் கோயில், ஞானபுரீசுவரர் கோயில். கீழக்கோயில் எனப்படும் தருமபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியதும், அம்மன் அபயாம்பாள் தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். இரு பிரகாரங்களுடையது. சப்தமாதாக்களுள் இந்திராணி பூசித்த தலம். இயமன் திருக்கடவூரில் அமுதகடேசர் மீது அறியாமை மிகுதியால் பாசம் வீசியதால் விளைந்த
பாவத்தை இத்தலத்தில் தருமபுரீசரைத் தாபித்து வழிப்பட்டுப் போக்கிக் கொண்ட தலம். இத்தலம் அகத்தியாச்சிரமாக இருந்தது. தற்போது தருமபுர ஆதீனத்தின் ÷மற்பார்வையில் உள்ளது. இயமராஜா என்ற பெயருடன் இயமன் இத்தலத்தில் உள்ளார். இயமராஜ வழிபாடு இங்கு மிகச் சிறந்தது. இவ்வாலயத்தின் மேல்பால் உள்ள கோயில் இரண்டு பிரகாரங்களுடன், கிழக்கு நோக்கிய மூலவர் ஞானபுரீசுவர், அம்மன் ஞானாம்பிகை. இவ்வாலயம் ஆதீன ஆதிகுருமூர்த்திகள் சிவசமாதி எய்திய இடமாகும். இக்கோயில் நான்காவது மூர்த்திகளாகிய ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளால் திருக்கோயிலாகக் கட்டப்பெற்றது. அது முதல் சிவாகம விதிப்படி நித்ய நைமித்திக பூஜைகள் ஆதி சைவப் பெருமக்களைக் கொண்டு இயற்றுவிக்கப் பெற்று வருகின்றன.
ஆதீன ஸ்தாபகர் குரு பூஜை விழாவை ஒட்டி முன் பத்து நாட்களும் மகோற்சவம் நடைபெற்று வருகிறது. |
அருள்மிகு அமிர்தசுந்தரர் திருக்கோயில் |
மாணிக்கபங்கு, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
தரங்கம்பாடிக்கு வடக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 130 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயில் |
கீழ்மாத்தூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலுக்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுயம்புநாதசுவாமி திருக்கோயில் |
நரசிங்கநத்தம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அமிர்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
மூதூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலுக்கு தெற்கே 8 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மதங்கீசுவரர் திருக்கோயில் |
இளையாலூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலுக்கு தென்மேற்கே 3 கி.மீ. |
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு அக்னிபுரீசுவரர் திருக்கோயில் |
சேறுடையூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில். |
|
|