அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
கோதங்குடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. |
500 வருட முற்பட்ட கோயில். |
அருள்மிகு ஆலந்துறையப்பர் திருக்கோயில் |
நல்லத்துக்குடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறைக்கு தென்கிழக்கே 2 கி.மீ. |
அம்மன் மயிலாடு நாயகி. தலமரம் வில்வம். தீர்த்தம் சூரிய புஷ்கரிணி. சூரியன் பூசித்த தலம். சூரிய புஷ்கரிணியில் நீராடுவோர் தொழுநோய் முதலிய கொடிய சரும நோய்கள் பலவும் நீங்கப் பெற்று வருகின்றனர். இத்தலம் தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகும். திருநாவுக்கரசர் அருளிய அடைவுத் திருத்தாண்டகத்தில் இடம் பெற்றுள்ள தலம். |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
மறையூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மார்க்கசகாயர் திருக்கோயில் |
மூவலூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில், ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக
உள்ளார். அம்மன் சௌந்தர்யநாயகி. தலமரம் புன்னை. தீர்த்தங்கள் காவிரி, சந்திர புஷ்கரிணி, துர்க்கை புஷ்கரிணி, உபமன்யு கூபம் முதலியன.
புன்னைமரம் தலமரமாதனால் இத்தலம் புங்கவன ÷க்ஷத்திரம், சப்தமாதர்கள் வழிப்பட்டு பேறுபெற்ற தலம். பிரமன், திருமால், துர்க்கை வழிபட்ட தலம். பர÷மஸ்வரன், திருமால், பிரமன் மூலரும் இத்தலத்தில் காட்சியளித்ததால் மூவலூர் என்று பெயர். திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர் இத்தல
இறைவனைப் போற்றி பாடியுள்ளார். இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் 15 உள்ளன. கல்வெட்டுக்களில் இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூ<லூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. 5 கால் பூஜை நடைபெறுகிறது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
மாதிரிமங்கலம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
குத்தாலத்திலிருந்து தென்மேற்கே 2 கி.மீ. |
காவிரியாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுயம்புநாதசுவாமி திருக்கோயில் |
அரிவாளூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறையிலிருந்து தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
கொடவிளாகம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலிருந்து தெற்கே 9 கி.மீ. |
வீரசோழனாற்றின் வடகரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுயம்புநாதசுவாமி திருக்கோயில் |
திருவிளையாட்டம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
செம்பொனார்கோயிலிருந்து தெற்கே 7 கி.மீ. |
வீரசோழனாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் |
நெடுவாசல், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருவிளையாட்டத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் அகிலாண்டேஸ்வரி. இத்தலம் தேவார வைப்புத்தலம் திருஞானசம்பந்தர், அப்பர் தேவாரங்களில் இடம் பெற்றுள்ளது. |
அருள்மிகு சத்தரையீஸ்வரர் திருக்கோயில் |
தில்லையாடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருக்கடையூரிலிருந்து தெற்கே 4 கி.மீ. |
இக்கோயில் 195 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|