அருள்மிகு சங்கரநாதர் திருக்கோயில் |
உத்திரங்குடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருவிளையாட்டத்திலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
பண்டாரவாடை, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வழுவூர்க்கு தெற்கே ஒரு கி.மீ. |
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 1100 வருட முற்பட்ட கோயில். இவ்வூருக்கு வடகிழக்கில் நெய்க்குப்பையில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது சோமசுந்தரேஸ்வரர். |
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
கப்பூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
வழுவூருக்கு தெற்கே 2 கி.மீ. |
வீரசோழனாற்றின் வடகரையில் இக்கோயில் 103 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
கூழையூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
தேரழுந்தூரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. |
வீரசோழன் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். கூம்புவடிவத்திலுள்ளது. அம்மன் அபிராமியம்மை. கூழையர் அகத்தியர் அவர்பெயரால் கூழையூர் என வழங்கப்படுகிறது. அகத்தியர் வில்வலன் வாதாபியின் சூழ்ச்சியால் புலால் உண்டபாவந்தீரத்தேரழுந்தூர் வேதபுரீசுவரை வழிபட வந்தபோது தங்கிப் பூசித்த தலம். இத்தலம் திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகப் பதிகத்தில் இடம் பெற்றுள்ளதால் இத்தலம் வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. |
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் |
பாளையகூடலூர்-609 801, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
குத்தாலத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
மேலபருத்திகுடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
கோனேரிராஜபுரத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில் |
கெங்காதரபுரம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
கோமலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் நெம்மேலி என்ற இடத்தில் 90 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுயம்புநாதர் திருக்கோயில் |
பெரம்பூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மங்கநல்லூர்க்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயிலிலுள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு ஆதித்தேசுவரர் திருக்கோயில் |
பேராவூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
திருவாவடுதுறையிலிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. |
வீரசோழனாற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் ஞானாம்பாள். சிவலிங்கத் திருமேனி பெரியது. சிவாலயம் ஆதிச்தேச்சுரம் எனப்படும். இத்தலம் தேவாரவைப்புத் தலங்களில் ஒன்றாகும். அப்பர் சுவாமிகள் இரண்டு திருத்தாண்டகங்களில் இவ்வூரைக் குறித்துள்ளார். இவ்வூரிலுள்ள மாரியம்மன் கோயில் புகழ்மிக்கது. |
அருள்மிகு கோடீசுவர சுவாமி திருக்கோயில் |
கொத்தங்குடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
தேரழுந்தூருக்கு தெற்கே 5 கி.மீ. |
வீரசோழன் ஆற்றின் தென்பகுதியில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிருகந்நாயகி. உள்பிராகாரங்களில் வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர், துர்க்கை, நவக்கிரகங்களும் உள்ளன. குத்தன்எருது வாகனன் (சிவன்) எனப் ö£õருள்படுவதால் இவ்வூர் குத்தன்குடி எனப்பட்டது. இத்தலம் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில் இடம் பெற்றுள்ளது. இத்தலம் தேவாரவைப்புத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இவ்வூரில் காளியம்மன், ஐயனார், பிடாரி, மதுரைவீரன் முதலிய கிராம தேவதைக் ÷காயில்களும், பெருமாள் கோயிலும் உள்ளன. |
|
|