அருள்மிகு பிரசன்னவெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் |
பாண்டமங்கலம்,பரமத்திவேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம் |
+91 4268 230500 | |
|
அருள்மிகு பாண்டுரங்கர் திருக்கோயில் விட்டலபுரி, |
கொமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு நைனாமலை வரதராசப்பெருமாள் வகையறா திருக்கோயில் |
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு இலட்சுமி நாராயணபெருமாள் வகையறா திருக்கோயில் |
கொமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு இளையபெருமாள் (எ) வெங்கட்ரமணசாமி திருக்கோயில் |
கோரக்குட்டை,எறையமங்கலம், திருச்செங்கோடு வட்டம்,நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு நரசிம்மசாமி திருக்கோயில் |
நாமக்கல் நகர்,நாமக்கல் மாவட்டம் |
+91 4286 233999 | |
|
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் |
மோகனூர்-637 015,நாமக்கல் மாவட்டம். |
+91 94429 57143 | நாமக்கல்லிலிருந்து 17 கி.மீ. தொலைவில் காவேரி நதிக்கரையில் உள்ள ஊர். செட்டி புண்யம், திருவஹீந்திரபுரம், கூத்தனூர், இன்னம்பூர், நாச்சியார் கோயில், சித்பூர்(குஜராத்) ஆகிய தலங்களில் வணங்கிப் பெறும் நல்ல படிப்பை மாணவர்களுக்கு வழங்கக் கூடிய தலங்களில் இதுவும் ஒன்று. |
கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் நின்ற திருக்கோலம், கிழக்கு திருமுகம்.
திறக்கும் நேரம்:காலை 7.00 முதல் 11.00 வரை, மாலை 5.30 முதல் 8.00 வரை. |
அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் |
நாமக்கல் - 637 001 |
+91 4286 - 233999 | |
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சிறப்பு : ஆஞ்சநேயர் திருத்தலங்களில் மிகுந்த சிறப்புமிக்க தலம். தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள் இத்தலத்திற்கு வந்து பூஜைகள் செய்த பின்னரே புறப்படுவது வழக்கம். பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு பெரிய திரு மஞ்சனம் நடைபெறும். |
அருள்மிகு பொன் வரதராஜப் பெருமாள் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பொன் வரதராஜப் பெருமாள் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் தேவஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோயில்,
ராசிபுரம்,
வழி நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் 637408.
|
+91 9362110012, 9443515105. | சேலத்திற்கு தெற்கே 32கிமீ ல் இந்த ஊர். பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் கைலாசநாதர் கோயிலும் அதிலிருந்து சற்று தொலைவில் இக்கோயிலும் உள்ளது. |
பொன் வரதராஜபுரம் என்னும் புராதனப் பெயர் மருவி. வரதராஜபுரம், ராஜபுரம் என ஆகி ராசிபுரம் ஆனது. இராம லக்ஷ்மணர்கள் மூர்ச்சையான போது சஞ்சீவி பர்வதத்திலிருந்து மூலிகையினை எவ்வாறு அனுமனால் கொண்டு வரமுடியும் என வாலியின் மைந்தன் அங்கதன் கேட்ட போது அபய ஹஸ்தத்துடன் காட்சி தந்த கோலத்தில் இந்தத் தலத்து அபய ஹஸ்த ஆஞ்சநேயர் பிரசித்தம். அருணகிரிநாதர் திருப்புகழில் இடம் பெற்ற தலம். அருகே கைலாசநாதர் கோயில் உள்ளது. வல்வில் ஓரி வெள்ளைப்பன்றியை வில்லால் வேட்டையாட வந்த போது அம்புகள் தீர்ந்து தன் வாளால் அதனை வெட்டினான். அது கொடிக்கம்பத்தின் கீழ் நின்று சிவலிங்கமாக வெளிப்பட்டது என்பது வரலாறு. கிருத, திரேத, துவாபரயுகத்தில் தரி (மூங்கில்) வில்வ, ஆமலக (நெல்லி) வனமாக இருந்து இந்திர, தேவ, விசித்ர மற்றும் ராஜபுரம் என்கிற பெயரோடு முறையே இந்திரன், நவகிரகங்கள், சித்தர்கள்-முனிவர்கள், வேடர்கள்-ஆதிசைவர்களால் வணங்கப்பட்ட தலம், பர, கலியுகத்தில் ஜம்புக (நாவல்), ஆதலால் நீலகண்டர், சந்திரசேகரர், சித்தேஸ்வரர் மற்றும் கைலாசநாதர் என்கிற பெயர்கள். தீர்த்தத்தின் பெயரும் பாபவிநாச, ரோகவிநாச, மங்கள மற்றும் உள்கிணறு சிவகங்கை தீர்த்தம் என யுகவாரியாக வழங்கப்படுகிறது. இத்தலத்திலேயே மாரியம்மன் கோயிலும் பிரசித்தம். பொன் வரதராஜப் பெருமாள், அபய ஹஸ்த ஆஞ்சநேயர். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
தலைமலை,
செவிந்தப்பட்டி அஞ்சல்,
தொட்டியம் வழி,
நாமக்கல் மாவட்டம் 621209. |
+91 9843658044, 9443706836. | முசிறி நாமக்கல் பாதையில் மணமேடு என்கிற கிராமத்தில் வடப்புறம் வந்தால் நீலயாம்பட்டி வரும். நீலையாம்பட்டியிலிருந்து சுமார் 1 மணி நேர நடைப்பயணம் மலையடிவாரத்தில் பாதை உள்ளது. உச்சி மலைக்குச் செல்ல 4 வழிகள் உள்ளன. தீர்த்தக் குளம் உள்ளது. |
சிரகிரி என்கிற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கமே சுமார் 850 அடி உயரமான இந்தத் தலைமலை. இந்தக்கோயிலுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி திரும்பியபோது இராமர் சுனை என்கிற ஒன்றினை ஏற்படுத்தியதாகக் குறிப்பு. யமன் சனியினால் அவதியுற்ற போது இந்திரனை நோக்கித் தவம் புரிந்து இந்தத் தீர்த்தத்தில் நீராடி வேங்கடவனை வணங்கியதாக வரலாறு. புராணப் பின்னணி அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மலையை ஜாம்பவான் அங்கேயே கொண்டு சென்று போடும்படிக் கூறிய போது கோபமுற்ற அனுமன் வீசிய மலையின் துண்டாகவும் இந்தத் தலம் கூறப்படுகிறது. ஆகவே அற்புத மூலிகைகள் நிறைந்த இத்தலத்தில் வழிபட புத்திர பாக்கியம் கிட்டும். விஷ ஜந்துக்கள் தீண்டாத தலம். மலையடிவாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் கிருஷ்ணர், தாயார் கோயில்களும் உள்ளன கோகுலாஷ்டமி, புரட்டாசி, நவராத்திரி, மார்கழி, தை மாத விழா என விழாக்கள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை கோடி தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். |
|
|