அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் |
அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்,
பள்ளிப்பாளையம்,
நாமக்கல். |
பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கொமாரபாளையம் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அக்ரஹாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. |
குழலூதி மனம் எல்லாம் கொள்ளை கொள்ளும் கோபாலன் வேணுகோபாலனாகவோ, ராதா மணாளனாகவோ, ருக்மணி, சத்யபாமா சமேதனாகவோதான் பெரும்பாலான கோயில்களில் தரிசனமளிப்பான். அபூர்வமாக காளிங்க நர்த்தன கிருஷ்ணனே மூலமாக அமைந்த கோயில் ஒன்று பள்ளிப்பாளையம் அக்ரஹாரத்தில் உள்ளது. சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமையானது இந்தக் கோயில் இதன் முன்புள்ள விளக்குத் தூணின் எஞ்சிய பகுதி இதன் பழமையை உணர்த்துகிறது. மரங்களில் நான் அரசமரம் என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். இங்கே பெரிய அரச மரத்தினடியில் கிருஷ்ணர் சன்னிதி அமைந்துள்ளது சிறப்பு. ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. அரசும் வேம்பும் இணைந்துவளர்ந்த மரத்தின் கீழே விநாயகர் காணப்படுகிறார். பவுர்ணமி நாட்களில் லட்சுமி நாராயணர் பூஜையும், தமிழ் மாதம் முதல் ஞாயிறுகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியன்று சுப்ரபாதம் நிர்மால்ய சேவை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த கிருஷ்ணனை வணங்கினால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
|
அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்,
பள்ளிப்பாளையம்,
நாமக்கல். |
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இருந்து 4 கி.மீ . தொலைவில் உள்ளது. கொங்கு திருப்பதி, திருச்சேறை தலத்தின் அபிமானத் தலமாகத் திகழ்கிறது. |
பள்ளிப் பாளையம் வேங்கடேசப் பெருமாள் கோயில் அழகாக உயர்ந்த ராஜகோபுரமும், இரண்டு தளங்களை ஊடுருவிச் செல்லும் நீண்ட கொடிமரமும் நம்மை வரவேற்கின்றன. கீழ்த்தளத்தில் த்ரிநேத்ர தசபூஜ ஆஞ்சநேயருக்கும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன. அவர்களை தரிசித்த பிறகு படியேறிச் சென்றால் வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கலாம். எதிர்ப்புறம் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. துலாபார பிரார்த்தனைக்காக தனி அறை உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கொங்கு திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அனுமன் ஜெயந்தியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பெருமாளை தரிசித்தால் சகல நன்மைகள் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும் என்கிறார்கள். |
|
|