அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன் திருக்கோயில் |
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு எட்டுக்கையம்மன் திருக்கோயில் |
கீரம்பூர், பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு சின்ன ஒங்காளியம்மன் திருக்கோயில் |
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் |
கொமாரபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் திருக்கோயில் |
நாமக்கல் |
+91 4286-224 144 | |
|
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
ராசிபுரம்,
நாமக்கல். |
சேலத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது. |
வழக்கமாக மாரியம்மன் கோயில்களில் திருவிழாவின் போது முதலாக பூச்சாட்டுதல் நடைபெறும். அடுத்து கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலாமரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். கம்பத்தை அலங்கரித்து கோயிலை மூன்று முறை வலமாக வந்து அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும் இவ்விழா, அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடி வராத இளம் பெண்கள் காலையில் நீராடி கோயிலுக்கு வந்து, கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்குவார்கள். திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும் மழைவளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாகப் பெண்கள் கோயில் பிராகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம் மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே ஆகும். திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். ஒருமுறைமாரியம்மன் கோயிலில் திருவிழாவின்போது கொள்ளை நோய் காரணமாக கம்பத்தைப் பிடுங்க ஆண்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அன்னை, தான் எப்போதும் நித்ய சுமங்கலியாக திகழ விரும்புவதாகவும் ஆதலால் நடப்பட்ட கம்பத்தைப் பிடுங்கக் கூடாது. எனவும், எப்போதும் கம்பம் இருக்க வேண்டும் என்றும் அருள்வாக்கு மூலம் வெளிப்படுத்தினாள். அன்று முதல், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறாத ஒரே மாரியம்மன் திருக்கோயிலாக உள்ளது இத்தலம். ஆண்டுதோறும் வேப்பமரத்திலான புதிய கம்பம் நடப்படும் நிகழ்ச்சி மிக விரைவாக நடைபெறும். சுமார் 5 நிமிடம் மட்டுமே கோயிலுக்குள் கம்பம் இல்லாத நிலை இருக்கும். கம்பம் பிடுங்கப்படாமல் ஆண்டு முழுவதும் அப்படியே காணப்படும். இக்கம்பத்தை பக்தர்கள் பயபக்தியோடு வணங்குகின்றனர். நெடிய ஐந்து நிலைக் கோபுரத்துடன் மாரியம்மன் கோயில் எழுந்துள்ளது. அம்மன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். கருவறையை இரண்டு காவல் தெய்வங்கள் காவல் புரிகின்றன. பெரிய விசாலமான உயரமான பிராகார மண்டபத்தின் ஒரு மூலையில் பிள்ளையாரையும் மற்றொரு மூலையில் முருகனையும் தரிசிக்கலாம். ஆண்டுதோறும் ஐப்பசியில் இங்கு திருவிழா விமர்சையாக நடைபெறும். |
|
|