அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் திருக்கோயில் |
எஸ்.பி.பீ. காலனி (பள்ளிப்பாளையம்)-638 010 நாமக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு சண்முக வேலாயுதசாமி திருக்கோயில் |
கோட்டைமேடு (தட்டான்குட்டைமலை-சூரியகிரி), நாமக்கல் மாவட்டம் |
பள்ளிப்பாளையத்திலிருந்து 10 கி.மீ. குமாரபாளையத்திலிருந்து 4 கி.மீ. |
|
அருள்மிகு சிவக்குமரன் திருக்கோயில் |
பிரணவகிரி வட்டமலை (கத்தேரி)-638 183, நாமக்கல் மாவட்டம் |
குமாரப்பாளையத்துக்கு வடகிழக்கே 2 கி.மீ.ல் வட்டமலைப் பிரிவிலிருந்து 0.5 கி.மீ. |
|
அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் |
காப்ராமலை (பல்லாக்காப்பாளையம்)-637 303, நாமக்கல் மாவட்டம் |
குமாரப்பாளையத்திலிருந்து சங்கிரி வழியில் 8 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பருதிப்பள்ளி நாமக்கல் மாவட்டம் |
பல்லாக்கப்பாளையத்துக்கு வடகிழக்கே 11 கி.மீ.ல் உள்ள சங்கரிக்கு வடமேற்கே 4 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
வைகுந்தம் (கருமலை), நாமக்கல் மாவட்டம் |
சங்ககிரிக்கு வடகிழக்கே 8 கி.மீ. சேலம் வழி. |
|
அருள்மிகு செட்டிக்குமாரசாமி சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பில்லாநல்லூர்-637 403, நாமக்கல் மாவட்டம் |
வெண்ணதந்தூருக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. ராசிபுரம்-திருச்செங்கோடு வழி |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
அருள்மிகு முருகன் திருக்கோயில்,
வையப்பமலை,
மல்லசமுத்திரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
637410. |
+91 4286-227781 | நாமக்கல் வடக்கே 36 கிமீ தூரம். மலைமேல் கோயில். |
இத்தலத்தில் முருகன் தண்டாயுபாணிக் கோலத்தில் உள்ளார். அருணகிரிமலை உள்ளது. கொல்லி மலையில் முருகன் விஜயம் செய்ததாக பேளுக்குறிச்சியில் தகவல் உள்ளது. அலைவாய்மலை சித்தர்கள் கொடுத்த தங்கத்தை ஏற்றுக்கொண்டு பழனி முருகன் இங்கு வந்ததாகவும் பின்னர் பழனியில் மீண்டும் புதிய விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் வரலாறு. |
பூஜை நேரம்: காலை 8.30 மணியிலிருந்து மாலை 9.30 மணி வரை. (நித்ய பூஜை) |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,
கந்தபுரி,
இரட்டிப்பட்டி கந்தகிரி,
நாமக்கல் வட்டம் மற்றும்,
மாவட்டம் 63632. |
+91 4258- 287511 | 171 படிகள் கொண்ட சிறிய மலை. நாமக்கல் துறையூர் பாதையில் 6 கிமீ தூரத்தில் உள்ளது. கூலிப்பட்டி பழனியாண்டவர் மலை என்பது பொதுவான வழக்கு. |
மலையடிவாரத்தில் வாழ்ந்த வெறி கோவிந்தசாமி என்கிற துறவியின் சமாதியின் மீது முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவர் தவம் செய்த குகை அருகே உள்ளது. நாமக்கல்லிலிருந்து 3 கிமீ தொலைவில் கூலிப்பட்டியிலும் முருகன் கோயில் உள்ளது. இங்கு முருகன் நின்ற கோலத்தில் மேற்கு பார்த்த சன்னிதியில் உள்ளார்.
|
பூஜை நேரம்: எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். |
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
கபிலர்மலை,
பரமத்தி,
நாமக்கல் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
637204. |
+91 4268-254100, 9095724960 | ராசிபுரம் பேளுக்குரிச்சி தாண்டி பரமத்தி வழியாக கபிலர் மலை அடையலாம். 131 படிகள் கொண்டது. நாமக்கல்லிலிருந்து அருகாமையில் உள்ளது. குறிப்பிட்டதூரம் வரை தார் சாலை உள்ளது. பின்னர் படி ஏற வேண்டும். |
தனி முருகன் கோயில். வள்ளி தெய்வயானை சமேதராய் நின்ற கோலத்தில் உள்ளார். நாகாபரணத்துடன் உள்ளது விசேஷம். இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது ஐதீகம். சற்று சாய்ந்த கர்ப்பக்கிரகம் குடைவரை அமைப்பு. மேலே விநாயகர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலருக்கான சிலையும் உள்ளது. சுனை ஒன்றும் மலையில் உள்ளது. கிருத்திகை கந்த சஷ்டி விசேஷம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை |
|
|