அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
கண்டராதித்தம்-621 652, பெரம்பலூர் மாவட்டம் |
திருமானூருக்குத் தென்மேற்கு 8 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
ஏலாக்குறிச்சி-621 715, பெரம்பலூர் மாவட்டம் |
திருமானூருக்கு வடகிழக்கு கொள்ளிடக்கரை ஓரம் 6 கி.மீ. |
|
அருள்மிகு சுவாமிநாதசாமி திருக்கோயில் |
குருவாடி-621 715, பெரம்பலூர் மாவட்டம் |
ஏலாக்குறிச்சிக்கு வடகிழக்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
செந்துறை-621 714, பெரம்பலூர் மாவட்டம் |
அரியலூருக்கு வடகிழக்கே 17 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
உஞ்ஜனி-621 714, பெரம்பலூர் மாவட்டம் |
செந்துறைக்குத் தென்கிழக்கு 5 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
சன்னாசிநல்லூர்-621 718, பெரம்பலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடக்கு 12 கி.மீ. |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
மருதூர்-621 710, பெரம்பலூர் மாவட்டம் |
செந்துறைக்கு வடகிழக்கு 11 கி.மீ. |
|
அருள்மிகு வசந்த முருகன் திருக்கோயில் |
அருள்மிகு வசந்த முருகன் திருக்கோயில்,
சிதம்பரம் நகர்,
பெரம்பலூர் வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம்,
621212. |
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொட்டியம் தாண்டியதும் வரும் இடம் பெரம்பலூர். இலம்பலூரிலும் பழமையான சிறிய முருகன் கோயில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியிலும் முருகன் கோயில் உள்ளது. |
வயலூர் முருகன் கோயில் போலவே வயலின் நடுவில் உள்ள கோயில். நாத்திகரான அன்பர் ஒருவருக்கு அருள்பாலித்து ஆத்திகரான முத்துசாமி என்பவருக்கு 40 ஆண்டுகள் முன் அருளிய முருகன். முருக பக்தையின் கணவரான இவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. கொளஞ்சியப்ப் இவர் கனவில் தோன்றி தன்னை வழிபடப் பணித்தார். அந்த கோயில் சிவாச்சாரியாருக்கும் கனவில் இந்த பக்தன் வருவான் எனக் குறிப்பிட்டு வழிபாட்டிற்கு தயார் செய்யச் சொன்னார். பின்னர் இறைவனின் ஆக்ஞைப்படி முத்துசாமியின் கழுத்தில் சிறிய கம்பினால் தடவி தீர்த்தம் தெளித்து மருந்து பற்றிய விவரங்களையும் கூறினார். படிப்படியாக நிவாரணம் கிடைத்தது. மீண்டும் செட்டிக்குளம் மருகன் கோயில் அருகில் சித்தர் போல் ஒருவர் தோன்றி அவரது நிலத்தில் ஓர் இடத்தில் அது சித்தர் வளர்ந்த இடம் என்றும் அங்கு பால முருகன் கங்கையில் நடனமாடுகிறார் என்றும் இடம் ஒன்றைக் குறிப்பிட்டு அங்கு கிணறு தோண்டுமாறுக் கூறி மறைந்தார். வறண்ட பூமியாக இருந்த அந்த இடத்தில் விரைவிலேயே தண்ணீர் கிடைத்தது. இருப்பினும் அவர் முருகனிடம் ஈடுபாடின்றி அவ்விடத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். பூமியில் உழுத போது வேல் ஒன்று கிடைத்தது. பின்னர் உணர்ந்து முருகன் கோயில் நிர்மாணித்தார் இங்கு முருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். |
பூஜை நேரம்: எப்பொழுது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி திருக்கோயில்,
செட்டிக்குளம்,
பெரம்பலூர் வட்டம் மற்றும்,
மாவட்டம் 621104. |
+91 4328- 268008, 9944117450, 9842699378 | திருச்சி பெரம்பலூர் பாதையில் உள்ள தலம். 255 படிகள். ஏற இறங்க தனி படிகள் உள்ளன. பாடாலூர் அடைந்தவுடன் பிரியும் சாலையில் 7 கிமீல் ஊர். |
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். பங்குனி உத்திரம் விசேஷம். பால் குடம், காவடி எடுக்கப்படும் இத்தலமே வடபழனி என்றே போற்றப்படுகிறது. (சென்னையிலும் வடபழனி உள்ளது). இங்குள்ள முருகன் கையில் கரும்பு வைத்து மேற்கு நோக்கி ஆண்டி வடிவில் குன்றின் மீது காட்சி தருகிறார். பிரபல திருப்பட்டூர் தலமும் அருகே உள்ளது. சிவனுக்குக் குடுமியும் உள்ளது. |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை |
|
|