அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில்,
பொற்பனைக் கோட்டை,
புதுக்கோட்டை. |
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் அமைந்துள்ளது முனீஸ்வரர் திருக்கோயில். |
இங்குள்ள முனீஸ்வரர் சிலை பத்து அடிக்குமேல் உயரம் உள்ளது. ஏணி மீது ஏறித்தான் முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். விழாவின் போது, திருப்பதி பெருமாள் போலவும் அலங்காரக் காட்சி தருவார் இவர். |
அருள்மிகு உறங்காப்புளி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு உறங்காப்புளி கருப்பண்ண சுவாமி திருக்கோயில்,
ராங்கியம்,
புதுக்கோட்டை. |
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராங்கியம். இங்குள்ளது உறங்காப்புளி கருப்பண்ண சுவாமி திருக்கோயில். |
இங்குள்ள உறங்காப்புளி கருப்பண்ண சுவாமி பலருக்கு குலதெய்வம்; காவல் தெய்வம்! இங்கு பெண்கள் சன்னிதிக்குள் செல்ல அனுமதி இல்லை. இங்கு சப்பாணி சன்னிதி முன் உள்ள எரிக்கப்பட்ட சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டு, வீட்டு பூஜையறையில் வைத்தால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. |
அருள்மிகு விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில் |
அருள்மிகு விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில்,
வேகுப்பட்டி, புதுக்கோட்டை |
வேகுப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில், கொப்பனாம்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வேகுப்பட்டி. |
விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்த்து, விஸ்வரூபம் (பேருருவம்) காட்டி நின்றான் ராமபக்தனான அனுமன். அப்படி வானுயர்ந்து நின்ற திருக்கோலத்திலேயே, விஸ்வரூப ஆஞ்சநேயராகக் கோயில்கொண்டிருக்கிறார் அனுமன், கடந்த 18.4.14 அன்று, விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், விஜயவாடா பூஜ்யஸ்ரீ மாதா சிவசைதன்யா, வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோருடன் ரங்கராஜா பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 21 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன். இவர், தமிழகத்தின் மூன்றாவது பிரமாண்ட அனுமன் என்கின்றனர். |
|
|