அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோயில் |
திருவெற்றியூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
தொண்டியிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். பழம்புற்றுநாதர் என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. அம்மன் பாகம்பிரியாள். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வாசுகி தீர்த்தம். மகாவிஷ்ணு தனக்கேற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு சிவபுஷ்கரிணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும். இங்குள்ளவர்கள் கோயிலுக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். |
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
ராஜசிங்கமங்கலம், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
திருவாடானையிலிருந்து தெற்கே 21 கி.மீ. |
இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு மந்திரநாதர் திருக்கோயில் |
திருப்பாலக்குடி, திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
ராஜசிங்கமங்கலத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ. |
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இராமநாதபுரம் |
இராமநாதபுரத்தின் வடக்கு 25 கி.மீ திருவாடனையிலிருந்து 21 கி.மீ. |
இராசசிங்கம் மங்கலம் என்று வழங்குகின்றது கைலாசநாதர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் |
அருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் திருக்கோயில் |
அருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் திருக்கோயில்
கரிசல்குளம், ராமநாதபுரம். |
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில், மறவர் கரிசல் குளம் கிராமத்தில் அருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது. |
தீராத நோய் உடையவர்கள் விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து வில்வ இலையையும் வில்வக் காயையும் சாப்பிட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. |
அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயில் |
அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயில்
திருத்தொளூவூர்,
ராமநாதபுரம். |
ராமநாதபுரத்திலிருந்து நயினார் கோயில் செல்லும் வழியில், 26 கி.மீ தொலைவில் திருத்தொளூவூர் அமைந்துள்ளது. |
இங்கு தொன்மை வாய்ந்த கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் ஆதிநாதர். இக்கோயில் மூலவர் சுயம்பு லிங்கம். புற்றுடன் கூடிய மூலஸ்தானம். மூலஸ்தானத்துக்குப் பின்னால் புற்றடி மண் உள்ளது. இந்தப் புற்றுமண் விசேஷமாகக் கருதப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு ராகு கேது தோஷ சாந்தி நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
மேலப்பெருங்கதை,
ராமநாதபுரம். |
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் பார்த்திபனூர் அருகே மேலப்பெருங்கதையில் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் உள்ளது. |
ஆரோக்கியம் பெருக, தோல்வியில் இருந்து விடுபட, வியாழக்கிழமைகளில் இவரைத் தரிசித்து வணங்கினால் பலனுண்டு. |
|
|