அருள்மிகு அழகிய பெருமாள் திருக்கோயில் |
சத்தியவாடி, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
எடைசெருவாய், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு லட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில் |
சிங்கிரிகுடி, கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம் |
|
|
அருள்மிகு நாகம்மன் திருக்கோயில் |
திருப்பாதிரிபுலியூர், கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம் |
|
|
அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் |
புதுப்பாளையம், கடலூர் நகர், வட்டம் மற்றும் மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
பண்ருட்டி நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சரநாராயணப்பெருமாள் திருக்கோயில் |
திருவதிகை, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் |
காட்டுப்பரூர்,விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வீரநாராணப் பெருமாள் திருக்கோயில் |
காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம் |
சிதம்பரத்திலிருந்து தென் மேற்காக 19 கி.மீ. |
மன்னார்குடி, வீராணம். கொள்ளிட ஆற்றின் வடகரைப்பகுதியில் இக்கோயில் உள்ளது. மூலவர் வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் மரகதவல்லித் தாயார் தனிச்சன்னதியில் உள்ளார். இறைவனுக்கு அழகியமன்னார், ராஜ÷காபாலசுவாமி என வேறு பெயர்களும் <உண்டு. யாக்ஞவல்கியர் என்னும் முனிவரிடம் குருகுலவாசமிருந்து கௌதம முனிவர் நான்கு வேதங்கள் பயின்றார். ஒரு சமயம் கௌதமர் தம் குருவின் கடுங்கோபத்திற்கு ஆளானபோது அதுநாள்வரையில் குருவிடம் பயின்ற வேதங்கள்யாவும் இமைப்பொழுதில் கக்கிவிட்டு வெளியேறினார். கௌதம முனிவர் கக்கிய இடம் வேதபுஷ்கரிணி என்னும் தாமரைத் தடாகமாயிற்று. அத்தடாகத்தில் பூத்த தாமரை மலர் ஒன்றில் திருமகள் தோன்றினாள். முனிவர் ஒருவர் திருமகளைக் அங்குக் கண்டு திருமகளுக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டி வளர்த்து, மங்கைப் பருவம் அடைந்ததும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தபோது, திருமால் மன்னராக வேடந்தாங்கி மரகதவல்லியை திருமணம் செய்து கொண்டார், மன்னனாக வந்து மணம், புரிந்ததால் இத்தல இறைவனுக்கு மன்னனார் என்று பெயர் பெற்றார். அரங்கநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸ்ரீமந்நாதமுனிகள் இத்தலத்தில் ஈஸ்வர பட்டாழ்வாருக்கு மகனாக திருவவதாரம் செய்தார். இவரது ஆச்சார்யார் நம்மாழ்வார். ஒருசமயம் இவர் திருத்தலப்பயணமாக திருக்குடந்தைக்கு சென்றபோது, ஆழ்வார் திருநகரிலிருந்து வந்த பக்தன் ஒருவன் திருவாய்மொழியில் உள்ள ஒரு பாசுரத்தை இறைவன் முன்பு பாட, இதைக் கேட்ட நாதமுனிகள் பக்தனிடம் இது யாருடைய பாடல் என கேட்டபோது, அவர் எனக்கு தெரிந்தது இவ்வொரு பாடல் மட்டுமே, ஏனைய விவரங்கள் பெற ஆழ்வார் திருநகரிக்கு சென்றால் தங்களுக்கு மேலும் விபரம் கிடைக்கும் என்று கூற, நாதமுனிகள் ஆழ்வார்திருநகரிக்கு சென்று மதுர கவிதாஸரைப் பணிந்து அவரிடம் ஏனைய பாசுரங்களைக் கூறுமாறு கேட்டார். அவரும் அதற்கு தனக்கு ஏதும் பாடம் இல்லை எனப் பகன்று, ஆழ்வார் சீடரான மதுரகவிகள் அருளிய கன்னிநுட் சிறுத்தாம்பு பாசுரத்தை பன்னீராயிரம் தடவை சொன்னால் ஆழ்வார் மூலம் உபதேசம் பெறலாம் என்றார். நாதமுனிகளும் அவ்வாறே பன்னீராயிரம் முறை தியானம் செய்ய ஆழ்வார் காட்சி தந்து இவருக்குத் தமிழ்மறையான நாலாயிரத் திவ்வியப்பிரபந்தங்களை உபதேசம் செய்தார். இவர் அதற்கு பக்தாமிருதம் என்ற தனியனைச் செய்தார். நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களுக்கும் பண்ணும், தாளமும் வழங்கினார். இவரே திவ்விய பிரபந்தத்திற்கு முதல் வாய்மொழி ஆசிரியராவார். பல காலம் மறைந்து இருந்த திவ்விய பிரபந்தங்களை ஸ்ரீமந்நாதமுனிகள் மூலம் இத்தல இறைவன் உலகுக்கு காட்டியருளியதால் இத்தல இறைவனுக்கு காட்டும் மன்னனார் என பெயர் பெற்றார். எழுந்தருளிய தலத்திற்கு காட்டு மன்னனார் எனவும் பின்பு காட்டு மன்னார்கோயில் எனப்பெயர் பெற்றது. அனேக கல்வெட்டுக்கள் உள்ளன, கங்கைகொண்ட சோழஅரசன் இக்கோயிலை கட்டுவித்ததாக குறிக்கிறது. தினமும் நான்கு காலபூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் மற்றும் வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
நல்லாற்றூர்,
வழி தவளக்குப்பம்,
கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம்,
605106. |
+91 413-2644339. | பாண்டிச்சேரியிலிருந்து மதுக்கரை வழியாக விழுப்புரம் செல்லும் பாதையில் தென் மேற்கு திசையில் 6கிமீல் தொலைவில் உள்ள தலம். கடலூரிலிருந்து வடமேற்கில் 27 கிமீ. |
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2ம் குலோத்துங்கன் கட்டிய கோயில், தென்பெண்ணைக்குப் சங்கராபரணி ஆற்றிற்கும் இடையே அமைந்துள்ளது. அமாவாசைதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக பர சுகங்களும் பிராப்தியும் நல்கும் பெருமாள். தாயாரை விளக்கேற்றி வணங்கும் பெண்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிட்டும். பெருந்தேவி தாயாருக்கு பிரதி வெள்ளி திருமஞ்சனமும் மாலையில் அர்ச்சனையும் நடைபெறுகிறது. ஆடி வரலக்ஷ்மி நோன்பு அன்று பூவங்கி சேவையும் ஆடிப்பூரமும் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன. போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது, உற்சவத்தில் மாலை பெறுவர்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், மேலும் 8 பஞ்சமி அல்லது 8 வெள்ளிக்கிழமைகளில் பெருந்தேவி தாயாருக்கு அர்ச்சனை செய்ய திருமண பாக்கியம் கிட்டும். பிரதி ஸ்வாதி திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை திருமஞ்சனமும் மார்கழியில் ஹனுமத் ஜெயந்தியும் நடைபெறுகின்றன. ராமபிரானின் பாதம் அருகே உள்ள பால ஆஞ்சநேயர் தனி சிறப்பு பெற்றவர். இந்த ஊரில் பிரசித்த பெற்ற சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இது தேவார வைப்புத் தலமாகும். இந்தச் சிவனை சாளரம் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். லக்ஷ்மி நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீபெருந்தேவி தெற்கு திருமுக மண்டலம் அமர்ந்த திருக்கோலம். |
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை |
|
|