அருள்மிகு சுப்ரமணியசாமி கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
பாளமுத்தி 614615,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சை மாவட்டம். |
+91 9445188419, 9486271434, 9884776447 | பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சிற்றம்பலம், அதிராமபட்டினம், ராஜாமடம் (பழைய இந்திய முதல் குடிமகன் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் பிறந்த ஊர்), போன்ற தலங்கள் அருகே உள்ள தலங்கள். |
இத்தலத்தில் முருகன் நின்ற கோலத்தில் வள்ளிதெய்வயானையுடன் காட்சி தருகிறார். மிகவும் பழமையான முருகன் கோயில். கோயிலில் 1932 முதல் நித்ய பூஜை செவ்வனே செய்யப்பட்டு வந்தது. சிவகங்கை இளையாத்தங்குடியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முருகன் என்று தகவல். தனி முருகனாக அருள்பாலித்து வந்த கோயிலில் பிற்காலத்தில் வள்ளி தெய்வானை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1952-55ல் ஏற்பட்ட பெரும் புயலில் சிதிலமடைந்த கோயில் மீண்டும் 1963ல் கும்பாபிஷேகம் ஆனது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா மடத்திலும் பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் திருப்பணிக்கென காத்திருக்கின்றன. அதிராமபட்டணம் திருவாதிரைக்குரிய நட்சத்திரத் தலம். தேவார வைப்புத் தலமும் ஆகும். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோயில்,
ஏரசுரம் (ஏரகரம்),
ஏரசுரம் அஞ்சல்,
வழி திருப்புறம்பியம்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம் 612303. |
+91 435-2480106, 9791896191 | கும்பகோணம் திருவையாறு சாலையில் மேலக்காவேரி தாண்டி யானையடியிலிருந்து 3 கிமீ தூரத்தில் ஊர். திருஏரசுரம் மினி பஸ் உள்ளது. கும்பகோணம் புளியம்பாடி பாதையில் ஏரசுரம் பிள்ளயைõர் குளம் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். |
இத்தலத்தில் கந்தநாதசுவாமி சங்கரநாயகி பாலமுருகன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். சுவாமிமலை கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஊர். சுவாமிக்கு இரண்டுபெயர்கள். சங்கரநாதர் மற்றும் கந்தநாதர். 1982, 2000-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2012ல் ராஜகோபுர நிர்மாணம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. நெல்லி தலவிருக்ஷமாகவும், சரவணப் பொய்கையைத் தீர்த்தமாகவும் உள்ள கோயில். முருகன் வழிபட்ட தலமாதலால் ஏரகத்துப் பெருமான் முருகன் எனவும், சுவாமி கந்தநாதருமாவார். நான்காம் படைவீடான சுவாமிமலைத் தலத்தையும் இத்தலத்தையும் சேர்ந்தே தரிசிக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் முதலில் தரிசிக்கலாம். அதே அமைப்புடன் குழந்தை வடிவில் குமரன். இங்கும் பாலமுருகனாகத் திகழ்கிறார் குமரன். சூரனை அழிப்பதற்கு முன், அகத்தியர் இத்தலத்திற்கு முருகனை அழைத்து வந்து அம்மையப்பனைக் காட்டியதாகத் தகவல். முன்பு அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியாகக் கூறப்படுகிறது. வேதங்கள் முழங்கிய பதி. முற்காலத்தில் இங்கிருந்து அம்பாளிடம் வேல் பெற்று எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிமலையில் சேர்ப்பிக்கப்படும். தற்போது இங்குள்ள அம்பாளிடம் வேல் வாங்கி முருகனுக்குச் சார்த்தப்படும் உற்சவம் 6 நாட்கள் ஷஷ்டியில் நடைபெறுகிறது. சுவாமி புறப்பாடு இல்லை.
அம்பாள் சங்கரநாயகிக்கு ஆடிப்பூரத்தில் வளையலிட்டு உற்சவம் நடைபெறுகிறது. லக்ஷார்ச்சனையும் செய்யப்படுகிறது. தர்மகர்த்தாவின் கீழ் வந்த இக்கோயில் தற்போது சுவாமிமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அப்பர் பாடிய வைப்புத்தல பதிகம் 6-51-6) |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை |
|
|