Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் பெருமாள் கோயில்
 
தஞ்சாவூர் பெருமாள் கோயில் (371)
 
அருள்மிகு சந்தானராமர் திருக்கோயில்.
அருள்மிகு சந்தானராமர் திருக்கோயில். யமுனாம்பாள்புரம், நீடாமங்கலம், தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம்.
மகாராணியாரின் பெயர் யமுனாம்பாள். ஆகவே, இவ்வூருக்கு யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டாராம் பிரதாபசிம்ம மகாராஜா. அத்துடன், (1761-ல்) ஸ்ரீசந்தானராமர். கோயிலையும் அவர் எழுப்பியதாக விவரிக்கிறது தல வரலாறு.
அருள்மிகு கூத்தப்பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு கூத்தப்பெருமாள் திருக்கோயில், கூத்தக்குடி , திருநீலிக்குடி, தஞ்சை.
தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம்- கொல்லுமாங்குடி வழித்தடத்திலுள்ள திருநீலிக்குடிக்கு அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள கூத்தக்குடி தலத்தில், காவிரியின் துணை நதிகளுக்கு மத்தியில் ஸ்ரீரங்கநாதர் அருள்பாலித்துவருகிறார்.
முற்காலத்தில் இத்தலத்தில் வசித்துவந்த விட்டல் என்னும் மன்னன் ஸ்ரீரங்கநாதரை அல்லும் பகலும் வழிபட்டுவந்தான். அவனுடைய காலம் முடிவடையும் நேரத்தில் யமகிங்கரர்கள் அவனை எமபாசத்தால் கட்டியிழுக்க, மன்னன் ரங்கநாதரை நினைத்து அபயக்குரல் எழுப்பினான். பாற்கடலில் துயில்கொண்டிருந்த ரங்கநாதர் பக்தனைக் காக்கும் அவசரத்தில் சங்கு, சக்கரம்கூட கொண்டுவர மறந்து மன்னன்முன் தோன்றினார். எமதூதர்களை திரும்பிப்போகும்மாறு கூறி தன் பக்தனான மன்னனைக் காத்தார். கூற்றுவனின் (எமன்) ஆட்களை விரட்டிய இடமென்பதால் இத்தலம் கூத்தக்குடி என்றும், பெருமாள் கூத்தப்பெருமாள் என்ற நாமத்திலும் அருள்பாலித்து வருகிறார்.
அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில், அறந்தாங்கி சாலை, வழி பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் 614601.
+91 4373-222414, 9843671997, 9787199545.
திருவாரூர் காரைக்குடி இருப்புப்பாதையில் உள்ள ரயில் நிலையங்கள் பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி. இது திருவாரூரிலிருந்து 160 கிமீ பட்டுக்கோட்டையிலிருந்து 45 கிமீ காரைக்குடியிலிருந்து 27 கிமீ. இந்த ஊர் பட்டுக்கோட்டைப் பாதையில் உள்ளது.
கிபி 12 நூற்றாண்டில் சோழர் காலத்துக் கோயில். காளமேகப் புலவர் வழிபட்ட தலம். 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் திருப்பணி செய்யப்பட்டும் அன்னியர்கள் படையெடுப்பில் அவை மீண்டும் அழிந்தன. இவர்கள் காலத்தில் பட்டு அழவராயர்கள் கோட்டை கட்டியதால் இவ்வூருக்குப் பட்டுக்கோட்டை என்ற பெயர் பெற்றது. விசேஷமான யோக நரசிம்மர் மற்றும் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டுள்ள திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் புணர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ரங்கநாயகி நின்ற திருக்கோலம கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு யோக நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு யோக நரசிம்மர் தேவஸ்தானம் திருக்கோயில், நரசிங்கம்பேட்டை, நரசிங்கம் பேட்டை அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம் 609802.
+91 435-2473338, 9790859270
நரசிங்கபுரம் என்னும் நரசிங்கம்பேட்டை ஆடுதுறைக்கு கிழக்கேயும் மயிலாடுதுறைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கிமீ. இங்கு இருப்புப் பாதை நிலையமும் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே தான் திருவாடுதுறை பாடல் பெற்ற தலமும் உள்ளது. ஆடுதுறையிலிருந்து 5கிமீ.
இரணியனின் வதத்திற்குப்பின் ஹத்தி தோஷம் நீங்க சுயம்புநாதமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை வழிபட்டு பின் யோக நிலையில் வீற்றிருக்கும் தலமிது. பூர்வ ஜன்ம புண்ணியமுள்ளவர்கள் மட்டுமே தரிசிக்க கிடைக்கும் அற்புத பூமி. 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். பிற்காலத்தில் விஜய நகரப்பேரரசால் சீரமைக்கப்பட்டது. நரசிம்மர் பூஜித்த சுயம்புநாதசுவாமி கோயில் தெற்கே தனிக் கோயிலாக உள்ளது. அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிப்பதால் நரசிங்கன்பேட்டை என்கிற பெயர் பெற்றது. யோக நிலையில் உள்ள மற்ற மூர்த்தங்களைவிட சிறப்பு மிக்கவர். சூனியம், மறைமுக எதிர்ப்பு, ஏவல் ஆகியவற்றினை சீக்கிரம் போக்க வல்லவர். ஆபத்தாக உள்ளவர் இவருக்கு நெய்தீபம் ஏற்ற காக்கப் பெறுவர். வெல்லப் பானகம், சுவாதி நக்ஷத்திரத் திருமஞ்சனம், பவுர்ணமி, அமாவாசை, பூஜைகள், மந்திரராஜபத ஸ்தோத்திரம் சன்னிதியில் படித்தல் துன்பத்திலிருந்து விடுபட உதவும், ருண விமோசன ஸ்லோகம் கடன் தொல்லையை நீக்கும். பிரதோஷ வழிபாடும், அசைவ உணவு, மதுப்பழக்கத்தை விடுத்து இவரை வணங்குதல் முறையான வழியாகவும் கொள்ளப்படுகிறது. திருமணம், வியாபாரம், புத்திர பாக்கியம், பில்லி சூனியம் எல்லா வித பரிகாரங்களும் செய்யப்படும். பானகம் பிரசாதம் வழங்கப்படுகிறது. யோக நரசிம்மர் அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை
அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் (பிரமன்) திருக்கோயில்
அருள்மிக வேதநாராயணப் பெருமாள் (பிரமன் ) திருக்கோயில், கும்பகோணம் 612001.
+91 435-2420194.
கும்பகோணம் நகரத்தில் மையப் பகுதியில் உள்ளது. கும்பகோணம் சென்னையிலிருந்து 353 கிமீ. சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் கும்பகோணம் வழியே செல்லும் மகா மகக் குளத்திற்கு அருகே உள்ள பட்டுநூல்காரர் வீதியில் அமைந்துள்ளது.
சதுர் வேதங்களை தன் நான்கு முகங்களாகக் கொண்ட பிரமன் சாக்ஷாத் நாராயணின் அம்சமாக இங்கு சரஸ்வதி சாவித்திரியுடன் அருள் பாலிக்கிறார். கும்பகோணம் நகரில் உள்ள 17 கோயில்களில் 12 சிவன் கோயில்களும் 5 வைணவக் கோயில்களும் உள்ளன. அதில் இது 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. படைப்புத் தொழிலுக்குத் தேவையானவற்றைச் சேகரித்த பிரமன், அமுதத்தைத் தேடிச் சேர்த்ததும், அனைத்து ஜீவ ராசிகளின் உயிரணுக்களை பிரளயத்திற்குப் பின் மீண்டும் சிருஷ்டி செய்ய கலசத்தில் வைத்ததும் இத்தலத்தோடு சேர்ந்த நிகழ்வுகள். பிரமனுக்குத் தனி கோயில் உள்ள ஊர். இது. கும்ப மேளாவின் போது 10 நாள் பிரம்மோற்சவமும் அரசலாற்றில் தீர்த்தவாரி பிரமனுக்கும் வீரராகவப் பெருமாளுக்கும் நடைபெறுகிறது. வேதநாராயணப் பெருமாள் (பிரமன்).
பூஜை நேரம்: காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு அஞ்சலி ராமர் திருக்கோயில்
அருள்மிகு அஞ்சலி ராமர் திருக்கோயில், மேலவுளூர், கீழ்வேங்கை நாடு, மேலவுளூர் அஞ்சல, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம் 614904.
+91 9751403911.
தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் (உழவூர்) உள்ளது. தஞ்சை மாரியம்மன் கோயில் வழி. மன்னார்குடி சாலைசடையார், கோயில் பொன்றாப்பூர் வழியும் உண்டு. அருகே பாடல் பெற்ற சிவத்தலம் 2கிமீ ல் பரிதிநியமம் உள்ளது தஞ்சையிலிருந்து 14 கிமீ.
சகல பித்ரு தோஷங்களும் நீங்கி சூரியனால் பூஜிக்கப்பட்ட பரிகாரத் தலமாக விளங்கும் பாஸ்கரேஸ்வரர் பாடல் பெற்ற தலத்திற்கு அருகே உள்ளது. ராவணனை வென்று அயோத்தி திரும்பிய போது சீதா, லக்ஷ்மண அனுமத் சமேதராக படைப் பரிவாரங்களுடன் தங்கி பூஜித்த தலம். மூலவர் வரதராஜர் ஸ்ரீதேவி பூமி தேவி சமேதராய் உள்ளார். 35 ஆண்டுகளுக்கு மேலாக குடமுழுக்கு நிகழாமல் உள்ளது. தெற்கே பெருமாள் தீர்த்தமும் மேற்கே கல்யாண ஓடை (காவேரி) கால்வாயும் உள்ளது. கிழக்கே பாஸ்சுரேஸ்வரர் கோயிலும் மேற்கே ஜெம்புகேஸ்வரர் கோயிலும் உள்ளன. இதர கிராமக் கோயில்களும் உள்ளன. ஊர் மக்களிடையே சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பகை ஏற்படாது சாந்த மூர்த்தியாக இராமர் காப்பதாக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை திருப்பணியில் கலந்து கொண்டு பூர்வ ஜென்ம பாவ விமோசனம், சவுபாக்கியம், கல்வி மேம்பாடு, புத்திர தோஷ நீக்கம், கணவன் மனைவி நல்லுறவு, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருதல், நோய் நீக்கம் ஆகிய வரப்பிரசாதியான இராமனின் அருள் பெறலாம். ஆடி, தை அமாவாசை மாசி மாதம் பித்ரு கார்யம் செய்தால் தோஷ நிவர்த்தியும் மன நிம்மதியும் கிட்டும், மார்கழி, நாம நவமி, நவராத்திரி சமயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அஞ்சலி ராமர் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு ஆதி வராகப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஆதி வராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் ஆதிவராகர், கும்பகோணம் நகரம், தஞ்சை மாவட்டம் 612001.
+91 9442226413.
நகரத்தின் மையப் பகுதியில் கோயில்.
மகாமகத்தில் எழுந்தருளும் பெருமாள். பூலோகத்தை பாதாளத்தில் கொண்டு சென்ற இரண்யாக்ஷனையும் மற்ற அரக்கர்களையும் தன் வராக அவதாரத்தின் போது ஓர் கொம்பில் அழித்து மற்றோர் கொம்பில் பூமியை தன் நிலைக்குக் கொண்டு சேர்த்துப் புராணப் பின்னணி உள்ள கோயில். பூமி தேவி இடது மடியில் வீற்றிருக்கிறார்.ஆதி வராகப் பெருமாள் பூமிதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை
அருள்மிகு ராமஸ்வாமி திருக்கோயில்
அருள்மிகு ராமஸ்வாமி திருக்கோயில், குடந்தை ராமஸ்வாமி, கும்பகோணம், தஞ்சை மாவட்டம் 612001.
+91 9486310896.
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திவ்ய தேசத்திற்கு தெற்கே அரை கிமீ தூரத்தில் கோயில் உள்ளது.
கணவன் மனைவியிடையே அன்யோன்யத்தையும் சகோதரர்களிடத்தே நட்புணர்வையும் வளர்க்கக் கூடிய கோயில். வடக்கு பார்த்த ராமர் விசேஷமானது. பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். 400 ஆண்டுகளுக்கு முன் அச்சுத நாயக்கரால் கட்டப்பட்ட கோயில். லக்ஷ்மணர் அண்ணனின் ஆணைக்காகக் காத்துக்கொண்டு வில்லேந்தியும், பரதன் குடை பிடித்தும், சத்ருக்னன் சாமரம் வீசவும், அனுமன் ஓர் கையில் வீணை மீட்டியும் மற்றோர் கையில் ராமாயணம் படித்தவாறும் எங்குமில்லாத கோலத்தில் காட்சி திவ்ய தேசத்து சாரங்கன் இங்கு ராமனாக அருள் பாலிப்பதாக ஐதீகம். உள்ளே சிறப்பான ராமாயண ஓவியங்கள் உள்ளன. எதிரிகளை போக்கும் தலமாகவும் விளங்குகிறது. ராமநவமி, நவராத்திரி மற்றும் மார்கழி உற்சவங்கள் விசேஷம். கணு அன்று (மாட்டுபொங்கல்) கணுப்பிடி உற்சவம் நடைபெறுகிறது. இங்குள்ள சீதாபிராட்டி சக்ரபாணிக் கோயிலில் உள்ள விஜயவல்லித் தாயாருடன் சாரங்கபாணிக் கோயிலில் உள்ள கோமலவல்லித் தாயாருடன் இணைந்து எழுந்தருளுவது சிறப்பான வைபவம். பரத சத்ருக்ன சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய ஸமேத ராமர் பட்டாபிஷேகக் கோலம் வடக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு ராமபிரான் திருக்கோயில்
அருள்மிகு ராமபிரான் திருக்கோயில், பருத்திச்சேரி 612605, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
+91 9486566916.
கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறை திவ்ய தேசத்திலிருந்து சுமார் 6 கிமீ தூரத்தில் உள்ள ஊர்.
சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமர் அருள் பாலிக்கும் பஞ்ச லோக மூர்த்தங்கள் உள்ள இத்தலம் காவேரியாற்றின் கிளை நதியான குடமுருட்டி பாயும் பகுதியில் உள்ளது. நெல் மற்றும் கரும்பு பயிராகும் இப்பகுதியில் திருச்சேறை சாரநாதப் பெருமாள் எழுந்தருளி இந்தக் கோதண்டராமருடன் உற்சவத்தில் கலந்து கொள்ளும்படியாக விழாக்கள் இருந்தன. 46வது அஹோபில மடத்துப் பட்டத்தின் தாய் தந்தையர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். பண்டிதர்கள் வாழ்ந்த ஊராகவும் திகழ்கிறது. சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய ஸமேத ராமர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
அருள்மிகு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் திருக்கோயில்
அருள்மிகு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் திருக்கோயில், ஊத்துக்காடு, ஊத்துக்காடு அஞ்சல், வழி ஆவூர், தஞ்சை மாவட்டம் 612701.
+91 4374-268549, 9442699355.
கும்பகோணத்திலிருந்து 11 கிமீ. ஆவூர் மற்றும் கோவிந்தகுடி அருகே உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 13 கிமீ. தஞ்சை திட்டை, மேலட்டூர், திருக்கருக்காவூர் பாதையில் அடுத்து வரும் தலமிது.
காளிங்க நர்த்தன கிருஷ்ணனுக்கு தனிக்கோயில் வேறு எங்கும் இல்லை. உற்சவர் அருகே காமதேனுவின் கன்றுகளான நந்தினி மற்றும் பட்டி உள்ளன. இந்த விக்கிரகம் பெரும் சிறப்பு வாய்ந்தது. காளிங்கன் சிரசின் மீது பாதமும் அவர் பாதத்திற்கும் சிரஸுக்கும் ஒரு நூல் இடைவெளி உள்ளது. மற்றொரு பாதம் நர்த்தனக்கோலத்தில் தூக்கியபடி உள்ளது. அபய ஹஸ்தமும் மற்றொரு கையில் காளிங்கன் வாலையும் பிடித்துள்ளார். காளிங்கனின் வாலில் இறைவனின் கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்க மற்ற நான்கு விரல்கள் விலகியிருக்கும். வால், கால் பாதம், சிரஸு இவையெவற்றிலும் பிடிமானம் இல்லாத விஞ்ஞான அதிசயம் கொண்ட இச்சிறப்பு விக்கிரகத்தை அரசு 1982 ல் 3 ரூபாய் தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது. பிரார்த்தனை தெய்வமாகவும், புத்திர பாக்கியம், திருமணத்தடை நீக்கம், ராகு கேது, சர்ப்ப தோஷ பரிகாரமும், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும், சங்கீதம், கலைத்துறையைச் சேர்ந்தவர்களின் பிரார்த்தனைத் தலமாகவும் திகழ்கிறது. வெங்கடகவியை அலைபாயுதே கண்ணா, பால்வடியும் முகம் போன்ற பாடல்களை ஆசை தோய்ந்து மனமுருகிப் பாட வைத்த அழகு கிருஷ்ணர் இவர்.
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
<< Previous  35  36  37  38  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar