அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
வெள்ளிகரம்-631 207, திருவள்ளூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சண்முகசுவாமி திருக்கோயில் |
அத்திமாஞ்சேரி-631 202, திருவள்ளூர் மாவட்டம் |
பள்ளிப்பட்டுக்குத் தெற்கே 7 கி.மீ. |
|
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
இராஜநகரம்,திருவள்ளூர் மாவட்டம்-631 304 |
அத்திமாஞ்சேரியிலிருந்து 8கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
அம்மவாரி குப்பம்-631 301, திருவள்ளூர் மாவட்டம் |
இராஜ நகரத்துக்கு தெற்கே 5 கி.மீ.ல் ராமகிருஷ்ணராஜு பேட்டையிலிருந்து வடமேற்கு 2 கி.மீ. |
|
அருள்மிகு சிவசண்முக பெருமாள் திருக்கோயில் |
திருவொற்றியூர், சென்னை-600 019, திருவள்ளூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில்,
பெரும்பேடு,
பொன்னேரி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்,
601204. |
+91 44-27978907, 9444160766 | சென்னையிலிருந்து கொல்கத்தா மார்க்கத்தில் 35 கி.மீல் உள்ள இரயில் நிலையம் பொன்னேரி. மீஞ்சூரை அடுத்துள்ள இரயில் நிலையம் இது. அதிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. பெரும்பேடு திருப்பாலைவனம் தலம் பொன்னேரி அருகே உள்ளது. பொன்னேரி பழவேற்காடு பாதையில் சற்று தூரம் சென்றவுடன் பெரும்பேடு சாலைக் காட்டி உள்ளது. இந்த இடத்திலிருந்து 3 கிமீ சென்று பிரியும் சாலையில் கோயில். சிறிய குன்றின் மீது கோயில். திருப்பாலைவனத்திற்கு முன் வடகிழக்கே சென்றால் பெரும்பேடு. மேலும் பழவேற்காடு திருப்பாலைவனம் சாலையில் மெடூரிலிருந்து கும்மிடிப்பூண்டி சாலையில் வேம்பேடு, ஆவூர் தாண்டியவுடன் 2 கிமீ தூரத்தில் இலப்பாக்கம் உள்ளது. இந்த இடத்தில் பழைய தனி முருகன் கோயில் உள்ளது. குருக்கள் வீடு அருகில் உள்ளதால் எப்பவும் தரிசிக்கலாம். பொன்னேரி வட்டத்தில் உள்ள குமரஞ்சேரியில் குருஜி ஒருவரால் கட்டப்பட்ட ஏழரை அடி தனி முருகன் கோயில் உள்ளது. பொன்னேரி மேடூர் கும்மிடிப்பூண்டி பாதையில் உள்ள கோலூர் கிராமம் அருகே உள்ளது இந்த குமாரசுவாமி கோயில். |
700 ஆண்டுகள் பழமையான தலம். 1976ல் பூமியலிருந்து எடுக்கப்பட்ட 6 அடி உயர முருகன் நாற்கரங்களுடன் ஓர் கையில் கமண்டலம் கொண்டு பிரம்ம சாஸ்தா வடிவில் உள்ள உருவம். வள்ளி குறத்திக் கொண்டையுடன் குறத்திக் கோலத்திலும், தாமரைக்குப்பதிலாக நீ லோத்பல மலருடன், இடப்புறத்திலும், வலப்புறம் தெய்வானை மகர குண்டலம், கடி முத்திரையுடன் நீ லோத்பல மலருடனும் தேவியர்கள் இடம் மாறி காட்சி தருகின்றனர்.
|
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
பழைய பஜார் வீதி,
திருத்தணி அடிவாரக்கோயில்,
திருத்தணி 631209,
திருவள்ளூர் மாவட்டம். |
+91 9444638649 | திருத்தணி நகர பழைய பஜார் பகுதியில் கம்மவார் திருமண மண்டபத்திலிருந்து 10 நிமிட நடையில் இந்த கோயிலை அடையலாம். ஓர் திரையரங்கம் இந்தப் பகுதியில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் நடந்து வந்துவிடலாம். நடந்து செல்லும் பாதையில் பூமிக்குள்ளிலிருந்து கிடைத்த வீச்சம் மிக்க (பெரிய) வரசித்தி விநாயகர் கோயில் பழைய பஜார் வீதியில் உள்ளது. |
இத்தலத்தில் உள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரே முதன் முதலில் திருத்தணி தலத்தில் வள்ளி தெய்வானையுடன் ஆதிமுருகனாகத் திகழ்ந்தவர். சிறப்பாக அமைந்த பெரிய மூர்த்தி. பிற்காலத்திலேயே மலை மேல் முருகன் சன்னிதி அமைக்கப்பட்டது. அருகே விஜயராகவப் பெருமாள் பிரயோகச் சக்கிரத்துடன் உள்ளார். இதே போல் நெமிலி, மாங்காடு தலங்களிலும் ஒரே மாதிரி அமைப்புடன் சிறிய, நடுத்தர, பெரிய அளவில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் பிரயோகச் சக்கிரத்துடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் நன்கு பராமரிக்கப்படும் பழைய சிவன் கோயிலையும் சிறிய நீரோடையினைத் தாண்டியதும் தரிசிக்கலாம். |
பூஜை நேரம்: காலை 5 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை |
|
|