அருள்மிகு புற்று முருகன் திருக்கோயில் |
அருள்மிகு புற்று முருகன் திருக்கோயில்,
மற்றும் சித்தர் பீடம் (நட்சத்திரக்கோயில்),
சாலைகுளம்,
வழி ஒட்டப்பிடாரம்,
மற்றும் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்,
628401.
|
+91 461- 2366347, 9894314026 | ஒட்டப்பிடாரத்திலிருந்து வலது பக்கம் பிரியும் சாலையில் 3 கிமீ தொலைவில் உள்ள கோயில். பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ளது. |
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சாலிக்குளம் பெரும் காடாக திகழ்ந்தது. இவ்விடத்தில் சித்தர்கள், ரிஷிகள், சப்த கன்னிகைகள், இந்திரன் முதலான தேவாதி தேவர்களும் தவமிருந்த தலமாக அறியப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் இன்றும் தேவர்கள் வணங்குவதாக ஐதீகம். சிவகுருநாதர் என்கிற ரிஷியால் பெரும் முற்புதராக இருந்த இடம் இன்று கோயிலாக உள்ளது. தங்கவேலு என்கிற தீவிர சிவபக்தர் சிவகுருநாதருக்கு பூஜைகள் செய்வதில் பெரும் <உதவி புரிந்து வந்தார். அவருக்கு சிவகுருநாதன்- பிற்காலத்தில் முருகனின் அருளால் 7 தலைமுறைகளுக்கு இந்த இடத்தில் உருவாகும் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு உண்டாகும் என்று வரமளித்தார். அவர் வரமளித்தாற் போலவே தங்கவேலுவின் முன் தோன்றல் பாத யாத்திரையாக திருச்செந்தூர் சென்றபோது பெரும் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டு யாத்திரை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் சாலைக்குளத்தில் பெரும் முற்புதர் இருக்கும் இடத்தில் நின்றார். அப்போது முதியவர் வடிவில் ஒருவர் தோன்றி இந்த இடத்து புற்று மண்ணை பிரசாதமாக அவருக்குக் கொடுத்து வறண்ட அந்தப் பூமியில் அருகே ஓர் இடத்தில் கிணறு வெட்ட நீர் கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். மறையும் முன் சில ஓலைச்சுவடிகளையும், புனிதமான பூஜைப் பொருட்களையும் தந்து மறைந்தார். அவ்வாறே செய்தபோது அவ்விடத்தில் நீர் கிடைத்தது. வந்தவர் முருகனே என்றும் உணர்ந்தார். இன்றும் அது நாக சுனைத் தீர்த்தம் என வழங்கப்படுகிறது. அந்த முத்துசாமி அவர்களின் வழித் தோன்றலில் நான்காவது தலைமுறையாக குரு பரமசிவன் அவர்கள் அந்த ஓலைச் சுவடிற்குப் பூஜைகள் செய்து வந்து அருள் வாக்கு கூறுகிறார். பால சுந்தர் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள புற்று சுயம்பு சிவலிங்க வடிவமாக மாறுவதாக உணரப்படுகிறது. பிரதி பவுர்ணமி அன்று புற்று அருகே விசேஷ வழிபாடு நடத்தி மண்பாண்டத்தில் நைவேத்தியம் வைக்கப்படும் போது குருவானவர் பாம்பு வடிவில் வெளிப்படுவதாக ஐதீகம். சண்டிகா பரமேஸ்வரி (முருகனின் தாயார்) மற்றும் வீரமாகாளி (முத்து நாகேஸ்வரி) சன்னிதிகளும் உள்ளன. புற்றிலுறை நாகராஜன் வரப்பிரசாதி. வேல மரம் தல விருக்ஷம். சித்தர் சிவகுரனாதர் தவம் செய்த இடத்தில் இந்த விருக்ஷம் உள்ளது. எண்ணற்றோர்கு பல தரப்பட்ட அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் சித்தர் பீடமாக இது திகழ்கிறது. எண்ணற்ற அதிசயங்களும், மெய் சிலிர்க்கும் சம்பவங்களும் நடைபெறும் விசேஷ கோயிலாக இது திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. தீராத நோய்கள் தீருவதும், குழந்தை பாக்கியம் கிட்டுவதும், நல்ல மண வாழ்க்கை அமைவதும், செல்வச் செழிப்பு பெறுவதும், நாக மற்றும் செவ்வாய் தோஷ நிவர்த்தியும், வாய் பேசாதோர் பேசுவதும், பில்லி சூனிய ஏவல் நீக்கம் பெறுவதும் இத்தலத்தின் பக்தர்கள் அடைந்த பலன்கள். (பிரதி ஞாயிறு 12 மணிக்கு விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.)
|
பூஜை நேரம்: - |
|
|