|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
|
|
|
|
|
|
ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
|
|
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி சிவன் கோயில்
|
|
திருச்சி சிவன் கோயில் (297)
|
|
அருள்மிகு விஷமங்களஈசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு விஷமங்களஈசுவரர் திருக்கோயில்
துடையூர்
திருச்சி |
திருச்சி முதல் முசிறி பாதையில் 10 கி.மீ துடையூர் உள்ளது. அருகில் திருவாசி தேவாரத்தலம் உள்ளது. |
விஷமங்களஈசுவரர்-மங்களநாயகி கோயில் சிறிய கோயில். |
அருள்மிகு நந்திகேசுவரர் திருக்கோயில் |
அருள்மிகு நந்திகேசுவரர் திருக்கோயில்
திருச்சி |
திருச்சிக்கு வடக்கில் 40 கி.மீ |
நந்திகேசுவரர்-மகாசம்பத்கௌரி கோயில். நந்திதேவர் சிறப்புடைவர் . |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
மணப்பாறை
திருச்சி |
திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மணப்பாறை முன்பு அழகிய மலையாக காட்சியளிக்கிறது இக்கோயில். |
குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கும், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலன் கேட்டு வேண்டுபவர்களுக்கும் இது பலன் தரும் கோயிலாக இருக்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும் பவுர்ணமி கிரிவலங்கள் இந்த மலையைச் சுற்றி நடைபெறுகிறது. இக்கோயிலும் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுப்பப் பட்டது என்கிற ஒரு தகவலும் உண்டு. அஷ்டமி பைரவர் பூஜை வெகு பிரசித்தம் இங்கு அம்பாள் வடிவுடைநாயகியாக வீற்றிருக்கிறார். |
அருள்மிகு கலிதீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு கலிதீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில்
மாமுண்டி ஆற்றங்கரை
மணப்பாறை |
மணப்பாறையிலுள்ள மாமுண்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. |
மாமுண்டி ஆற்றங்கரையில் சேரர்களால் உருவாக்கப்பட்டு பாண்டியர்களால் பராமரிக்கப்பட்டு வந்த கோயில் இது. பின் காலப்போக்கில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு கைமாறியது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயில் முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் சிவலாயம் இது. |
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்
மணப்பாறை
திருச்சி |
மணப்பாறை நகரின் மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில். |
சிவபெருமான் நாகநாதர் என்னும் பெயரில் எழுந்தருள்கிறேன் என விருப்பங்கொண்டு தானாகவே சொல்லி எழுந்த கோயில் என்பது இதற்கான வரலாறு. இங்குள்ள அம்மன் மாதுளாம்பிகை. அதாவது மாதுளை முத்துகளைப் போல புன்சிரிப்பால் பக்தர்களின் உள்ளம் குளிர வைப்பதால் இப்பெயர். |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
பொன்முச்சந்தி
திருச்சி |
மூன்று ஊர்களின் பிரதான சந்திப்பான மணப்பாறை புதுக்கோட்டை சாலையில் பொன்முச்சந்தியில் உள்ளது இக்கோயில். |
இக்கோயில் இப்பகுதியில் நூற்றுப்பதினெட்டு கிராமங்களுக்கு பிரதான கோயிலாக இருக்கிறது. இங்கு தரப்படும் விபூதியும் குங்குமமும் விஷக்கடிக்கு அருமருந்தாக விளங்குகிறது. |
அருள்மிகு பசுபதி ஈஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு பசுபதி ஈஸ்வரர் திருக்கோயில்
தின்னகோணம்
திருச்சி |
முசிறியிலிருந்து 15 கி.மீ அடிக்கடி பஸ் வசதி இல்லை. புள்ளம்பாடியிலிருந்து 9 கி.மீ |
தின்னகோணம் என்று வழங்கப்படுகிறது. கல்வெட்டில் நெற்குன்றம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பசுபதி ஈஸ்வரர் கோவிந்தவல்லி |
|
|
|