Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி அம்மன் கோயில்
 
திருச்சி அம்மன் கோயில் (546)
 
அருள்மிகு மதுர காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மதுர காளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், தொட்டியம் நகரம் மற்றும், வட்டம் வழி முசிறி, திருச்சி மாவட்டம் 621215.
+91 44-22762775, 9487338509, 9894225050.
திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் முசிறிப் பாதையில் 48 வது கிமீல் உள்ள தலம் தொட்டியம். தொட்டியத்தில் தொன்மை வாய்ந்த வேதநாரயணப் பெருமாள் கோயிலும் உள்ளது. சென்னை பெருங்களத்தூரிலும் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது.
ஒரு சமயம் இப்பகுதியினை ஆண்ட குறுநில மன்னனின் சகோதரன் குதிரைச் சவாரி மேற்கொண்ட போது அம்பாள் திகழும் புற்றின் மீது ஏறி புற்றுச் சிதைந்தது. அம்மனின் கோபத்திற்கு ஆளாகி அவன் சித்தப் பிரம்மை பெற்று அலைந்தான். அதே பகுதியில் சின்னான் மற்றும் செல்லான் என்கிற பறை வாத்தியக்காரனின் இசைக்கு மயங்கி மதுரையிலிருந்து ஈ வடிவம் ஏற்று அம்பாள் வந்த செய்தி மன்னன் காதுக்கு எட்டியது. மன்னன் அன்னைக்கு ஆலயம் எழுப்பினான். சகோதரனும் நன் மதி பெற்றான். அதே ஆலயத்தில் இவர்கள் இருவருக்கும் சிலையினையும் நிறுவினான். மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததால் மதுரை காளியம்மன் ஆனாள். வடைமாலை சாற்றி அன்னையினை வழிபட எதிரிகளை வெல்லும் திறன் பெறுவர்.
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 9 மணி வரை.
அருள்மிகு காவேரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு காவேரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், திருக்கோயில் சத்திரம், பேருந்து நிலையம் அருகில், காளியம்மன் கோயில் தெரு, திருச்சிராப்பள்ளி 620002, திருச்சி மாவட்டம்.
+91 4332-260998.
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே காளியம்மன் கோயில் தெருவில் உள்ளது. திருச்சி தென்னூரில் உக்ர காளியம்மன் கோயில் உள்ளது. மணப்பாரையில் மாரியம்மன் கோயில் உள்ளது.
கங்கேச யமுனேசைவ கோதாவரி ஸரஸ்வதி... நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு என்கிற ஸ்லோகத்தில் காவேரி 7வது முக்கிய புண்ணிய நதியாக வணங்கப்படுகிறாள். இன்றும் கிணறு தோண்டும் போதும் போர் வெல் எடுக்கும் போதும் இந்த அம்மனை வணங்கி வழிபடுகின்றனர். ஆடிப்பெருக்கின் போதும் ரங்கநாதர் தீர்த்தவாரியாக காவேரி தென்கரையில் எழுந்தருளுகிறார்.
பூஜை நேரம்: -
அருள்மிகு யோக ஞான சரஸ்வதி திருக்கோயில்
அருள்மிகு யோக ஞான சரஸ்வதி திருக்கோயில், துடையூர், திருச்சி.
திருச்சி-நாமக்கல் சாலையில், நொச்சியத்துக்கு அருகில் <உள்ள துடையூர் எனும் தலத்துக்கு ஒருமுறை வாருங்கள். அங்கே, காவிரியிலிருந்து கிளை பிரிந்திருக்கிற கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது யோக ஞான சரஸ்வதி கோயில்.
ஒருகாலத்தில் கடம்பவனமாகத் திகழ்ந்த இடம் இது. கடம்பவனத்து மகாதேவன் என்றும், கடம்பந்துறை சிவனார் என்றும் போற்றப்பட்டிருக்கிறார் இந்தத் தலத்து இறைவன் என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள். காண்பதற்கு அரிதாக இங்கே சிவனாரின் கோஷ்டத்தில், யோக ஞான சரஸ்வதி அற்புதமாகக் காட்சி தருகிறாள். தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு, மாணவ மாணவிகளுக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறாள் சரஸ்வதிதேவி. வியாழக்கிழமைகளில் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, தேனபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், புத்தியில் தெளிவு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். குருவுக்கு உகந்த வியாழக்கிழமை நாளில் இங்கு வந்து, யோக ஞான சரஸ்வதிதேவியை 11 முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; புத்தியில் தெளிவு பிறக்கும்; குழப்பங்கள் யாவும் நீங்கும்; மந்த நிலை மாறும்; படிப்பு, இசை, நடனம் என சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றுத் திகழலாம் என்று பூரிப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
அருள்மிகு மாரியம்மன் (அஷ்டபுஜ துர்க்கை) தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மாரியம்மன் (அஷ்டபுஜ துர்க்கை ) தேவஸ்தானம் திருக்கோயில், அன்பில் போஸ்ட், அன்பில் 621702, வால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.
+91 431-2544927, 9965739750.
பாடல் பெற்ற தலமான சத்யவாகீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகே உள்ளது. அன்பில் லாலகுடிக்கு 5கிமீ முன்னால் திருக்காட்டுப்பள்ளி கல்லணை திருச்சி சாலையில் உள்ளது. திவ்ய தேசமும் உள்ள ஊர்.
சமயபுரத்தில் உள்ள மாரியம்மனின் அக்காளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். அஷ்டபுஜ மாரியம்மன் ஆகிய இந்த அம்மன் சுயம்பு மூர்த்தம் தீராத கண் வியாதி மருந்து (பச்சிலைச்சாறு) ஊற்றுவதன் மூலம் குணமாகும். சமயபுரம் மாரியம்மனை ஒத்தத் திருமேனி. அம்மை நோய் தீர விசேஷ தலம்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு ஊரடச்சி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு ஊரடச்சி அம்மன் திருக்கோயில், குழுமணி, திருச்சி.
திருச்சியிலிருந்து 10 கி.மீ.யில் உள்ளது குழுமணி கிராமம். இந்த ஊரின் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது ஊரடச்சி அம்மன் கோயில். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.
ஊரை அடைத்து காவல் செய்கின்ற அம்மன் என்றும், தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பாற்றும் அன்னை என்றும் இந்த அன்னையை மக்கள் போற்றுகின்றனர். இந்த அன்னையின் சிரசில் தீ ஜுவாலை வீசுவதாகக் கூறும் மக்கள், இவள் காலடியில் வதம் செய்யப்பட்ட மகிஷாசுரனின் மேனி இருப்பதால், அரக்கனைக் கொன்று இந்த உலகைக் காப்பாற்றிய பராசக்தியின் வடிவம்தான் இந்த அன்னை என்றே கூறி வழிபடுகின்றனர். தாய்க்கோழி தனது முட்டைகளையும் குஞ்சுகளையும் எப்படிக் காக்குமோ, அதேபோல் இந்த அம்மன் ஊரை அரவணைத்து அடைகாப்பது போல் பாதுகாப்பதால் இந்த அன்னையை ஊரடச்சி அம்மன் என்றே மக்கள் அழைக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஆறு பவுர்ணமி நாட்களில் அன்னையின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட விரைவில் அவர்கள் தாய்மை அடைந்து, மூன்றாவது மாதம் அன்னைக்கு வளைகாப்பு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி தங்கள் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கின்றனர். பலநூறு குடும்பங்களின் குலதெய்வமாக விளங்குகிறாள். இந்த ஊரடச்சி அம்மன். குலமக்கள் தங்கள் குடும்ப சகிதமாக வந்து பொங்கல் வைத்து ஆராதிக்கும் காட்சியை தினசரி காணலாம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அருள்மிகு பெரியகாண்டி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு பெரியகாண்டி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், வீராப்பூர் 621302, மணப்பாறை மாவட்டம், திருச்சி மாவட்டம்.
+91 4332-267586, 04332-260998.
திருச்சயிலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள மணப்பாறையிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. வீராப்பூர். மணப்பாறை முறுக்கு பிரசித்தமானது.
ஐந்து தலை நாகம் ஒன்று தனக்கு பார்வதி மகளாகப் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டியது. ஆனால் எதிர்பாராத விதமாக பார்வதி அலியாகப் பிறந்தாள். சிவனை நோக்கி ஊசி முனையில் தன நிலை மாற தவமிருந்தாள். ஆறு கன்னிகளும், அதே இடத்தில் தவமிருந்து வீரமகா முனிவரும் அம்பாளுக்குக் காவல் இருந்தனர். இரண்டு சகோதரர்கள் சண்டையிடும் போது, அவர்களின் சகோதரி அருக்காணி பார்வதிக்கு இந்த நிலையிலிருந்து விடுபட உதவுவாள் என சிவன் வரமளித்தார். சிவபெருமான் அருளியது போலவே அருக்காணியினைக் கண்டவுடன் பார்வதி சாதாரணப் பெண்ணாக மாறினாள். அந்த 7 பெண்களுக்கும், பொன்னர் சங்கருக்கும், வீரமகா முனிவருக்கும், கருப்பண்ண சாமிக்கும் அருகே மேற்கூரை இல்லாத ஆலயங்கள் உள்ளன. வேண்டியதைத் தரும் அம்மன். பலருக்குக் குல தெய்வமாக உள்ளதால் எப்போதும் வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.
<< Previous  53  54  55 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar