அருள்மிகு வீரமார்த்தாண்ட விநாயகர் திருக்கோயில் |
திருவேங்கடம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
அருள்மிகு பெரிய பிள்ளையார் திருக்கோயில் |
அருள்மிகு பெரிய பிள்ளையார் திருக்கோயில்
புது பைபாஸ் சாலை
திருநெல்வேலி |
திருநெல்வேலி புது பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. |
பிள்ளையாரை மூல மூர்த்தியாகக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான மிகப் பழைய கோயில்... கணபதியின் 32 ரூபங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ரூபமாகிய உச்சிஷ்ட கணபதியின் வடிவில் இங்கே வீற்றிருக்கிறார். |
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில்,
மூர்த்தீஸ்வரம், தேவர்குளம் அருகில்
திருநெல்வேலி. |
திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு-கேதுவுடன் ஊரை காத்து வருகிறார் சக்தி விநாயகர். |
விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் மக்கள். விநாயகருக்க வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் விநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும். வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம் ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும். அந்த நாளில், மூர்த்தீஸ்வரம் மக்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களும் வந்து, தரிசித்துச் செல்கிறார்கள். |
|
|