Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருப்பூர் மாவட்டம்>திருப்பூர் பெருமாள் கோயில்
 
திருப்பூர் பெருமாள் கோயில் (41)
 
அருள்மிகு சஞ்சிவிராய பெருமாள் திருக்கோயில்
கோட்டமங்கலம், திருப்பூர்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
கோட்டமங்கலம், திருப்பூர்
அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில்
கோட்டமங்கலம், திருப்பூர்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
உடுமலை, கோட்டமங்கலம், திருப்பூர்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
உடுமலை, புக்குளம், திருப்பூர்
அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
கொங்கல்நகர், உடுமலை, திருப்பூர்
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
மொண்டிபாளையம், அவிநாசி, திருப்பூர்
அருள்மிகு பெரும்பண்ணை வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
முத்தனாம்பாளையம், திருப்பூர்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், திருப்பூர்.
திருப்பூரில் வெங்கசேடப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
பாண்டவர்கள் அக்ஞாதவாசம் (எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்வது) மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் துரியோதனன், பாண்டவர்களின் பசுக்களைக் கவர்ந்துசென்றான். பிறகு பாண்டவர்கள் கவுரவர்களுடன் சண்டையிட்டு தங்களது பசுக்களை மீட்டுவந்தனர். வரும் வழியில் திருமாலின் திருக்கோயிலைக் கண்ட அர்ஜுனன், அங்குசென்று பெருமாளை வழிபட்டு, அவருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துச் சென்றான். அந்தத் திருத்தலம் திருப்பூர் ஆகும். திருப்போர் புரிந்து பசுக்களைத் திருப்பி அழைத்துவந்த ஊர் என்பது மருவி திருப்பூர் என வழங்கப்படுகிறது. இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். திருமண்ணுக்கு பச்சைக் கற்பூரம் சாற்றுவது திருப்பதி தவிர எந்தத் தலத்திலும் நிற்பதில்லையென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு பெருமாளுக்கு பச்சைக் கற்பூர திருமண்தான். திருப்பதி பெருமாள் சாயலிலேயே இந்தப் பெருமாள் விளங்குகிறார். வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. உண்டியல், தட்டுக்காக நன்கொடை வாங்குதல் இக்கோயிலில் கிடையாது. பெருமாளுக்கென தனிப்பட்ட முறையில், எவரின் சார்பிலும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை. எந்த சமயத்தில் தரிசனம் செய்கின்றனரோ அந்த பூஜையைப் பார்க்கவேண்டியதுதான். அனைத்து வேண்டுதலையும் நிறைவேற்றும் பெருமாள். திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் உண்டு.
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், முண்டிப்பாளையம், மொண்டிப்பாளையம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் அஞ்சல், திருப்பூர் மாவட்டம் 641655.
+91 4296-289270.
அவிநாசி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஊர். கோயம்புத்தூரிலிருந்து 48 கிமீ. அன்னூர் கானூர்புதூர் பேருந்துப் பாதையில் உள்ள ஊர். சேவூர் வைப்புத் தலத்திலிருந்து 9கிமீ தூரம். புளியம்பட்டியிலிருந்து ஏ-10, 6-ஏ, பி-6, பி-9 பேருந்துகளும் அன்னூரிலிருந்து ஏ-ஆர்.7, செல்வநாயகி மொபசல் மற்றும் அவிநாசியிலிருந்து ஏ-10 மொபசல் செல்வநாயகிப் பேருந்தும் செல்கின்றன.
கொங்கு நாட்டுத் தலங்களில் பிரசித்த பெற்ற வைணவத் தலம். பெருமாளின் முகம் 4 புறமும் தட்டையாகவும் மையத்தில் கூம்பு போன்றும் உள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்ட மாணிக்கரால் கண்டெடுக்கப்பட்டது. ஒரு சமயம் இவர் பசு ஒன்று அங்கிருந்த புற்றின் மீது பால் சொரிவதைக் கொண்டு தோண்டிப் பார்த்த போது சங்கு, சக்கரம், சாளிக்ராம், சிகண்டி ஆயுதத்துடன் பெருமாள் வெளிப்பட்டார். பின்னர் வெங்கடாசலபதிக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. திருப்பதி செல்லமுடியாத பக்ஷத்தில், திருப்பதி வேங்கடவனுக்கு செய்யும் பிரார்த்தனையை இவரிடம் செலுத்தலாம், புரட்டாசியில் விசேஷமாக உற்சவம் நடைபெறும். மேல் திருப்பதி சென்ற பலன். வெங்கடேசப் பெருமாள் கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதும் திறந்திருக்கும், சிறிய இடைவேளைதான்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை
<< Previous  2  3  4  5  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar