அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்,
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் 638601.
|
+91 421-2244623. | சென்னையிலிருந்து கோயம்புத்தூர் இருப்புப் பாதையில் உள்ள ரயில் நிலையம் 476கிமீ தூரம். ஈரோடிலிருந்து 51 கிமீ சேலத்திலிருந்து 113கிமீ. (பி.எஸ்.சுந்தரம் சாலையில் உள்ளது) இரயில் நிலையத்திலிருந்து 2 பர்லாங் நடை. |
பிரசித்தமான வேங்கடவனின் தலங்களில் ஒன்று இது. திருப்பதி பெருமாளின் சாயலிலேயே விளங்குவதால் இப்பெயர் பெற்ற தலம். புரட்டாசி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. உண்டியல் தட்டுக்காக, நன்கொடை வாங்குதல் இக்கோயிலில் கிடையாது. பெருமாளுக்கு எனத் தனிப்பட்ட முறையில் எவரின் சார்பிலும் அர்ச்சனை செய்யப்படுவதில்லை. பெருமாளுக்கு நிகழும் வைபவங்களில் சேவார்த்திகள் எந்த சமயத்தில் தரிசனம் செய்கின்றனரோ அந்தப்பூஜையைப் பார்க்க வேண்டியதுதான். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது. அனைத்து வேண்டுதலையும் நிறைவேற்றும் பெருமாள். திருமண்ணுக்கு பச்சை கற்பூரம் திருப்பதி தவிர எந்தத் தலத்திலும் நிற்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு பெருமாளுக்கு பச்சைக் கற்பூரம் திருமண் தான். திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் இங்குண்டு. வெங்கடேசப் பெருமாள் சீதா லக்ஷ்மண அனுமத் சமேத ராமர் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். 10.30 அமாவசை, பௌர்ணமி, திருவோணம் இரு ஏகாதசி பஞ்ச பருவம் புறப்பாடு. ஊஞ்சல் சேவை .பிரதி வெள்ளி தாயார் புறப்பாடு. மற்றும் ஊஞ்சல் வருகிற அனைவருக்கும் பிரசாதம் உண்டு. |
பூஜை நேரம்: - |
|
|