அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயில் |
வண்டிப்பாளையம்,ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடம் |
தேவிகாபுரம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு அருகர் ஜெயின் திருக்கோயில் |
வெண்குன்றம்,வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு விஸ்வநாதர், தர்மராஜர், பிள்ளையார் திருக்கோயில் |
கொசப்பட்டு,வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயில் |
வந்தவாசி நகர் மற்றும் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு நடராஜர் பஜனை மந்திரம் |
வந்தவாசி நகர் மற்றும் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் |
திருவத்திபுரம்,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு சொர்ணகால பைரவர் திருக்கோயில் |
அருள்மிகு சொர்ணகால பைரவர் திருக்கோயில்,
அழிவிடைத்தாங்கி, திருவண்ணாமலை. |
திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது அழிவிடைத்தாங்கி. காஞ்சிபுரம், செய்யார் மற்றும் ஆற்காட்டிலிருந்து பேருந்துகளும் உள்ளன. |
சிவனின் அம்சமாக, ரவுத்ர மூர்த்தியாக திகழும் பைரவர் இங்கே நெற்றிக்கண்ணோடு சொர்ணகால பைரவர் என்கிற பெயர் தாங்கி, சுற்றியுள்ள எட்டு ஊர்களுக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். வருடத்தில் எட்டு விசேஷ நாட்களில் இந்த எட்டு ஊர்களுக்கும் திருவீதியுலா சென்று, அவ்வூர் மக்களின் தீவினைகளைப் போக்குவது இப்பெருமானது வழக்கமாகும். இத்தல உற்சவத் திருமேனியின் கலை நயத்தை வர்ணிக்க முடியாது. அவ்வளவு பிரகாசமாகத் திகழ்கின்றார்! காஞ்சி மகா பெரியவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோயிலில் தேய்பிறை அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் வரும் காலபைரவாஷ்டமி இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பைரவருக்கு பச்சரிசிமாவு மற்றும் குங்குமத்தால் அபிஷேகம் செய்து, நல்லெண்ணெய் தீபத்தினை கிழக்கு முகமாக 1,5,9 என்கிற எண்ணிக்கையில் திரியிட்டு ஏற்றி, மிளகினால் செய்த வடைமாலை சாற்றி, தயிர்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, எதிரிநாசனம், உத்யோகம், குழந்தை பாக்கியம் போன்ற நற்பலன் பெற்றுச் செல்கின்றனர் பக்தர்கள் பலர்! |
|
|