Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவண்ணாமலை மாவட்டம்>திருவண்ணாமலை பெருமாள் கோயில்
 
திருவண்ணாமலை பெருமாள் கோயில் (369)
 
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் சோகத்தூர் திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்தவாசி இங்கிருந்து நல்லூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோகத்தூர்.
வேதத்தை அசுரர்களிடம் பறிகொடுத்த பிரம்மா லக்ஷ்மி ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி மகா விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தார். திருமால் பிரம்மனின் சோகம் போக்கிய திருத்தலம் என்பதால் சோஹா பஹத்ரூபம் என அழைக்கப்பட்டது. பிறகு சோகத்தூர் என மருவியதாகக் கூறப்படுகிறது.
அருள்மிகு ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயில் முடியனூர் திருவண்ணாமலை
திருவண்ணாமலை-செங்கம் வழியில் சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது முடியனூர் என்னும் கிராமம்.
இத்திருக்கோயிலில், தனிச்சன்னதியில் அருள்புரியும் ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் கால்கள், கல்லால் ஆன சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது ஓர் அதிசயமாகும்.
அருள்மிகு ஆனந்தவல்லி தாயார் சமேத ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஆனந்தவல்லி தாயார் சமேத ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், முடியனூர், திருவண்ணாமலை.
திருவண்ணாமலை-செங்கம் வழியில் சுமார் 25கி.மீ. தூரத்தில் உள்ளது முடியனூர் என்னும் கிராமம்.
இத்திருக்கோயிலில், தனிச்சன்னதியில் அருள்புரியும் அஞ்சனேயர் விக்கிரகத்தின் கால்கள், கல்லால் ஆன சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது ஓர் அதிசயமாகும்.
அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் பாதிரி கிராமம், திருவண்ணாமலை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்தவாசி. இங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது பாதிரி கிராமம். இங்கே சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மெயின் ரோட்டில் இருந்தபடியே கோயிலைப் பார்க்கலாம். வந்தவாசியில் இருந்து பஸ் வசதி உண்டு. ஆட்டோவி<லும் செல்லலாம்.
என்ன பிரச்னைன்னாலும் இங்கே வந்து வேண்டிக்கிட்டா, சீக்கிரமே நமக்கு விடிவு காலம் பொறந்துடும். அவ்வளவு வரப்பிரசாதி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். குடும்பத்துல ஒற்றுமையே இல்லை. கணவன்- மனைவிக்குள்ளே சண்டையும் பூசலுமாவே இருக்கு, ஒருத்தரை யொருத்தர் புரிஞ்சுக்காம, கிழக்கும் மேற்குமா இருக்காங்கன்னு தவிச்சு மருகிக்கிட்டிருக்கிறவங்க, இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணி, வேண்டிக் கிட்டாப் போதும்; கணவனும் மனைவியும் அந்நியோன்யமாகிடுவாங்க என்கிறார் கிருஷ்ணமூர்த்தி
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், சத்ய விஜய நகரம் (எஸ்.வி.நகரம்), 632317, ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
+91 9944728517, 9443964738.
ஆரணியிலிருந்து சுமார் 3கிமீ தொலைவில் உள்ளது.
சத்ய விஜய நகரம் என்பது மருவி இன்று எஸ்.வி.நகரம் என்றழைக்கப்படுகிறது. 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். மார்த்வா பரம்பரையில் வந்த ஆச்சாரியர் சத்ய விஜய சுவாமி அவர்கள் திருவாராதனை செய்த பெருமாள். எனவே இந்தப் பகுதிக்கும் இப்பெயர். இவருடைய ஜீவ சமாதி உள்ள ஊரிது. இவருடைய ஜீவ சமாதி கமண்டலநாத நதியின் கரையில் பிருந்தாவனமாக இன்றும் உள்ளது. அந்தக் காலத்தில் அரண்மனை சாம்ராஜ்யம் முடிந்து பின்னர் ஜாகிர்தாராக இருந்த மார்த்வா வம்சத்தைச் சேர்ந்தவர் இக்கோயிலை பிற்காலத்தில் போற்றிப் பாதுகாத்தார். அவருடைய மனைவி சைவத்தைச் சார்ந்தவளானதால் அருகிலேயே மீனாட்சியம்மை உடனுறை திரியம்பகேஸ்வரர் ஆலயத்தையும் நிறுவினார். எனவே இத்தலம் சிவா விஷ்ணு தலமாக விளங்குகிறது. ஸ்ரீநிவாஸப் பெருமாள் பத்மராவதி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு ஜில்லா வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஜில்லா வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், ஆரணி, பெரிய கடைத்தெரு, ஆரணி வட்டம் 632301, திருவண்ணாமலை மாவட்டம்.
+91 9942309505, 9994784478.
காட்பாடியிலிருந்து 45 கிமீ. வேலூரிலிருந்து 36கிமீ. ஆரணி ரோடு இருப்புப்பாதை நிலையம் உள்ளது. இக்கோயில் ஆரணி நகரத்திலேயே உள்ளது. தற்போது இருப்புப் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.
ஆரணி என்கிற பதத்திற்கு இரண்டு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. கமண்டல நதி பாயும் இப்பகுதியில் முற்காலத்தில் ஆர் என்னும் அத்தி அரங்கள் இருந்தாகவும் காடு என்னும் பொருளில் வரும் அரண்யம் என்னும் பதத்தின் திரிபாக ஆரணி ஆனதாகவும் கூறப்படுகிறது. மற்றோர் கருத்தாக ஒரு புறம் கமண்டல நதி பாய்வதாலும் மற்றோறு புறத்திலிருந்து தச்சூர் நதி பாய்வதாலும் ஆறு இந்த ஊருக்கு அணியாக (நகையாக) விளங்குவதால் ஆரணி என்று அழைக்கப்படுவதாகத் தகவல். பல்லவரால் முற்காலத்தில் ஆளப்பட்ட இப்பகுதியினை பின் ஆட்கொண்ட குலோத்துங்க சோழன் முதலாமவன், இரண்டாமவன் மற்றும் விக்ரம சோழனும் ஆண்டனர். விஜயநகரப் பேரரசின் காலத்தில் தசரா உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பூசை மாலைக் குப்பம் என்னும் பகுதியில் திருமலை சாஹிப் என்பவன் ஆங்கிலோ இந்திய பெண்மணிக்காக கட்டிய பங்களா உள்ளது. பிற்காலத்தில் நவாப்கள் காலத்தில் ஆயுதக் கிடங்காக மாறிய ஊர் இது. ரேணுகாம்பாள் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோயில்களும் உள்ளன. இப்பகுதியில் புத்திரகாமேஷ்டீஸ்வரர் (வெட்டுவாணம் பகுதி) கோயில் உள்ளது. இங்குதான் தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து இராமன் பிறந்ததாகவும் தகவல். தசரதனுக்கும் சிலை உள்ளது. ஜில்லா வரதராஜப் பெருமாள் கிழக்கு திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு வேணுகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், படவேடு ரேணுகாம்பாள் கோயில், நிர்வாகம், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 606905.
+91 4181-248224, 248424.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலைப் பாதையில் வாலாஜாபேட் உள்ளது. இங்கே கிருஷ்ணருக்கு 5 கோயில்கள் உள்ளன. கொட்டை மலையில் வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ட்ராக்டரில் மலைப்பாதையில் சென்று பின் 350 படிகள் ஏற வேண்டும். கமண்டல நதியின் தெற்கே குன்றின் மீது லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலும் உள்ளது. வலப்பக்கம் லக்ஷ்மி அமைந்திருப்பது வித்யாசமான அம்சம். இக்கோயிலும் படவேடு மாரியம்மன் நிர்வாகத்தில் வருகிறது.
ராஜ கம்பீரமலை என்னும் கோட்டைமலை 2500 அடி உயரமானது. காட்டின் நடுவே செல்லும். மலைப்பாதையில் இரும்பு பாலங்களும் உள்ளன. இங்கிருந்துஜவ்வாது மலையின் வனப்பானக் காட்சியினைக் காணலாம். வேணுகோபாலசுவாமி ருக்மணி சத்யபாமா நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
பூஜை நேரம்: காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை. (சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் திறந்திருக்கும்.)
அருள்மிகு ஜில்லா இராமர் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஜில்லா இராமர் தேவஸ்தானம் திருக்கோயில், ஆரணி, ஆரணி வட்டம் 632301, திருவண்ணாமலை மாவட்டம்.
+91 9942309505.
ஆரணி நகரத்திலேயே உள்ளது. பழங்கமூரில் சிவன் கோயில் உள்ளது. மேலும் அருகே வாழப்பந்தல் சாலையில் உள்ள கல்பூண்டியில் விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர் திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசிக்குச் சமமான தலம் உள்ளது. தெற்கே பையூரில் விரூபாக்ஷி சமேத விரூபாக்ஷேஸ்வரர் கோயிலும் உள்ளது. பட்டினத்தார் பாடல் பெற்ற தலமிது. வடமேற்கில் கரி மாணிக்கப் பெருமாள் மற்றும் பொன்னியம்மன் கோயில்கள் உள்ளன. பிறப்பறுக்கும் பாடல் பாடிய பட்டினத்தார் பாடல் பெற்ற தலம் ஒரு புறமும் மற்றோர் புறம் புத்திரகாமேக்ஷ்டியாகம் செய்து பிள்ளைப் பேறு தரும் தலம் மறுபுறமும் இருப்பது வியாப்பானத் தகவல். ஆரணி வேலூர் பாதையில் சேயூர் 3 கிமீ. பின் அங்கிருந்து 2கிமீ அடையபலம் என்கிற ஊர் உள்ளது. இது அப்பைய்ய தீக்ஷிதர் அவதாரத் தலம். இத்திருக்கோயிலின் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தேர் உள்ளது. ஆரணியிலிருந்து கொசப்பாளையம் (3கிமீ) செல்லும் பாதையில் உள்ளது. எஸ்.வி.நகரத்தில் ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் உள்ளது.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். வீர ஆஞ்சநேயருக்குத் தனி சன்னிதி உள்ளது. சீதா லக்ஷ்மண சமேத கோதண்டராமர் மேற்கு திருமுக மண்டலம். இரண்டு கைகளுடன் வில் அம்புடன் நின்ற திருக்கோலம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை
அருள்மிகு ராம பஜனை மந்திரம் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ராம பஜனை மந்திரம் தேவஸ்தானம் திருக்கோயில், கேட்டவரம்பாளையம், வழி ஆதமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், 606901.
+91 44-45534041, 42047288, 9444153752, 9840304756,
போளூரிலிருந்து வீரளூர் செல்லும் பஸ் மார்க்கத்தில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைப்பாதையில் 18 கிமீ ல் உள்ள ஊர்.
மகா பெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஓர் தேங்காய் கொப்பரையில் நுணுக்கமாக ராமர் பட்டாபிஷேகக் காட்சியை செதுக்கி அவரிடம் தர இது. மடத்திலே இருப்பதைவிட கேட்டவரம்பாளையம் பஜனை மடத்திலே கொடுக்கச் சொன்னார். பல வருடங்கள் பூஜித்து பாதுகாக்கப்பட்டு வந்த அது பின்னர் சேதமானது. ஆதி காலத்தில் கஷ்டஹரம்பாளையாக இருந்தது பிற்காலத்தில் காட்டு அரண் பாளையம் ஆகி பின்னர் கேட்டவரம்பாளையமானது. தற்காலத்தில் 1907ல் ஸ்ரீராம பஜனை மடம் உருவானது. ஜவ்வாது மற்றும் பர்வத மலைத் தொடர்களைப் பின்னடக்கி இங்கே 2 கோயில்கள் உள்ளன. சிவனுக்கும் பெருமாளுக்கும் இவை அமைந்துள்ளன. மேலும் ஒரு சிறிய குன்றில் 3 கிமீ தூரத்தில் அலர்மேல்மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலும் உள்ளது. மாரியம்மன் கோயிலும் அதை அடுத்து 2 புஷ்கரணிகளும் உள்ளன.
அருள்மிகு உத்தமராயப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு உத்தமராயப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில், பெரிய அய்யம்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம் 06603.
+91 4181-248224, 248424, 9345524079.
வேலூரிலிருந்து திருவண்ணாமலை பாதையில் 23வது கிமீல் உள்ள கண்ணமங்கலத்திலிருந்து 6கிமீ தூரம் சென்றால் கோயில். ஆட்டோ வசதி உண்டு. மலைகள் சூழ்ந்த பகுதியில் 300 படிகள் ஏறிச்சென்றால் மலை மேல் கோயில்.
ஆடு மேய்க்கும் ஊமைச்சிறுவன் முன் ஓர் பெரியவர் தோன்றி அவன் சிரசின் மீது கை வைத்து நான் வந்திருக்கிறேன் என்று ஊர் மக்களிடம் போய்ச் சொல்லிவிட்டு வா எனக் கூற, அவனும் ஊர் முழுதும் மக்களிடம் பெரியவர் வந்திருக்கிறார் என்று கூறுகிறான். பேச்சை அடைந்த அவனைக் கண்டு மலைத்த மக்கள் இம்மலைக்கு வந்தபோது சங்கு சக்கிரத்துடன் பெருமாள் சிலையாகக் காட்சி தருகிறார். விஜய நகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் ஆனார். தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்யப்படுகிறது. சனிக்கிழமைகளில் திருமஞ்சனம். பேச்சுத்தன்மை பெற, பாடகர்கள் குரல் வளம் பெற இப்பெருமானிடமிருந்து தேன் பெற்று துளசியால் நாக்கில் தடவினால் பலன் கிடைக்கும். சிறுவனுக்கு காட்சி கொடுத்த மகர விழா காணும் பொங்கலுக்கு மறு நாள் நடைபெறுகிறது. அருகே நாகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இங்கு வழிபட நாக தோஷ நிவர்த்தி கிட்டும்.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 8 மணி வரை. (மற்ற நாட்களில்) காலை 7.30 மணியிலிருந்து மாலை 7 மணி வரை. (சனிக்கிழமைகளில்)
<< Previous  34  35  36  37  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar