அருள்மிகு நரசிம்மப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு நரசிம்மப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
சம்பத்கிரி,
போளூர் மற்றும் வட்டம் 606803,
திருவண்ணாமலை மாவட்டம். |
+91 9842307594, 9443098358. | வேலூர் திருவண்ணாமலைப் பாதையில் 33கிமீ தொலைவில் உள்ளது. வேலூரிலிருந்து 48 கிமீ வந்தவாசியிலிருந்து 55 கிமீ. மலைக்கோயில். 840 படிகள். |
தொன்மை வாய்ந்த நரசிம்மர் தலமிது. |
பூஜை நேரம்: காலை 8.30க்குள் பூஜை நடைபெறுகிறது. |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணஸ்வாமி தேவஸ்தானம் திருக்கோயில்,
ஆக்கூர்,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
631701. |
+91 4182202298, 9843110877, 9444440194. | காஞ்சி வந்தவாசி பாதையில் 20கிமீ தொலைவில் உள்ள ஊர். இந்தத் தலத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன. செய்யாற்றிலிருந்து வருபவர்கள் பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம் வழியாக வந்தால் 17கிமீ காஞ்சி வந்தவாசி சாலையில் வரும்போது கூழமந்தலுக்கு முன்னால் பிரியும் ஆக்கூர் கூட்ரோடிலிருந்து 4கிமீ உள்ளே சென்றால் ஊர். வந்தவாசியிலிருந்து 28 கிமீ. |
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். சோழர் மற்றும் நாயக்கர் காலத்துத் திருப்பணி. அந்தக் காலத்தில் தொட்டாச்சாரியர் இப்பகுதியில் தங்கி இருந்து வந்த ஆசார்யர் ஆவார். பெரும் முயற்சி எடுத்து இக்கோயிலை நிர்மாணித்தார். அவருடைய கால கட்டம் கிபி 1509-1591 என்பதால் இக்கோயில் குறைந்த பட்சம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தலத்தின் பின்னணி சிலர் 3ம் நூற்றாண்டு கிமு என்கிற கருத்தும் கூறுகின்றனர். ஆறு ஊர்கள் கொண்ட கூட்டம் என்பதின் திரிபாக ஆக்கூர் ஆனது. அவை சும்புராநத்தம், சிங்கிலி பட்டறை, தாத்தா பட்டறை நானேஸ்வரன் மேடு, பிரங்கவாசம், ஸ்ரீநிவாஸபுரம் ஆகும். இப்பெருமாள் விக்ரகங்கள் கிடைக்காது போன போது, ஸ்ரீமான் தொட்டாச்சாரியார் கனவில் பெருமாள் தோன்றி திருமலையில் தூம்பூர்கோனை என்கிற இடத்தில் பூமிக்கு அடியில் பாம்பு புற்றின் அருகே இருந்த விக்கிரகங்களைக் பிரதிஷ்டை செய்யும்படி பெருமாள் பணித்ததாக வரலாறு. தொட்டாச்சாரியார் (கன்னட மொழியில் பெரியஆச்சாரியார் எனப் பொருள்) சோளிங்கபுரம் கோயிலில் கைங்கர்யம் செய்தவர். காஞ்சி வரதரின் கருட சேவையை தொடர்ந்து கண்டவர். வயோதிக காலத்தில் காஞ்சி சென்று தரிசிக்க முடியாத போது சோளிங்கபுரத்திலேயே வரதர் கருட சேவையைக் காட்டினார். பெருமாளின் இடக்கையில் தாயாரை அணைத்தும் தாயார் பெருமாளின் வலப்புறம் கையை அணைத்த வண்ணம் காட்சியளிப்பது சிறப்பு. சதுர்புஜத்துடன் கண்ணன் சங்கு சக்கிரத்துடனும், பஜனை கோயிலின் இராமபிரானும், சக்கரத்தாழ்வார், தாயார் மற்றும் உற்சவர் ஸ்ரீநிவாஸனோடு கர்ப்பக் கிரகத்திலேயே திகழ்கின்றனர். ஆக்கூர் ஆண்டவர் ஸ்ரீமத் ஸ்ரீநிவாஸ தேசிகன் அவர்களின் (ஸ்ரீமத் ஆண்டவனின் ஆஸ்ரமம் வழியில் வந்தவர்) அவதாரத் தலம். ஆக்கூர் ஆண்டவன் 1880ல் பிறந்தார். இவரது திருநட்சத்திரம் புரட்டாசி உத்திரட்டாதி. இவர் 8வது பட்டம், இயற்பெயர் ரங்காச்சாரியார். 1931 ஸ்ரீமத் நம்ஆண்டவர் ஆனார். நாடி ஜோதிடத்தில் இந்தத் தலத்தை கேரள மாநிலத்திலிருந்து வருபவர்கள் காழியூர் வேலூர் பகுதி உக்கல் சார்ந்த ஆக்கூர் என்றும் ராகு கேது மட்டும் அல்லாமல் இதர நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷத்திற்கும் நிவாரணமளிக்கும் தலமாகவும் அறிந்து வருகின்றனர். இந்தப் பகுதியினைச் சுற்றியுள்ள அனைத்து கோயில்களிலும் பொதுவாக தீபஸ்தம்பம் உள்ளன. இது அந்தக் காலத்தில் தெரு விளக்குகள் இல்லாத போது தெரு முழுதும் கூட இந்தத் தீப ஸ்தம்பகளில் விளக்கேற்றப் பட்டதாகத் தகவல். சித்திரை வருடப்பிறப்பு, ஸ்ரீஜயந்தி திருமஞ்சனம் மற்றும் மறு நாள் புறப்பாடு, புரட்டாசி 3ம் சனி பவித்ரோற்சவம், திருக்கார்திகை, வைகுண்ட ஏகாதசி வீதி உலா விசேஷம் மார்கழி வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருக்கோயிலின் உள்ளேயே புறப்பாடு நடைபெறுகிறது. தனியாக அமைந்துள்ள தாயார் சன்னிதி பிற்காலத்தில் குழந்தை வரம் வேண்டிய அடியார் ஒருவர் பிரதிஷ்டை செய்தார். திருப்பதி பெருமாளை வணங்கிய பலன் இப்பெருமானை வணங்கக் கிட்டும். லக்ஷ்மி நாராயணஸ்வாமி அம்புஜவல்லி, காளிங்க நர்த்தன கண்ணன் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். பொதுவாக இரண்டு கால பூஜை. மார்கழி மாதத்தில் மூன்று காலம். தகவல் தெரிவித்து சேவிக்கலாம். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு ரங்கநாதர் வேதநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ரங்கநாதர் வேதநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
திருமால்பாடி,
அனந்தோடு போஸ்ட்,
வழி தேசூர்,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
604501. |
+91 9865454998. | சென்னை செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் 30கிமீ. இந்தப் பாதை வந்தவாசிக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் மழையூர் கூட் ரோடு அருகே தேசூர் என்னும் ஊரில் இடப்புறம் பிரியும் சாலையில் 4 கிமீ சென்றால் ஊர். மலைமேல் கோயில். சுமார் 150 படி இருக்கும். சுலபமாக ஏறலாம். |
விராஜபுரி என்பது பழைய பெயர். பராந்தக சோழனின் மகன் விக்ரம சோழன் கட்டிய கோயில். 1135ல் ராஜநாராயண சம்புவாராயர் மற்றும் 1529ல் வீரநரசிங்கத்தேவர் மகன் அச்சுத தேவமாகராயர் திருப்பணி செய்த தலம். வந்தவாசியில் உள்ள சீயமங்கலம் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ள தொல்பொருள் மையத்திற்கு அருகே உள்ளது. தற்போதுள்ள கோயில் சமீபத்தில் 2009ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காலத்தின் கோலத்தால் பல யுகங்களைக் கடந்து மாற்றங்கள் ஏற்பட்டு தற்போதுள்ள நிலையில் உள்ளது. தொன்மை வாய்ந்த பல கல்வெட்டுகள், செய்திகள் மறைந்து போயிருக்கலாம் என்று அறியப்படுகிறது. வியாசரின் புத்திரன் சுகப்பிரம்மர் (ஸுக என்றால் கிளி கிளியின் முகம் கொண்டவர்) இத்தலத்தில் நடந்தபோது காலில் கட்டை விரலில் அடிபட்ட போது பெருமாள் காட்சி கொடுத்து இத்தலத்தில் தான் வாசம் செய்வதாகக் கூறிய தலம். எவ்வாறு வைகுண்டத்தில் ஓடும் வ்ரஜை நதியின் அருகே பெருமாள் பள்ளிகொண்டு இருக்கிறாரோ அவ்வாறு இங்கு பள்ளிகொண்டுள்ளார். மூன்றடி அளந்ததை நினைவு கூறி சயனத்தில் 3 விரல்களைக் காண்பித்தவாறு நாரதருக்கு காட்சி கொடுத்தார். இதனால் இங்குள்ள தீர்த்தம் நாரத தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. பெருமாளின் திருமஞ்சனத்திற்கு இத்தீர்த்தத்தை நாரதர் பயன்படுத்தியதாக குறிப்பு உள்ளது. |
பூஜை நேரம்: காலை 8.30 மணி முதல் - மணி வரை, மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை (ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசிப்பது சவுகரியம்.) |
அருள்மிகு சுந்தர வரதர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தர வரதர் தேவஸ்தானம் திருக்கோயில்,
வழுவூர் (வழுர்),
கிராமம் மற்றும் அஞ்சல்,
வழி மருதாறு,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
604405. |
+91 9486466147, 9840053289. | வந்தவாசியிலிருந்து கீழ் கொடுங்கல்லூர் சென்றால் அந்த ஊருக்கு அருகே இத்தலம் உள்ளது. |
இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளைக் கடந்த தலம். சேஷாத்ரி சுவாமிகளின் அவதாரத் தலம். இங்கே தற்போது அவருக்கு மடம் கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவர் பகவான் ரமணரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. ஔவையார் குளம் 13 ஏக்கரில் உள்ளது. ஈசான்யத்தில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் காமரசவல்லி கோயிலும் உள்ளது. தவளகிரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்தைச் சிலர் தேவார வைப்புத் தலமாகவும் குறிப்பிடுகின்றனர். வழுவூர் அகரம் என்பதே தற்போது வழுர் ஆனது. அகரம் என்கிற வார்த்தை அக்ரஹாரத்தின் திரிபு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற உள்ள திருப்பணிக்கு உதவலாம். சுந்தர வரதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம் ஒரு கால பூஜை. |
பூஜை நேரம்: - |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப்பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
பழவேரி தேராசபுரம் போஸ்ட்,
வழி தெள்ளாறு,
திருவண்ணாமலை மாவட்டம்,
604406. |
+91 44-22425160, 044-28144652, 9952743971. | திண்டிவனம் வந்தவாசி சாலையில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 17கிமீ. வெளிமேடுபேட்டை, காட்டேரி தாண்டியவுடன் ஊர். வந்தவாசியிலிருந்து 22கிமீ. தெள்ளாறு தாண்டியவுடன் வரும். |
பிராசீன கந்தபுரி (கந்தம் என்றால் நிறுவனம் என்றும் அதனால் இது வேத மணம் கமழ்ந்த ஊர்) என்கிற பெயர் கொண்ட தலம். தோல்வியடைந்த பாண்டிய மன்னனால் தொண்டைமண்டலத்துச் சோழன் மதுராந்தக உத்தமசோழனுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் இது. இமயம் முதல் இராமேஸ்வரம் வரை தலயாத்திரை மேற்கொண்ட போது வியாசரால் பூஜிக்கப்பட்ட பெருமான். வேரி என்கிற தமிழ்ச்சொல்லுக்கு தேன், கள், மணம் எனப் பொருள்கள் உண்டு. அந்த வகையில் இங்கு நறுமணம் மிக்க பகுதியாக இருந்ததால் பழவேரியானதாகத் தகவல். இராமபிரானின் தந்தைக்கு புத்திரகாமேஷ்டி யாகத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த ரிஷ்யசிருங்கரின் தந்தை விபண்டகரை வணங்கி இத்தலப் பெருமாளை வணங்கியதாகப் புராணக் குறிப்பு கூறப்படுகிறது. அஹோபிலம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஆதி வண்சடகோபன் நாராயண யதீந்திரரின் அவதாரத் தலமும் ஆகும். பிரதி ரேவதி நட்சத்திரத்தன்று சகஸ்ரநாமம் நடைபெறுகிறது. லக்ஷ்மி நாராயணப்பெருமாள் மகாலக்ஷ்மி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். ஒரு கால பூஜை தகவல் தெரிவித்து சேவிக்கலாம்.
|
பூஜை நேரம்: - |
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
தேசூர்,
தேசூர் மற்றும் அஞ்சல்,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
604501. |
+91 8098224135, 9047972631 | வந்தவாசி உத்திரமேரூர் பாதையில், மழையூர், தேசூர் ஆகிய ஊர்கள் உள்ளன. தேசூரிலிருந்து திருமால்பாடி 3 கிமீல் உள்ளது. |
மாதப் பிறப்பு, உடையவர் திருநட்சத்திரம், நவராத்திரி, பங்குனியில் வருடாந்திர பிரம்மோற்சவம், விசாகம் (கருட சேவை), புரட்டாசி 5 சனிக்கிழமை விசேஷ உற்சவம் நடைபெறுகிறது. மார்கழி உற்சவம் மற்றும் கூடாரவல்லி சிறப்பாக நடைபெறுகிறது. தேசிங்கு ராஜாவினால் பூஜிக்கப்பட்ட பழமை வாய்ந்த தலம். தேசிங்கு ராஜாவின் பெயரிலிருந்துதான் தேசூர் என்கிற பெயர் வந்ததாகத் தகவல். ஆதிகேசவப் பெருமாள் எதிராஜவல்லி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
|
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு ராமர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ராமர் தேவஸ்தானம் திருக்கோயில்,
இராகுநாத சமுத்திரம்,
வழி பெரணமநல்லூர் மற்றும் அஞ்சல் (எஸ்.ஓ),
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
604503. |
+91 9842061688. | இஞ்சிமேடு சேத்துப்பட்டுப் பாதையில் உள்ள சடத்தாங்கல் மார்க்கத்தில் உள்ளது. அருகே பெரிய கொழப்பலூர் என்கிற இடத்தில் புராதன சிவன் கோயிலும் மேலும் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலும் உள்ளன. |
2009ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற தலம். பெரணமல்லூரிலிருந்து பேருந்துகள் இஞ்சிமேடு தலத்திற்கு இந்தத் தலம் வாயிலாகச் செல்கிறது. மதுராந்தகம், இஞ்சிமேடு, நெடுங்குணம் என வியாபித்து இருக்கும் இராமர் ரகு குலத்தின் நாயகனாக இருக்கும் சிறப்பை விளக்கும் வகையில் பெயர் பெற்ற தலம். இந்த ஊரின் பெயரில் சமுத்திரம் என்கிற வார்த்தை இருப்பதாலோ என்னவோ எப்போதும் தண்ணீர் பஞ்சம் வந்ததில்லை என்கிற செவி வழிச் செய்தி கூறுகிறது. 600 வருடங்கள் நிரம்பிய கோயில். பத்மாத்ரி தாயாருக்குத் தனி சன்னிதி உள்ளது. ராமநவமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பல்லவர் காலத்துக் கோயிலாகத் திகழ்ந்து ரகுநாத மன்னனால் கட்டப்பட்டது. அமர்ந்த கோலத்தில் சின் முத்திரையுடன் வலப்புறம் சீதா அமர இடப்புறம் லக்ஷ்மணன் நின்ற வண்ணம் உள்ளார். அனுமன் எதிரே வேதம் படிக்கிறார். படவேட்டில் உள்ள மாரியம்மன் கோயிலிருந்து ஒன்றரை கிமீ தொலைவில் உள்ள கமண்டல நதிக்கரையில் இதே போல் இராமர் உள்ளார். கமண்டல ஆறு செய்யாற்றில் கலக்கிறது. நெடுங்குணம், படவேடு இராமர் மற்றும் இக்கோயிலில் இராமர் அமைப்பு ஒரே மாதிரி உள்ளது. படவேடு இராமர் ஞானோபதேசக் கோலம். பெரிய சிலை. இவர் யோக நிலையில் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் அனுமன் ஓலைச் சுவடு படிப்பது போல் அமர்ந்தும் தனித்தன்மையுடன் திகழ்கிறது. கிபி 12ம் நூற்றாண்டு கோயில் இக்கோயில் படவேடு மாரியம்மன் கோயிலுடன் இணைந்தது. சீதா லக்ஷ்மண ஆஞ்சநேயர் சமேத ராமர் பத்மாத்ரி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை |
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
வல்லம் (வந்தவாசி),
வந்தவாசி சேத்துப்பட்டு பாதை,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்,
604505. |
+91 4183-294313. | வந்தவாசி சேத்துப்பட்டுப் பாதையில் மழையூர் கூட் ரோடிலிருந்து இவ்வூர் அருகில் உள்ளது. வந்தவாசி வல்லம் கூட்ரோடு வரை 13கிமீ. அங்கிருந்து 2கிமீ தூரத்தில் கோயில். சென்னை கோயம்பேடிலிருந்து தடம் எண் 208, 422, 148 ஆகியவை செல்லும். |
பழமையானக் கோயில், மதில் சுவற்றில் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூரில் உள்ள வளர்புரீஸ்வரர் கோயிலிலும் சுந்தர பாண்டியதேவர் மன்னன் (கிபி 1251-1271) மற்றும் விஜயநகர சாளுவ மன்னன் நரசிம்ம தேவராயன் 1485-1491 கல்வெட்டுகள் உள்ளன. நரசிம்ம தேவராயன் திருப்பதியில் 1473ல் ஊஞ்சல் மண்டபம் கட்டி இந்தச் சேவையைத் ஆரம்பித்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல திருப்பணிகள் செய்தவர். எனவே இந்தத் தலம் குறைந்த பட்சம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனத் தெரிகிறது. முற்காலத்தில் இங்கு கருட வாகனம் மற்றும் ஆஞ்சநேயரும் இருந்ததாகச் செவி வழிச் செய்தி கூறுகிறது. தற்போது புணரமைப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. 1760ல் பிரிட்டிஷாருக்கும் ஃப்ரெஞ்ச் படையினருக்கும் வந்தவாசியில் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது. வாண்டிவாஷ் என்று அவர்கள் அழைத்த பகுதியே வந்தவாசியாகும். அந்த ஆண்டே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டாகும். கரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு கரதூஷணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு கரதூஷணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
பெரிய கொழப்பலூர்,
வந்தவாசி வட்டம்,
632313,
திருவண்ணாமலை மாவட்டம். |
+91 9943006927. | காஞ்சி செய்யாறு பாதையில் உள்ள அவணியாபுரத்திலிருந்து சேத்துப்பட்டு பாதையில் 8கிமீ தொலைவில் உள்ளது பெரிய கொழப்பலூர். நாராயணமங்கலம், அல்லி அந்தல், மகாதேவிமங்கலம் தாண்டியதும் இந்த ஊர். |
பெரிய கொழப்பலூரில் சிவன் கோயிலும் கரதூஷணப்பெருமாள் கோயிலும் உள்ளன. இரண்டும் தொன்மை வாய்ந்தவை. திரிபுரசுந்தரி உடனுறை திருக்குராஈஸ்வரர் அமைந்தது சிவன் கோயிலாகும். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், கும்பகர்ணன், இராவணன் என அவதரித்த ஜெய விஜயர்கள், முன்பொரு சமயம் கரண் தூஷணன் என்னும் அரக்கர்களின் கொடுமை அதிகமாகவே தேவர்கள் முறையிட மகாவிஷ்ணு அவர்கள் இருவரையும் மாய்த்த போது இரத்தம் பீறிட்டெழ மேற்கு திசை பார்த்துக் குழம்பிய வண்ணம் நின்றார். அவ்வாறு அவர்களைச் சாய்த்த இடம் தச்சூர் என்கிற இடமாகும். இது ஆரணி தேவிகாபுரம் பாதையில் அறையாளம் தச்சூர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த இடத்தில் இரத்தம் விழுந்ததின் அம்சமாக மண் சிவப்பாக உள்ளது. அவ்வாறு வீழ்ந்த அந்த இரண்டு அரக்கர்களும் பெருமாளிடம் தங்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தைத் தர வேண்டிய போது பெருமாளின் அனுக்கிரகப்படி இன்றும் கோலத்தைச் சுற்றி இடும் செம்மண் இவர்கள் நினைவாகவே பண்டிகை நாட்களில் இடப்படுவதாகத் தகவல். சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளது. இந்தப் பெருமாள் சுயம்பு. வியாதிக்கு அதிபதியாதலால் இவர் வியாதிகளை நீக்கக் கூடியவர். பெருமாளின் பாதத்திற்குக்கீழ் ஆதி சங்கரர் பீடம் உள்ளது. இவரை வணங்க கல்வி மேம்பாடு மற்றும் திருமண பாக்கியம் கிட்டும். கரதூஷணப் பெருமாள் கனகவல்லித் தாயார் மேற்கு திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம். ஒரு கால பூஜை. |
பூஜை நேரம்: - |
|
|