அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் |
குன்னத்தூர்,ஆரணி வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
காராமணிக்குப்பம்,கடலூர் வட்டம் மற்றும் மாவட்டம் |
|
|
அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் |
அருள்மிகு முருகப்பெருமான் (நட்சத்திரக்கோயில்) திருக்கோயில்,
வில்வாரணி,
எலத்தூர் வழி செங்கம்,
போளூர் வட்டம்,
606906, திருவண்ணாமலை.
|
போளூர் வட்டத்தில் உள்ள வன்னியனூர், அலந்தூர், மோட்டூர் பாதையில் உள்ள ஊர் வில்வாரணி, போளூர் செங்கம் நெடுஞ்சாலையில் போளூருக்குத் தெற்கே 15 கிமீலும் செங்கத்திலிருந்து வடக்கே 20 கிமீ தொலைவிலும் உள்ளது. பாக்கம் என்கிற ஊருக்கு அருகே உள்ளது. 186 படிகள் கொண்டது. திருவண்ணாமலையிலிருந்து 24 கிமீ தூரம். எலத்தூரில் உள்ள சப்த (7) கரைகண்டீஸ்வரர் தலம் ஏழில் ஒன்று. மற்றவை 1. போளூர் காஞ்சி 2. கடலாடி, 3. மாம்பாக்கம், 4. தென் மகாதேவமங்கலம், 5. பூண்டி, 6. குருவிமலை. படவேடு ரேணுகாம்பாள் கோயிலிற்கு தெற்கே உள்ள மலையில் குண்டலிபுரம் என்கிற இடத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் வள்ளி தெய்வானையுடன் அமைந்துள்ளது. |
இத்தலத்தில் நட்சத்திரக் கோயில் என்கிற பெயரில் அவரவர் நட்சத்திர நாளில் வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்கிற ஐதீகம் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன் குருக்கள் இருவர் இங்கிருந்து திருத்தணிக்கு காவடி எடுத்து சென்று வழிபட முருகன் கனவில் தோன்றி இந்த ஊரிலேயே தான் நாக வடிவில் வழிகாட்டுகிறேன். அங்கே என்னைக் கண்டு வழிபடுங்கள் எனக் கூறினார். அவ்வாறே ஊர் மக்களோடு வில்வ மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் நாகம் வழிகாட்ட சுயம்புவாக முருகனின் உருவமும் குடைப்பிடித்தாற் போல் நாகமும் இருந்ததையும் கண்டனர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பாடல் பெற்ற தலமிது. இங்கு முருகன் தண்டாயுதபாணியாக மயில் மேல் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மக்கட்பேற்றிற்காக கிருத்திகை அன்று அன்னதானம் செய்து வேண்டிக்கொள்கின்றனர். பங்குனி உத்திர விழா 10 நாட்களும் ஆடி மற்றும் தைக்கிருத்திகை விழாக்களும் பிரசித்தம். பவுர்ணமி கிரி வலம் செல்லும் வழக்கமும் உள்ளது. இது சுயம் வ்யக்த க்ஷேத்திரம். (தானாக உருவானது). கிருத்திகை அன்று சுயம்புவாக சிவன் தோன்றியதாக வரலாறு. கிருத்திகை அன்று 27 நட்சத்திரங்களும் இக்கோயிலில் எழுந்து அருள்வதாகவும், சிவலிங்க ரூபத்தில் முருகரே திகழ்வதாகவும் ஐதீகம். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
|
|