அருள்மிகு அங்களாபரமேஸ்வரி திருக்கோயில், |
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம். |
இத்திருத்தலம் மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. |
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
சிறப்பு : அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மன்னார்குடிக்கு அருகில் அமைந்துள்ள கிராமமான வேட்டைத்திடல், கர்ணாவூர், அரிச்சயபுரம், சவளக்காரன், பாமணி, உடையார்மானியம், எடமேலையூர், எடகீழையூர், மற்றும் தேவங்குடி ஆகிய 9 கிராம மக்களும் திருவிழாவின்போது ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவந்து அம்மனுக்கு ஒற்றுமையாக அபிஷேகம் செய்வார்கள். |
அருள்மிகு பாடைகட்டி மாரியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு பாடைகட்டி மாரியம்மன் திருக்கோயில்
வலங்கைமான்
திருவாரூர் |
வலங்கைமானின் மையத்தில் அமைந்துள்ளது. |
- |
அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம். |
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. |
இங்கே ... பால காமாட்சியாக, சக்ரப் பிரதிஷ்டையுடன் கருணை பொங்கக் காட்சி தருகிறாள் காமாட்சி அம்பாள். காசியம்பதியில் இருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனி அமைந்துள்ளது. எனவே, இதை காசிக்கு நிகரான தலம் எனப் போற்றி, பித்ரு காரியங்களை கோயில் அருகில் நிறைவேற்றிச் செல்கின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலில், தெற்கு நோக்கி அருளும் அனுமனும் விசேஷம். இவரை வழிபட தீவினைகள் யாவும் நீங்கும். |
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் |
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
கருவலஞ்சேரி
மன்னார்குடி |
கும்பகோணம்- வலங்கைமான்-மன்னார்குடி பாதையில் மருதாநல்லூரிலிருந்து 1 கி.மீ |
அகிலாண்டேஸ்வரி தாயிடம் வேண்டிக் கொண்டு அவளது மஞ்சள் கிழங்கினைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து பூசி வரும் பெண்டிருக்குப் பிள்ளை பாக்கியம் உறுதி. |
அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில் |
அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில்
வஸ்தராஜபுரம்
திருவாரூர் |
திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் இருக்கும் பேரளம் எனும் ஊரின் மேற்கே சுமார் 3 கி.மீ யில் இருக்கிறது வஸ்தராஜபுரம் கிராமம். இவ்வூரின் கிழக்கே திருமீயச்சூர், மேற்கே திருப்பாம்புரம், தெற்கே திருவீழிமிழலை, வடக்கே தேரழுந்தூர் திருத்தலங்கள் உள்ளன. |
உருமாறி கருமாரியான தெய்வம். இங்கே ஊர்காத்து நின்று அருள்கிறது. அதோடு நாகம் என் சொல்கேட்டு நகரும் என்பதுபோல் தேவியின் திருப்பாதத்தின் கீழ் பாம்பு அமைக்கப்பட்டிருக்கிறது. கருமாரியை வணங்குவதும் ராகு, கேது தோஷங்களைப் போக்கும் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை. |
|
|