அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
கொண்டாபுரம்,அரக்கோணம் வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு மஞ்சியம்மன் சுந்தர விநாயகர் திருக்கோயில் |
கீழ்ப்பள்ளிபட்டு, வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு இராமர்பஜனை (ம) செல்லியம்மன் திருக்கோயில் |
சேர்காடு, குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பொன்னியம்மன் தலைமுறை வாழீயம்மன் சோமநாதீஸ்வரர் விநாயகர் திருக்கோயில் |
சேனுரர்,குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு பிடாரி எட்டியம்மன் வசக்கோட்டியம்மன் திருக்கோயில் |
ஏரந்தாங்கல், குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு துர்க்கா நாச்சியம்மன் திருக்கோயில் |
விண்ணம்பள்ளி,ராணிப்பேட்டை வட்டம், வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கெங்கையம்மன் தண்டுமாரியம்மன் திரௌபதியம்மன் திருக்கோயில் |
கலவை,ராணிப்பேட்டை வட்டம்,வேலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வாராஹி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், |
அருள்மிகு வாராஹி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
(அறச்சாலை அம்மன்),
திருக்கோயில் ,
பள்ளூர்,
வழி திருமால்பூர்,
அரக்கோணம் வட்டம்,
வேலுர் மாவட்டம் 631051. |
+91 044-27294200, 9380957562 | காஞ்சி அரக்கோணம் பாதை வெள்ளை கேட் செல்வதற்கு முன் சென்னை வேலூர் பாதையில் வலப்புறம் பிரியும். அந்தப் பாதையில் உள்ள திருமால்பூர் ரயில் நிலையம் அருகே பாடல் பெற்ற தலமும். இத்தலமும் உள்ளது. ரயில் நியைத்திலிருந்து 5 கிமீ. |
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன். மந்திர காளியம்மன் என்கிற அம்மனை மந்திரவாதி ஒருவன் தன் சக்தியினால் கட்டுண்டு கிடக்கச் செய்தான். அப்போது வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு வந்த வாராஹி இந்த ஊர் அம்மனிடம் அடைக்கலம் கேட்க செய்வதறியாது நிலைமையினை அன்னை எடுத்தறைத்தாள். அதே சமயம் இரவு மமதை கொண்ட மந்திரவாதி ஆலயக் கதவை எட்டி உதைக்க தக்கச் சமயமாகக் கருதி மந்திரவாதியினை அழித்து மந்திர காளியினை அவனிடமிருந்து மீட்டாள் வாராஹி. எவ்வாறு லலிதாம்பிகைக்குக் திதி தேவதைகள் பிரதானமோ ஆதி பராசக்திக்கு வாராஹி தளபதியாவார். இதனால் வாகனத்தில் செல்வோருக்கு உறுதுணையாக வருபவள் என நம்பிக்கை உள்ளது. சப்த மாதர்களின் ஐந்தாமலர் இவர். பிரம்மி-பிரமன் அம்சம் மஹேஸ்வரி-மஹேஸ்வரன் அம்சம் கௌமாரி-குமரனின் அம்சம். வைஷ்ணவி-மகாவிஷ்ணு அம்சம் வாராஹி-வராகமூர்த்தி அம்சம் இந்திராணி-இந்திரன் அம்சம் சாமுண்டி-ருத்திரன் அம்சம். வாராஹிக்கு அமைந்த இதர தலங்கள் படப்பை, வாரணாசி, திருவிடந்தை, அரியலூர், குளித்தலை, தஞ்சை, திருப்பன்றிக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), ஹரித்வாரமங்கலம், உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, காளஹஸ்தி, ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி மற்றும் இஞ்சிக்குடி. வாராஹியினை புதன், சனிக்கிழமை, திருவோணம், நவமி, பஞ்சமி அன்று வழிபட எல்லா வளமும் தலைமை ஏற்றுச் சிறக்கும் பலனும் கிட்டும். அஷ்டமி அன்று வழிபட மன திடம், ஆற்றல், வெற்றிகிட்டும், ஏகாதசி, திரியோதசி அன்று வழிபட அச்சம், கவலை அகலும். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு எல்லையம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு எல்லையம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
வெட்டுவானம்,
பள்ளிகொண்டா 635809,
வழி வேலுர்,
வேலுர் மாவட்டம். |
+9104171-240200. | வேலூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ள ஊர் வெட்டுவானம். பள்ளிகொண்டாவிற்கு அருகே உள்ளது. பள்ளிகொண்டா வேலூர் ஆம்பூர் திருப்பத்தூர் பாதையில் 23 கி.மீ. தொலைவில் உள்ளது. |
மேலை வித்தூர், வித்தகபுரி என்பது இவ்வூரின் பழைய பெயர்கள். பரசுராமர் உருவாக்கிய 108 துர்க்கை தலங்களில் ஒன்று. தந்தையின் ஆணைப்படி தாயின் தலையினைக் கொய்துவேறோர் தலையினைப் பொறுத்தி ரேணுகாதேவி அம்மன் ஆன வரலாறு அனைவரும் அறிந்ததே. அவ்வாறு வெட்டுப்பட்ட இடமாதலால் வெட்டுவானம் என்று ஊர்ப்பெயர். ஊரில் ஓடும் புண்ணிய தீர்த்தத்தில் மிதந்து வந்த சிலை மீது பணியாளின் மண்வெட்டிப் பட இரத்தம் பீறிட்டது. ஊரில் உள்ள ஒருவன் அருள் வந்து சாமியாட அம்பாள் தான் இவ்வூரில் எல்லையம்மனாகத் விளங்க விரும்புவதாகக் கூறினாள். |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை (வெள்ளி காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை). |
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில்,
கலவை 632506, வேலூர் மாவட்டம். |
+91 9943583858. | காஞ்சியிலிருந்து கலவைக்கு நேரடிப் பேருந்துகள் உள்ளன. 40கிமீ. கோயம்பேடிலிருந்தும் காலை 4 மணிக்கு முதல் பேருந்தும் மதியம் மற்றும் மாலையில் பேருந்துகள் நேரடியாக உள்ளன. காஞ்சியிலிருந்து வந்தவாசி பாதையில் பெருங்கட்டூர் தாண்டி திருப்பணங்காடு மார்க்கமாக கலவை கூட் ரோடில் 5 கிமீ சென்றால் ஊர். ஆற்காடு மற்றும் வாழைப்பந்தலிலிருந்து வரலாம் கலவை கூட் ரோடு வாழப்பந்தல் 18 கிமீ. |
காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற கலவை அப்பு முதலியாரின் வேண்டுகோளிற்கிணங்க யந்திரம் தந்து அங்காளிக்கு கோயில் எழுப்ப ஆதாரபீடம் அளித்தாக தகவல். ஸ்மசானக் (சுடுகாடு) கொள்ளை மேல்மலையனூரைப் போல் இங்கும் விசேஷம். பக்தர்கள் தங்கள் படங்களை மாட்டி அம்பாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்திகின்றனர். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
|
|