அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில்,
திருப்பத்தூர்,
வேலூர். |
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் தருமராசர் கோயில் தெருவில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. |
பக்தர்களை கண்ணுக்குக் கண்ணாக இருந்து காத்து வருகிறாள். கண்ணணூர் மாரியம்மன். வாயிலில் இரண்டு பெண் காவல் தெய்வங்கள் நிற்க, கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அம்மன் கோயில் பிரகாரங்களில் பால விநாயகர், பால முருகன், ஐயப்பன் வடக்கு நோக்கிய துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விதவிதமாக அலங்காரங்கள் செய்து வழிபாடு நடைபெறுகிறது.
வெங்கடாஜலபதி அலங்காரம் பள்ளி கொண்ட பெருமாள். பத்ரகாளி, நாகப்புற்று அலங்காரம், ராஜ அலங்காரம் மஞ்சள் அலங்காரம் கன்னியாகுமரி, உமா மகேஸ்வரி அலங்காரம் எனக் கடந்த 2009 மார்ச் மாதம் வரை தொடர்ந்து 499 வாரங்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிந்திருக்கிறாள். 500 வது வாரம் வைரப் பாவாடை அலங்காரத்தில் அம்மன் சிறப்பு தரிசனம் தந்திருக்கிறாள். அம்மனது பல்வேறு அலங்காரங்கள் உருவங்கள் பலவாயினும் தெய்வம் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்து விடுகின்றது. ஆடி மாதம் பன்னிரெண்டு நாட்கள் அம்மனுக்கு திருவிழா நடைபெறுகிறது. கண்ணணூர் மாரியம்மனை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும். என்பது பக்தர்களின் நம்பிக்கை. |
|
|