அருள்மிகு வரதராசப்பெருமாள் திருக்கோயில் |
கெங்கபுரம் செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மகாலட்சுமி சமேத லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் |
அந்திலி அரகண்டநல்லூர் போஸ்ட், திருக்கோவிலூர்-605 752,விழுப்புரம் மாவட்டம். |
+91 4153 225238 94867 89200 | விழுப்புரம் திருக்கோவிலூர் பாதையில் உள்ளது. திருக்கோவிலூருக்கு அருகே 2 கி.மீ. தூரத்தில் அரகண்டநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. தக்ஷிண பினாகினி எனப்படும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தெற்கே உள்ள தலம் அந்திலி கிராமத்தில் உள்ளது. |
லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமி தாயார் கிழக்கு திருமுகம் வீற்றிருந்த திருக்கோலம்.
திறக்கும் நேரம்:காலை 6.00 முதல் 12.00,மாலை 2.00 முதல் 7.00 வரை. |
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் |
திருவரங்கம் அஞ்சல்,கடம்பூர் வழி,சங்கராபுரம்-605 802,விழுப்புரம் மாவட்டம். |
+91 94429 83479 | திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை பாதையில் 13 கி.மீ. தூரத்தில் மணலூர்ப்பேட்டை வழியாக சென்றால் இந்த ஊர். ரிஷிவந்தியம் அருகில் உள்ள சிவத்தலம். |
ரங்கநாதர் புஜங்க சயனம், கிழக்கு திருமுகம்.
திறக்கும் நேரம்:காலை6 மணி முதல் இரவு 8 வரை |
அருள்மிகு கஜகிரி வெங்கடேச சீனிவாச பெருமாள் திருக்கோயில் |
சின்ன திருப்பதி
விழுப்புரம் மாவட்டம் |
கள்ளக்குறிச்சிக்கு மேற்கே 25 கி.மீ. |
கஜகிரி. வெள்ளாற்றின் வட பகுதியில் இக்கோயில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட சிறிய மலையின் மீது மூலவர் கஜகிரி வெங்கடேச சீனிவாச பெருமாள் மற்றும் அலமேலு மங்கைத்தாயார். இக்கோயிலை பல்லவ மன்னர்கள், விஜயநகர மன்னர்களும் பல நிலைகளில் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதமும், வேடர்பாரி உற்சவமும் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. |
அருள்மிகு வைகுண்டவாசன் திருக்கோயில் |
திருவெண்ணெய்நல்லூர்
விழுப்புரம் மாவட்டம் |
திருக்கோயிலூரிலிருந்து தென்கிழக்காக 25 கி.மீ. |
பெண்ணை யாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரபளவில் இரண்டு பிராகாரங்களுடன் 50 அடி உயர 5 நிலை இராஜகோபுரத்துடன் மூலவர் வைகுண்தவாசன் மற்றும் திருமகள், பூமிதேவியுடன் காட்சியளிக்கிறார். தாயார் ஜனக வல்லித்தாயார் தனிச் சன்னதியில் உள்ளார். பிராகாரத்தில் ஆண்டாள், விஷ்வக்சேனர், வேணு கோபாலன் ஆஞ்சநேயர், சாண்டில்ய முனிவர் உள்ளனர். சாண்டில்யமுனிவர் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றத் தலம். இக்கோயில் அகோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தினமும் 2 கால பூஜை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. |
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் |
தேவபந்தலம்
விழுப்புரம் மாவட்டம் |
கள்ளக்குறிச்சிக்கு வடக்கே 18 கி.மீ. |
பாண்டவவனம், மணிமுத்தாற்றின் கரையில் இக்கோயில் 134 ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிராகாரங்களுடன் மூலவர் பார்த்தசாரதி நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சாட்டையுடன் நான்கு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பாண்டவர்கள் இத்தலத்தில் சிறிது காலம் மறைந்து வாழ்ந்து வந்த காலத்தில் இத்தலத்தில் உள்ள பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டு வந்தாகவும், திரௌபதிக்கு அட்சய பாத்திரத்தை இத்தல இறைவன் வழங்கியதாகவும் இத்தல வரலாறு. தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. பெருமாளின் நெற்றியில் மஞ்சள் நிற நாமம் தினமும் சாத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. |
அருள்மிகு லக்ஷ்மிநாராயணப்பெருமாள் திருக்கோயில் |
வளவனூர்
விழுப்புரம் மாவட்டம் |
விழுப்புரத்திலிருந்து கிழக்கே 13 கி.மீ. |
புரவுடதேச மகாராஜபுரம். பெண்ணையாற்றின் வடபகுதியில் இவ்வூரின் தென்மேற்கே 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இறைவன் லட்சுமியை இடது தொடையில் கொண்டு அணைத்தவாறு ÷மற்கைகளில் ஆழியும், சங்கும் ஏந்தி கீழ்வலக்கையில் அருள் பாலிக்கும் நிலையில் மூலவரின் சிற்பம் வடிவத்தில் காட்சியளிக்கிறார். தாயார் வேதவல்லித்தாயார் கோயிலின் திருச்சுற்றின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். தாயார் சன்னதியில் அருகில் துர்க்கை சன்னதி உள்ளது. பிராகாரத்தில் விகனஸர் சன்னதியில், விகனஸர் உயர்ந்த பீடத்தின் மீது நான்கு கைகளுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கைகள் இரண்டும் சக்கரத்தையும்,சங்கையும் கொண்டு கீழ் வலக்கை அபயமுத்திரை மற்றும் வரத முத்திரையிலும் அமைந்துள்ளன. தொடக்க காலத்தில் இக்கோயில் சோழ மன்னர்களாலும், பின் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்து வந்த பாளையக்காரர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்கோயிலில் வைகானஸ ஆகமப் முறைப்படி இரு கால பூஜை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் |
விளம்பார்
விழுப்புரம் மாவட்டம் |
கள்ளக்குறிச்சிக்கு தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் ஆதிகேசவபெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தனிச்சன்னதியில் கோகனாதவல்லித்தாயார். இக்கோயில் 800 வருட முற்பட்ட திருக்கோயில். இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு வேட்டவராயப் பெருமாள் மற்றும் கோதண்டராம சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு வேட்டவராயப் பெருமாள் மற்றும் கோதண்டராம சுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்,
ஆலத்தூர் வழி மரக்காணம்,
மற்றும் எஸ்.ஒ.
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் 604303.
|
திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் என்னும் ஊரில் வேட்டவராயப் பெருமாள் மற்றும் கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளது. இது மரக்காணத்திலிருந்து சூணாம்பேடு வழியாக சென்னை செல்லும் பேருந்து தடத்தில் 10 கிமீல் உள்ளது. |
ஆதி காலத்தில் இத்தலத்தில் பெருங்காட்டில் கவுண்டின்ய முனிவர் கடும் தவம் செய்த போது இவ்வூருக்கு வேட்டை மார்க்கமாக வந்த திருப்பதி வேங்கடவன் அவருக்கு காட்சி தந்து பின் இவ்வூர் பிடித்துப்போக இங்கேயே தங்க திருவுளம் கொண்டதாகவும் வரலாறு. 6 கல்வெட்டுகள் கொண்ட இந்தக் கோயில் பிற்காலச் சோழர் மற்றும் விஜய நகரக் காலத்தியது. கல்வெட்டில் தற்கால கனகவல்லி தாயார் பெயர் கோமளவல்லி நாச்சியார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்டை வெங்கடராய பெருமாள் கனகவல்லி கிழக்கு திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். ஒரு கால பூஜை பட்டாச்சாரியார் மரக்காணத்திலிருந்து வந்து போகிறார். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு திருவிருந்த பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு திருவிருந்த பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
உப்புவேலூர் 607003,
வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம். |
+91 9003033060 | திண்டிவனத்திலிருந்து 26கிமீ தொலைவில் உப்புவேலூர் கிராமத்தில் திருவிருந்த பெருமாள் கோயில், பிரசன்ன நாயகி உடனுறை திருமுகிலீஸ்வர சுவாமி, திரவுபதியம்மன் மற்றும் எல்லை மாரியம்மன் கோயில்கள் உள்ளன. |
திருவருந்த பெருமாளை வளர்பிறை ஏகாதசியில் வழிபட கடன் தொல்லை நீங்கும் எல்லை மாரியம்மனை வெள்ளிக்கிழமை வழிபட இன்னல்கள் அகலும். சித்திரை பிறப்பு, வைகாசிப் பெருவிழா, ஆடி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மற்றும் பங்குனி உத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவன் சன்னிதி மேற்கு பார்த்தும் அம்பாள் சன்னிதி தெற்கு பார்த்தும் உள்ளது. திருவிருந்த பெருமாள் திரவுபதி அம்மன் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம் ஒரு கால பூஜை வருவதற்கு முன் தகவல் தெரிவித்து சேவிக்கலாம். |
|
|