அருள்மிகு பக்தகோலாகல கிருஷ்ணன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பக்தகோலாகல கிருஷ்ணன் தேவஸ்தானம் திருக்கோயில்,
பரனூர்,
வழி திருக்கோயிலூர்,
திருக்கோயிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் 605757. |
திருக்கோயிலூருக்கு அருகே உள்ளது. |
கிருஷ்ணப் பிரேமியின் சொந்த ஊர். அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் இவரால் கட்டப்பட்ட கோயில் இது. தியாகராஜ ஸ்வாமிகள் எவ்வாறு ராமபிரானுக்கு உற்சவ சம்பிரதாய கிருதிகளை இயற்றினாரோ அவ்வாறே இவர் பக்த கோலாகலனுக்கு பல கிருதிகளை இயற்றியுள்ளார். இன்றும் அவை தினமும் இங்கு இசைக்கப்படுகின்றன. வேத பாடசாலையும் கோசாலையும் உள்ள இங்கு பிரதி ஏகாதசி அன்று அண்ணா விஜயம் செய்து பூஜைகள் நடத்துகிறார். மாலையில் பிரவசனமும் திவ்ய நாம சங்கீர்த்தனமும் நடைபெறும். ராமநவமி, கிருஷ்ணாஷ்டமி, வசந்தோற்சவம், நவராத்திரி உற்சவம், கீர்த்தனாவளி உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. இவர் பல கோயில்களுக்கு திருப்பணி செய்து புணர் நிர்மாணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்த கோலாகல கிருஷ்ணன் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். பரனூரின் கீழ் ப்ரேம மாதூரி குஞ்சரம், பிருந்தாவனம் மதுரா, உ.பி. மாநிலம் கூரத்தாழ்வார் பஜனாஸ்ரமம் அழகர் கோயில் மதுரை, கிருஷ்ண பஜனாஸ்ரமம், மேல்கோட்டை, (கர்நாடகா) பாண்டுரங்கன் கோயில், திருச்சாநல்லூர் (செங்கணூர் கேரளா) ஆகிய அமைப்புகள் உள்ளன. |
பூஜை நேரம்: - |
|
|